Published:Updated:

கார்வியின் பங்கு வர்த்தக மோசடி... வாடிக்கையாளர்கள் செய்யவேண்டியது என்ன?

கார்வி நிறுவனம் செய்துள்ள பங்கு வர்த்தக மோசடியைக் கடுமையாக கண்டித்த செபி, கார்வி நிறுவனம் புதிய வர்த்தகத்தில் ஈடுபடுவதைத் தடை செய்தது.

கார்வி
கார்வி

கார்வி நிறுவனத்துக்கு மொத்தம் 12 லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் மூன்று லட்சம் வாடிக்கையாளர்கள் மட்டும் ஆக்டிவாக இருக்கிறார்கள். அவர்களில் சராசரியாக 20,000-25,000 வாடிக்கையாளர்கள் தினசரிப் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுகிறார்கள். இவர்களில் ஆன்லைன் மூலமாக வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் எண்ணிக்கை 15,000-18,000-ஆக உள்ளது.

இந்த நிலையில், பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் தரகு நிறுவனங்கள்மீது முதலீட்டாளர்களுக்கு அச்சமும் சந்தேகமும் எழக்கூடிய சூழலைத் தற்போது கார்வி நிறுவனம் ஏற்படுத்தியிருக்கிறது. ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டிருக்கும் கார்வி நிறுவனம் செய்துள்ள பங்கு வர்த்தக மோசடியைக் கடுமையாக கண்டித்த செபி, கார்வி நிறுவனம் புதிய வர்த்தகத்தில் ஈடுபடுவதைத் தடை செய்தது. அத்துடன், அடமானம் வைக்கப்பட்டிருக்கும் முதலீட்டாளர்களின் பங்குகளைத் திரும்ப ஒப்படைக்கும்படி அடமானம் பெற்றுள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.

சரி, "கார்வியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இனி செய்ய வேண்டியது என்ன?" என்று பங்குச் சந்தை நிபுணர் வ.நாகப்பனிடம் கேட்டபோது, "முதலில் கார்வி நிறுவனம் நமக்கு இறுதியாகத் தரப்பட்ட ஸ்டேட்மென்ட் ஆஃப் அக்கவுன்ட்டைச் சரிபார்க்க வேண்டும். அதில் நாம் வாங்காத புதிய பங்குகள் வரவு வைக்கப்பட்டிருக்கின்றனவா அல்லது நாம் வாங்கிவைத்திருக்கும் பங்குகள் கழிக்கப்பட்டிருக்கின்றனவா என்பதை வங்கிக் கணக்குடன் அல்லது டீமேட் கணக்குடன் ஒப்பிட்டுச் சரிபார்க்க வேண்டும்.

இரண்டாவதாக, பங்கு வாங்கியதற்காக கார்வி நிறுவனத்துக்கு செக் மூலம் நாம் தந்த பணம் நமது கணக்கிலிருந்து கழிக்கப் பட்டிருக்கிறதா, புதிய பங்குகள் நமது டீமேட் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கின்றனவா என்பதைப் புதிதாகப் பங்குகள் வாங்கும் போதெல்லாம் கவனிக்க வேண்டும். இதேபோல நம்மிடமிருந்த பங்குகளை விற்றதன் காரணமாக நமக்குக் கிடைக்க வேண்டிய பணம் நம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறதா, நாம் விற்ற பங்குகள் நமது டீமேட் கணக்கிலிருந்து கழிக்கப்பட்டிருக்கின்றனவா என்பதைப் பங்குகள் விற்கும்போதெல்லாம் கவனிக்க வேண்டும்.

ஒருவேளை நம் புகாரை கார்வி தரப்பிலிருந்து ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தால், இன்டர்னல் கிரீவன்ஸ் ரெசல்யூஷன் பேனல் (Internal Grievance Reesolution Panel) என்ற அமைப்பு இருதரப்பு ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தும்.

