கொரோனா வைரஸ் (கோவிட்-19) பாதிப்பால், உலக மற்றும் இந்தியப் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துவருகின்றன.

கூடவே, தங்கத்தின் விலையும் வேகமாக இறங்கிவருகிறது. இந்த நிலையில், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து `சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட்’ நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி சுனில் சுப்ரமணியம் நமக்களித்த சிறப்புப் பேட்டி...

`கோவிட் -19’ வைரஸ் பாதிப்பால் பொருளாதாரம், பங்குச் சந்தை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றனவே?

‘‘ `கோவிட்-19’ வைரஸால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை மூன்று விதமாகப் பார்க்கலாம். முதல் பாதிப்பு, மருத்துவரீதியானது, எத்தனை பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது இந்த வகை. அடுத்தது, உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு. மூன்றாவது, பங்குச் சந்தைகளில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி. இந்த வைரஸ் பிரச்னை ஆரம்பித்தது சீனாவில். அது வேகமாகப் பரவ ஆரம்பித்த நிலையில், சீனாவின் கட்டுப்பாடான நடவடிக்கைகளால் அது மட்டுப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், சீனாவுக்கு வெளியே இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், அமெரிக்கா எனப் பரவியிருக்கிறது. இதனால் உலகமெங்கும் பீதி ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்க ஃபெடரல் 1.5 ட்ரில்லியன் டாலரை அமெரிக்க நிதி அமைப்புக்குள் புதிதாக உள்ளே செலுத்தியிருக்கிறது. இது பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்று தெரியாமலேயே இந்த அளவுக்குச் சந்தையை இறக்கியிருக்கிறார்களென்றால் ஏதோ ரகசியம் இருக்கிறது. `உலக அளவில் நிலையற்ற தன்மை நிலவுகிறது’ என்ற கணிப்பால், சந்தை தவறான நிலையில் இறங்கிக்கொண்டிருக்கிறது.”

இந்த நோய் வராமல் தடுக்க அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகளால் பொருளாதாரத்தில் என்னென்ன விளைவுகள் ஏற்படும்?

‘‘இது தொடர்பாக நமது மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளை நிச்சயம் பாராட்டலாம். ஆரம்பத்திலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதைத் தடுத்திருக்கிறார்கள். சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால்களில் அதிக அளவில் மக்களைக் கூடவிடாமல் தடுத்திருக்கிறார்கள். மத்திய அரசு கொரோனாவை `பேரிடர்’ என்று அறிவித்து மக்களை உஷார்ப்படுத்தியிருப்பதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 125 என்ற அளவில் இருக்கிறது. பொருளாதார பாதிப்பு என்கிறபோது, இதர நாடுகளுடன் ஒப்பிட்டால், இந்தியாவில் அந்த அளவுக்கு அதிகமாக இல்லை. சீனாவிலிருந்து இந்தியா டி.வி., மருந்துப் பொருள்கள் போன்றவற்றை இறக்குமதி செய்துவந்தது. சுற்றுலா, பயணம், ஓட்டல் போன்ற துறைகள் பாதிக்கப்பட்டிருக் கின்றன.’’

`கோவிட்-19’ பாதிப்பு வந்த பிறகு உலகப் பொருளாதாரமும் இந்தியப் பொருளாதாரமும் எப்படி இருக்கின்றன?

‘‘ `2019-20-ம் ஆண்டு உலக ஜி.டி.பி 3.5 சதவிகிதமாக இருக்கும்’ என மதிப்பிடப்பட்டிருப்பது 2.5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால், உலக அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் பெட்ரோலிய பொருள்களின் தேவை கணிசமாகக் குறைந்திருக்கிறது. விளைவு, கச்சா எண்ணெய் விலை 60 டாலரிருந்து 30 டாலராக வீழ்ச்சிகண்டிருக்கிறது. இந்தியா அதன் பெட்ரோலியப் பொருள்கள் தேவையில் சுமார் 85 சதவிகிதத்தை இறக்குமதி மூலம் ஈடுசெய்து வருகிறது. அந்த வகையில், கச்சா எண்ணெய் விலை இந்த அளவுக்கு இறங்கியிருப்பதால் ஆயில் சார்ந்திருக்கும் பெயின்ட், கார், டயர், சோப் போன்றவற்றின் விலை குறையும். பெட்ரோலியப் பொருள்களின் விலை இறங்கினால், நம் நாட்டில் பணவீக்க விகிதம் குறையும். அதைத் தொடர்ந்து ஆர்.பி.ஐ வட்டியைக் குறைக்க வாய்ப்பிருக்கிறது. மேலும், கச்சா எண்ணெய் விலைக் குறைவை மத்திய அரசு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, பெட்ரோலியப் பொருள்களுக்கான உற்பத்தி வரியை அதிகரித்து, அதன் வருமானத்தைக் கூட்டியிருக்கிறது. இந்தியாவின் ஏற்றுமதி என்பது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(ஜி.டி.பி) கிட்டத்தட்ட 20 சதவிகிதமாக உள்ளது. நம் பொருளாதாரத்தின் பெரும் பகுதி உள்நாட்டைச் சார்ந்திருப்பதால், உலகப் பொருளாதாரத்தின் மந்தநிலை இந்தியாவைப் பெரிதாக பாதிக்காது.”

