Published:Updated:

பங்குச் சந்தை இறக்கம்... என்ன காரணம்..? அடுத்து என்ன நடக்கும்?

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குச் சந்தை

S H A R E M A R K E T

ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர்

சென்செக்ஸ் 50000 புள்ளிகளைத் தொட்டு இறங்கியிருக்கிறது. 2020 மார்ச் மாதத்தில் சென்செக்ஸ் 25500 புள்ளிகள் என்ற நிலையிலிருந்தது. அடுத்த 10 மாதங்களில் 50184 புள்ளி களுக்கு ஏற்றம் கண்டு இருக்கிறது.

ரெஜி தாமஸ் 
பங்குச் சந்தை 
நிபுணர்
ரெஜி தாமஸ் பங்குச் சந்தை நிபுணர்

2021-ம் ஆண்டு மிகுந்த உற்சாகத் துடன் தொடங்கியிருக்கிறது. முதலீட்டாளர்களும் இத்தகைய வேகமான ஏற்றத்தை இதுவரை வரலாற்றில் கண்டிருக்க முடியாது. அதே சமயம், ஜனவரி 21-ம் தேதி சென்செக்ஸ் அதன் அதி உச்சத்தை பதிவு செய்த அன்றிலிருந்து இறக்கத்தை நோக்கி நகரத் தொடங்கி யிருக்கிறது. எனவே, முதலீட்டாளர்கள் கவலைகொள்ளத் தொடங்கி இருப்பதுடன், மூன்று கேள்விகளையும் எழுப்புகிறார்கள்.

1. சென்செக்ஸ் 50000 புள்ளி களிலிருந்து இறக்கம் காண ஆரம்பித்திருக்கிறது. இனி என்ன நடக்கும்?

2. கிடைத்த லாபத்தை இப்போது எடுக்கலாமா?

3. புதிய முதலீடு செய்ய பணத்தை வைத்துக்கொண்டு காத்திருக்க வேண்டுமா, மீண்டும் சந்தை ஏற்றம் காணுமா..?

இந்த மூன்று கேள்விக்கான பதில்களை சில விஷயங்களைப் புரிந்துகொள்வதன் மூலம் பெறலாம்.

1. சந்தையில் இனி என்ன நடக்கும்?

இந்த அழுத்தமான கேள்விக்கான பதிலைப் பெறுவதற்கு நாம் சந்தை ஒவ்வொரு முறையும் வரலாற்று உச்சங்களை எட்டும்போது எப்படியான செயல்பாடுகளுக்கு உள்ளாகி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதன் மூலம் பதிலை நாம் அடையலாம். பங்குச் சந்தை இறக்கத்துக்கு உள்ளாகக்கூடியது மற்றும் சந்தை செயல்பாட்டாளர்களின் நடவடிக்கை சார்ந்து அதன் போக்கு மாறக்கூடியது என்பது உலக சந்தைகள் அனைத்துக்குமே பொதுவானது.

சுழல் வடிவிலான படிக்கட்டுகளில் ஏறும்போது நாம் சில இடங்களில் மூச்சு வாங்குவதற்காக நிற்பதுண்டு. அதுபோலத்தான் பங்குச் சந்தையும் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிற தருணங்களுக்கு உள்ளாவது இயல்பு. இதை சந்தையில், இறக்கம் என்றோ, லாபத்தை எடுப்பது என்றோ குறிப்பிடலாம். பங்குச் சந்தை தற்போது இத்தகைய ஆசுவாசத்துக்கான தருணத்துக்கு உள்ளாகியிருக்கிறது. இதைப் புரிந்து கொண்டால், நம்மால் சந்தையின் போக்கு குறித்த ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியும்.

சந்தைகளின் சார்ட்டுகளை ஆராயும்போது, பங்குச் சந்தை தற்போதைய போக்கில் 44900 புள்ளிகள் என்ற நிலைக்கு நகர வாய்ப்புள்ளது. முதல் ஸ்டாப்லாஸ் 41700 என்ற நிலையில் இருக்கிறது. எனவே, இந்த நகர்வை லாபத்தை எடுப்பதற்கான நடவடிக்கையாகப் புரிந்துகொள்ளலாம்.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

2. தற்போது லாபத்தை எடுக்கலாமா, பணத்தை வைத்துக் காத்திருக்கலாமா?

கடந்த வருடம் ஓர் அறிக்கையை காண நேர்ந்தது. அதில் பங்குச் சந்தையிலிருந்து எவ்வளவு காலம் நாம் விலகி இருக்கிறோமோ, அந்த அளவுக்கு நம்முடைய நஷ்டமும் அதிகமாக இருக்கும் என்று அதில் குறிப்பிட்டிருந்தது. இதை நிகழ்நேர ஆராய்ச்சியும் உறுதி செய்து இருக்கிறது. எனவே, இந்தக் கேள்வி யைப் பொறுத்தவரை, பங்குச் சந்தையின் பாடங்களை உள்வாங்கிக் கொண்டு, அதை நம்முடைய அனாலிடிக்ஸ் முறைகளில் பொருத்திப் பார்க்க வேண்டும்.