இவை அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் வரவு செலவு கணக்கைப் பார்த்து, நம் கணக்கில் இருக்க வேண்டிய பணம் சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இதில் ஏதேனும் தவறு இருந்தால், அதை முறையாகச் சுட்டிக்காட்டி, கார்வி நிறுவனத்தின் இ-மெயில் ஐடி-க்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். நம் மின்னஞ்சலைப் பார்த்த பிறகு, புரோக்கிங் நிறுவனம் நம் கணக்கில் பணத்தையோ, பங்கையோ வைக்கிறதா என்று பார்க்க வேண்டும். இதற்கு ஒன்றிரண்டு வாரங்கள் கால அவகாசம் தரலாம். அதற்குப் பிறகும் நம் தவற்றைச் சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமலிருந்தால், மீண்டும் ஒரு முறை நினைவுறுத்தல் மெயில் அனுப்ப வேண்டும். அப்படியும் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் செபியின் scores.gov.in என்ற இணையதளத்தில் ரெஜிஸ்டர் செய்த பின், நம் புகாரை அளிக்க வேண்டும். விரிவான கட்டுரைக்கு க்ளிக் செய்க... http://bit.ly/2N498Dc

நம் புகாரை செபி பெற்றுக்கொண்டு, அதை கார்வி நிறுவனத்துக்கு அனுப்பும். அதற்கு கார்வி தரப்பிலிருந்து பதில் தரப்படும். அந்த பதிலில் புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படாதது தெரியவந்தால், ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற கேள்வியை செபி எழுப்பும். அதற்கான பதிலை கார்வி நிறுவனம் சொல்லித்தான் ஆக வேண்டும்.

இந்த முறையில் நமக்கான தீர்வு கிடைக்காத பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கையில் இறங்கலாம். அது நீண்டகாலம் பிடிக்கக்கூடிய வழிமுறை. scores.gov.in இணையதளத்தில் புகாரளிக்கும்போதே, நமது பங்கு பரிவர்த்தனை நடைபெற்ற பங்குச் சந்தை எதுவோ அதிலும் (என்.எஸ்.இ அல்லது பி.எஸ்.இ) புகாரைப் பதிவு செய்துவிடுவது நல்லது.

பங்குச் சந்தையிலும் புகாரைப் பதிவு செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. இந்த முறைகேடு தொடர்பான விசாரணை நடந்து முடிந்து, கார்வியிடமிருந்து பணத்தைப் பெற்று, முதலீட்டாளர்களுக்குப் பிரித்துத் தரும் சூழல் வரும்போது யாரெல்லாம் புகார் அளித்திருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் முதலில் பணம் திரும்பக் கிடைக்கும்.

கார்வியின் பங்கு வர்த்தக மோசடி... வாடிக்கையாளர்கள் செய்யவேண்டியது என்ன?

ஒருவேளை நம் புகாரை கார்வி தரப்பிலிருந்து ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தால், இன்டர்னல் கிரீவன்ஸ் ரெசல்யூஷன் பேனல் (Internal Grievance Reesolution Panel) என்ற அமைப்பு இருதரப்பு ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தும். அதன் முடிவில் தீர்ப்பளிப்பார்கள். எனவே, நம் புகாரை மறக்காமல் பதிவுசெய்வது அவசியம்.

இந்தப் பங்கு வர்த்தகத்தைத் தொடர விரும்புபவர்கள், வேறு ஒரு தரகு நிறுவனத்தில் டீமேட் அக்கவுன்ட்டை அதே பெயரில் திறக்க வேண்டும். பிறகு 'கிளையன்ட் மாஸ்டர்' என்ற ஆவணத்தைப் பெற வேண்டும்.

கார்வியிலுள்ள டீமேட் கணக்கை 'குளோஸ்' செய்வதற்கான விண்ணப்பப் படிவத்தை வாங்கி நிரப்ப வேண்டும். அத்துடன், மேலே சொன்ன கிளையன்ட் மாஸ்டர் மற்றும் பயன்படுத்தப்படாத மீதமுள்ள டெலிவரி 'இன்ஸ்ட்ரகஷன் ஸ்லிப்' ஆகியவற்றை கார்வியிடம் சமர்ப்பிக்க வேண்டும். கார்வி நம் கணக்கைக் குளோஸ் செய்து புதிதாகத் திறந்துள்ள கணக்குக்கு மாற்றிவிடும்." - கார்வி நிறுவனத்தில் டீமேட் கணக்கு வைத்திருப்பவர்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் தெளிவாகவும் விளக்கமாகவும் எடுத்துச் சொன்னார் வ.நாகப்பன்.

சரி, கார்வி நிறுவனம் செய்த பங்கு வர்த்தக மோசடியின் பின்னணி என்ன? அது எப்படி கண்டறியப்பட்டது? - முழுமையான அலசல் கட்டுரையை நாணயம் விகடன் இதழில் வாசிக்க > https://www.vikatan.com/news/share-market/issues-in-karvy-things-to-remember

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9