இந்தியப் பங்குச் சந்தை இந்த அளவுக்கு அதிகமாக இறங்க என்ன காரணம்?

‘‘வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பயத்தில் இருக்கிறார்கள். அவர்கள் அதிக அளவில் பங்குகளை விற்றுவிட்டு இந்தியச் சந்தைகளிலிருந்து வெளியேறுவதால், சந்தை இப்படி அதிரடியாக இறங்கியிருக்கிறது. அதே நேரத்தில், உள்நாட்டைச் சேர்ந்த மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் காப்பீடு நிறுவனங்கள் அதிக அளவில் தொடர்ந்து முதலீடு செய்துவருகின்றன. இந்தியப் பங்குச் சந்தை தற்போது அதிக அளவில் இறங்கி ஓவர் ரியாக்ஷன் காட்டியிருக்கிறது. விரைவில், நிலைமை சீராகும்போது எஃப்.ஐ.ஐ முதலீடு மீண்டும் இந்தியப் பங்குச் சந்தைக்குள் பாயும். அப்போது இந்தியப் பங்குச் சந்தையின் செயல்பாடு வேகமெடுக்கும்.”

கொரோனா வைரஸ் பாதிப்பால், இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி பாதிக்கப்படுமா?

‘‘உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் பெரிய பாதிப்பு இருக்காது. ஏற்கெனவே சொன்னதுபோல், இந்தியா ஏற்றுமதியை நம்பியிருப்பது குறைவு என்பதால், நமக்கு அதிக பாதிப்பு இல்லை. மேலும், கச்சா எண்ணெய் விலை குறைவால், அது சார்ந்த நிறுவனங்களின் லாபம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. `இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி 6.5 சதவிகிதமாக இருக்கும்’ என மதிப்பிடப்பட்டிருந்தது, 6 - 5.5 சதவிகிதமாகக் குறையலாம்.’’

நடப்பு 2019-20 நிதியாண்டில் கார்ப்பரேட் நிறுவனங்களின் நிதிநிலைச் செயல்பாடு எப்படியிருக்கும்?

‘‘நிச்சயமாக பாதிப்புக்குள்ளாகும். இந்த பாதிப்பு 2020-12-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் அதிகமாக இருக்கலாம்.”

பங்குச் சந்தை இறங்கினால், தங்கம் விலை ஏற்றம் காணும். இப்போது தங்கத்தின் விலை இறங்குகிறதே!

‘‘தங்கத்தில் மேற்கொள்ளப்படும் முதலீட்டை, `பாதுகாப்பான முதலீடு’ என்பார்கள். அது பணவீக்க விகிதத்தைச் சமாளிக்க உதவும். தற்போதைய நிலையில், தங்கத்தின் விலை ஏற்கெனவே உச்சத்துக்குச் சென்றுவிட்டது. மேலும், தங்கத்துக்கான தேவை குறைந்துவிட்டது. அதனால்தான் தங்கத்தின் விலை மேற்கொண்டு ஏறாமல், இறங்கிவருகிறது.’’

தற்போதைய நிலையில் சிறு முதலீட்டாளர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன?

‘‘சிறு முதலீட்டாளர்களின் பங்கு முதலீடு மற்றும் பங்கு சார்ந்த ஃபண்டுகளின் முதலீட்டின் மதிப்பு கணிசமான அளவுக்குக் குறைந்திருக்கும். அதனால் பயத்தில் பங்குகளையோ, பங்கு சார்ந்த ஃபண்டுகளையோ விற்க வேண்டாம்.

ஏற்கெனவே மேற்கொண்டு வரும் எஸ்.ஐ.பி முறையிலான முதலீட்டை நிறுத்தாமல் தொடருங்கள். முடிந்தால் கூடுதலாக முதலீடு செய்யுங்கள்.

சந்தை கணிசமாக இறங்கியிருக்கும் இந்தச் சமயத்தில் சிறு முதலீட்டாளர்கள் துணிந்து முதலீடு செய்யத் தொடங்கலாம். பங்குச் சந்தையிலும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலும் சிறு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டைத் தொய்வில்லாமல் மேற்கொண்டு வருகிறார்கள். சந்தையின் இரைச்சலை காதில் வாங்கிக்கொள்ளாமல், அமைதியாக எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடர்வது நல்லது.”