Published:Updated:

ரிலையன்ஸ் உரிமைப் பங்குகள்... முதலீட்டாளர்களுக்கு என்ன பயன்?

ரிலையன்ஸ்
உரிமைப் 
பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
News
ரிலையன்ஸ் உரிமைப் பங்குகள்

ரிலையன்ஸ் தனது உரிமைப் பங்கின் விலையை மூன்று தவணைகளில் செலுத்தலாம் என்று அறிவித்து, ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

வணை முறையில் டி.வி., ஏசி போன்ற பொருள்களை வாங்குவதைப்போல, பங்குகளையும் தவணை முறையில் வாங்கும் வாய்ப்பை முதன்முறையாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் சில்லறை முதலீட்டாளர்களுக்கு வழங்கியிருக்கிறது.

மே 14-ம் தேதி வரை ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வைத்திருந்தவர்களுக்கு உரிமைப் பங்குகளை அவர்களின் டீமேட் கணக்கில், மே 22-ம் தேதி அன்று `ரிலையன்ஸ் ரைட்ஸ் என்டைட்டில்மென்ட்’ (Reliance Rights Entitlement) என்ற பெயரில் வரவுவைத்து, அவற்றை வர்த்தகம் செய்யவும் அனுமதியளித்தது. இது ரிலையன்ஸ் பங்குதாரர்களுக்கு மூன்று வகையில் பயனளிக்கும்.

ரிலையன்ஸ் உரிமைப் பங்குகள்... முதலீட்டாளர்களுக்கு என்ன பயன்?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஒருவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் 150 பங்குகளை மே 14-ம் தேதி அன்று வைத்திருந்தாரென்றால், மே 22-ம் தேதி அன்று (15 பங்குகளுக்கு ஒரு பங்கு என்ற அடிப்படையில்) அவருடைய கணக்குக்கு `ரிலையன்ஸ் ரைட்ஸ்’ எனப்படும் 10 உரிமைப் பங்குகள் கிடைத்திருக்கும். உரிமைப் பங்குகளை வாங்க விருப்பம் இல்லாதவர்கள் தங்கள் கணக்கிலிருக்கும் இந்த 10 பங்குகளை விற்று லாபம் பார்த்துக்கொள்ளலாம்.

இது இந்தியப் பங்குச் சந்தைக்கு முற்றிலும் புதியது. இதற்கு முன் பல நிறுவனங்கள் உரிமைப் பங்குகளை கவர்ச்சிகரமான விலையில் வெளியிட்டிருந்தாலும், முதலீட்டாளர்களுக்கு இப்படியொரு குறுகியகால லாப வாய்ப்பை முதன்முறையாக ரிலையன்ஸ் நிறுவனம் வழங்கியிருக்கிறது. மே 30 முதல் ஜூன் 11 வரை இந்தப் பங்குகளின் வர்த்தகம் நிறுத்தப்பட்டு ஜூன் 12 முதல் மீண்டும் வர்த்தகத்துக்கு அனுமதிக்கப்படும் எனத் தெரிகிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அடுத்து, ரிலையன்ஸ் நிறுவனம் தனது உரிமைப் பங்கின் விலையை மூன்று தவணைகளில் செலுத்தலாம் என்று அறிவித்து, சிறு முதலீட்டாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அதாவது, `உரிமைப் பங்கின் விலையான 1,257 ரூபாயை முதல் தவணையாக 25 சதவிகிதம் ரூ.314.25 (ஜூன் 3 கடைசித் தேதி), அடுத்த தவணை 25 சதவிகிதம் ரூ.314.25 (மே, 2021) கடைசித் தவணையாக மீதி 50 சதவிகிதம் ரூ.628.50 (நவம்பர் 2021) செலுத்தலாம்’ எனத் தெரிவித்துள்ளது. இதன்மூலம் உரிமைப் பங்கின் விலையான 1,257 ரூபாயை 18 மாத காலத்தில் செலுத்தி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை நவம்பர் 2021-ல் முழுமையாகப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், உரிமைப் பங்குகள் வர்த்தகமாவதால், உடனடியாகப் பணம் தேவைப்படுபவர்கள் ரிலையன்ஸ் பங்குகளை விற்றுவிட்டு ரிலையன்ஸ் ரைட்ஸ் பங்குகளை ஏறக்குறைய விற்ற விலையிலேயே மூன்று தவணைகளில் வாங்கிக்கொள்ளலாம்.

