பங்கு முதலீடு என்றுவரும்போது, சில விஷயங்களைக் கவனிப்பது அவசியம். இங்கே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு விஷயங்களைக் கவனித்தால், பங்கு முதலீட்டில் நஷ்டத்தைத் தவிர்க்க முடியும்.

1.  புரமோட்டர் பங்கு மூலதனம் குறைந்துவரும் நிறுவனம்

நிறுவனரின் (புரமோட்டர்) பங்கு மூலதனம் குறைந்துவரும் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யக்கூடாது. புரமோட்டருக்கே நிறுவனத்தின்மீது ‘பிடிப்பு’ குறையும்போது, அவர் நடத்தும் நிறுவனம் எதிர்காலத்தில் சிறப்பாகச் செயல்பட வாய்ப்பு குறைவு.

2.  பங்குகளை அடமானம் வைக்கும் நிறுவனம்

தனக்குச் சொந்தமான பங்குகளை அதிக அளவில் அடமானம் வைத்திருக்கும் நிறுவனப் பங்கிலும் முதலீடு செய்யக்கூடாது. அடமானம் வைத்த நிறுவனத்தால் பங்குகளை மீட்கமுடியாத போது, விற்கவேண்டிய நிலை ஏற்பட்டு பங்கின் விலை குறையும்.

3. கடன்கள் அதிகரித்துவரும் நிறுவனம்

நிறுவனத்தின் கடன்கள் அதிகரித்தால், வட்டிக்குச் செல்லும் தொகையும் அதிகரிக்கும். இதனால் நிறுவனத்தின் லாபம் குறைந்து, பங்கின் விலையும் குறையும்.

4.  செயல்பாட்டு லாபம், விற்பனை மற்றும் நிகர லாபம் குறைவது

ஒரு நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம், விற்பனை மற்றும் நிகர லாபம் தொடர்ந்து குறைந்தால், அந்த பங்கின் விலையும் குறையும். அது மாதிரியான பங்குகளை வைத்திருந்தால், அவற்றை உடனடியாக விற்று வெளியேறுவது நல்லது.