தினம் தினம் திருநாளே! தினப் பலன் ஆகஸ்ட் 25-ம் தேதி பஞ்சாங்கக் குறிப்புகளுடன் | Daily Horoscope for August - 25 with Panchangam details

வெளியிடப்பட்ட நேரம்: 07:29 (25/08/2017)

கடைசி தொடர்பு:07:29 (25/08/2017)

தினம் தினம் திருநாளே! தினப் பலன் ஆகஸ்ட் 25-ம் தேதி பஞ்சாங்கக் குறிப்புகளுடன்

தினம் தினம் திருநாளே!
தினப் பலன் - ஆகஸ்ட் - 25
'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்

தினப் பலன்

மேஷம்:  காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.  விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும்.  எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.  நண்பர்களாலும் உறவினர்களாலும் எதிர்பாராத நன்மைகள் ஏற்படக்கூடும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிறு சங்கடம் ஏற்படக்கூடும்.

ரிஷபம்:  மனம் உற்சாகமாகக் காணப்படும் எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேச்சில் நிதானம் தேவை. 

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

மிதுனம்: அதிகமாக உழைக்கவேண்டி இருக்கும். ஆனாலும், அதனால் பண லாபமும் கிடைக்கும். புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும்.  பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். 

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.

கடகம்:  இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும்.  நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். அரசு அதிகாரிகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. 

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

சிம்மம்:    காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள்.  சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். 

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். 

கன்னி: மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அதே நேரத்தில் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். 

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணங்களால் அலைச்சல் உண்டாகும்.

துலாம்:  இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும்.  உணவு தொடர்பான அலர்ஜி ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை.  

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் நன்மை ஏற்படக்கூடும்.

விருச்சிகம்:  இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும்.  நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. 

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அலைச்சலும் செலவுகளும் கூடும்.

தனுசு:  உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. தேவையற்ற எண்ணங்களால் மனதில் இனம் தெரியாத கலக்கம் உண்டாகும்.   காரியங்களில் அனுகூலம் உண்டாகும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். தாய் வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். 

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

மகரம்:  மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும்.  மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். 

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டு.

கும்பம்:  இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும்.  பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். 

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.

மீனம்:  இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும்.   நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். 

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்