பங்குகள்
பங்குகள்

உதாரணமாக, 150 ரிலையன்ஸ் பங்குகள் வைத்திருக்கும் ஒருவர் 50 பங்குகளை சுமார் 70,000 ரூபாய்க்கு (1,400 x 50 = 70,000) விற்றுவிட்டு, 40 உரிமைப் பங்குகளை வாங்கிக்கொள்ளலாம். 150 பங்குகளை அவர் மே 14-ம் தேதி அன்று வைத்திருந்ததால், அவருக்கு 10 உரிமைப் பங்குகள் தகுதி அடிப்படையில் ஏற்கெனவே கிடைத்திருக்கும். இதன் மூலம் 15,712.75 ரூபாயை (50 x 314.25) மட்டும் தற்போது செலுத்திவிட்டு, மீதித் தொகையைக்கொண்டு உடனடித் பணத் தேவை ஏதேனும் இருப்பின் அதைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும்.

பங்குகள்
பங்குகள்

இறுதியாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை தற்போதைய விலையில் விற்றுவிட்டு, அதை மூன்று தவணைகளாக வாங்கிக் கொள்வதால் மற்றொரு லாபமும் உண்டு. அதாவது, நீண்டகால முதலீட்டாளர் ஒருவர் ரிலையன்ஸ் பங்குகளை ரூ.500 என்ற சராசரி விலையில் வைத்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். தற்போது, ரூ.1,400 என்ற அளவில் அதை விற்று, ஏறக்குறைய அதே விலையில் அந்தப் பங்குகளை மூன்று தவணைகளில் திரும்ப வாங்கிக்கொள்வதன் மூலம் அவரது பங்குச் சராசரி ரூ.1,400- ஆக மாறிவிடும். இது, அவருக்கு வருங்காலத்தில் ரிலையன்ஸ் பங்கை லாப நோக்கில் விற்கும்போது நீண்டகால முதலீட்டு வரியை மிச்சப்படுத்த உதவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பங்குகள்
பங்குகள்

2018-ம் ஆண்டு பட்ஜெட்டில் நிதியமைச்சர் ‘கிராண்ட் ஃபாதரிங்’ எனும் வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தினார். அதன்படி, 31, ஜனவரி 2018 வரை முதலீடு செய்த பங்குகளில் கிடைத்த லாபத்துக்கு வரி எதுவும் கிடையாது. 31, ஜனவரி 2018-ஐ அளவுகோலாகக்கொண்டு இதன் பின்னர் பங்கு முதலீட்டில் கிடைக்கும் லாபம் வருடத்துக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேலிருக்கும்பட்சத்தில் 10% வரி செலுத்த வேண்டியிருக்கும்.

தற்போது முதலீட்டாளர் தனது ரிலையன்ஸ் பங்குகளை விற்று வாங்குவதன்மூலம் அவரது சராசரி வாங்கிய விலை உயர்வாக காட்டும். எதிர்காலத்தில் அவர் ரிலையன்ஸ் பங்குகளை ரூ.2,500-க்கு 100 பங்குகளை விற்கிறார் என்று வைத்துக்கொண்டால், அவரது லாபம் ரூ.1,10,000 (ரூ.2,500 - ரூ.1,400 = 1100 x 100 = ரூ.1,10,000) எனக் கணக்கில் கொள்ளப்பட்டு, அவர் வெறும் ரூ1,000 மட்டும் (1,10,000 - 1,00,000 = 10,000-க்கு 10% = ரூ.1,000) வரி செலுத்தினால் போதும். அவரது முதலீட்டு அளவில் மாற்றம் ஏதும் இல்லாமலேயே வரியை மிச்சப்படுத்த முடியும்.