மூன்றாம் காலாண்டு அடிப்படை யிலான போர்ட்ஃபோலியோ முடிவுகளும் அதற்கு முந்தைய லாபத்தை எடுக்கும் நடவடிக்கையும் பங்குச் சந்தையின் போக்கு ஏற்ற இறக்கத்துக்கு உள்ளாகக் காரணமாக இருக்கும் என்று தெரிகிறது. மேலும், மத்திய பட்ஜெட் குறித்த எதிர் பார்ப்புகள், அடிப்படை பொருளா தாரப் பிரச்னைகள் உதாரணமாக போராட்டங்கள் எதிர்ப்புகள் போன்றவை முதலீட்டாளர்களை ஒரு விளிம்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கான சூழலை அதிகப்படுத்து கின்றன. எனவே, பங்குச் சந்தையில் தாமதமாக நுழைந்தால் அதாவது, சென்செக்ஸ் 45000 புள்ளிகள் என்ற நிலையில் நுழைந்தால் அது லாபத்தை எடுப்பதற்கான தீவிர செயல்பாடாக இருக்கும். முதலீட்டாளர்கள் யாரெல்லாம் குறைந்த விலைகளில், இறக்கத்தில் முதலீடு செய்தார்களோ, அவர்கள் தற்போதைய நிலையைச் சமாளித்து, போர்ட்ஃபோலி யோக்களை சிறப்பாகக் கட்டமைத்து, அதன்மூலம் தரமான பங்குகளில் முதலீடு செய்து இறக்கத்தினால் உண்டாகும் இழப்பு களிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும்.

3. சந்தை மீண்டும் ஏற்றம் காணுமா?

துரதிஷ்டவசமாக இந்திய முதலீட்டா ளர்கள் பங்கு ச்சந்தை இறக்கம் காண்பதை விரும்புவதே இல்லை. ஏனெனில், பெரும்பாலான நேரங்களில் நாம் எதிர் திசையிலும் பணம் ஈட்ட முடியும் என்பதை மறந்து விடுகிறோம். ஆனால், அதிகரிக்கும் லிக்விடிட்டி, குறைவான வட்டி விகிதம் மற்றும் கொரோனா பேரழிவைக் கையாண்ட விதம், இழந்த பொருளாதாரத்தை மீண்டும் சிறப்பான வளர்ச்சியை நோக்கி நகர்த்த எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் ஆகியவை இன்னமும் பங்குச் சந்தையின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் காரணங் களாக இருக்கின்றன.

மேலும் சமீபத்திய சர்வதேச நிதியம் (ஐ.எம்.எஃப்) கணிப்பில் இந்திய பொருளாதாரம் 2021-ல் 11.5% வளர்ச்சி காணும் எனக் குறிப்பிட்டுள்ளது. இத்தகைய இரண்டு இலக்க வளர்ச்சி யானது இந்திய பொருளாதாரத்தை சர்வதேச அளவில் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடாக அடையாளப் படுத்த இருக்கிறது. மேலும், அறிக்கையானது இந்திய அரசு கொண்டு வந்த பல்வேறு கொள்கை முடிவுகளையும், பொருளாதாரத்தை சீர்படுத்துவதற்கான முயற்சிகளையும் பாராட்டி இருக்கிறது. இவை பொருளாதாரம் நெருக்கடியைக் கடந்து ஏற்றம் கண்டதற்கு முக்கியக் காரணிகளாக இருப்பதை அறிக்கையில் தெளிவுபடுத்தி யுள்ளது.

எனவே, இந்தக் கேள்விக்கு பதில், தற்போது சென்செக்ஸ் 50000 புள்ளிகள் என்ற நிலையில் இருந்து சுமார் 46000 புள்ளிகளுக்கு இறங்கி இருப்பது, சமநிலைக்குக் கொண்டுவரும் போக்காகவே பார்க்கலாம். தவிர, வளரும் சந்தை முதலீட்டாளர்களையும், முதலீடுகளையும் ஈர்க்கவும் செய்யும். எனில், தற்போது சர்வதேச முதலீடுகளுக்கான இலக்காக எந்த நாடு இருக்கும் என்று கேட்டால், எந்த நாடு வளர்ச்சியின் போக்கில் வேகமாக நகர்கிறதோ, அந்த நாடுதான் என்றே சொல்லலாம். இப்போது உங்களுக்குப் பதிலும் தெரிந்திருக்கும்.

எனவே, நம்பிக்கையுடன் இருங்கள், புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். பங்குச் சந்தை வரலாற்று உச்சத்தை எட்டி இருக்கிறது என்பதாலேயே மீண்டுமொரு உச்சத்தை அடைய முடியாது என்று அர்த்தம் இல்லை. இறக்கத்தின்போது சரியான பங்குகளை அடையாளம் கண்டு, முதலீடு செய்து போர்ட் ஃபோலியோவை சமநிலை செய்வதற்கு இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பங்குகளின் செயல்பாடுகள் மீது கண்காணிப்புடன் இருங்கள். அவற்றின் காலாண்டு நிதிநிலை முடிவுகளைக் கவனியுங்கள். உங்களுடைய உணர்வுபூர்வமான முடிவுகளைக் கவனமாகக் கையாளுங்கள். இப்படிச் செய்தால், உங்களுடைய முதலீடு சந்தையின் ஏற்ற இறக்கங்களைத் தாண்டி வளர்ச்சி காணும்!

பிட்ஸ்

ற்கெனவே சிறையில் இருக்கும் யெஸ் பேங்கின் ரானா கபூர் மீது மேலும் குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்படும் நிலை உருவாகி உள்ளது. ரூ.4,300 கோடி மோசடி செய்ததாக அவர் மீது இப்போது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது!