Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தினம் தினம் திருநாளே! தினப் பலன் ஆகஸ்ட் 26-ம் தேதி பஞ்சாங்கக் குறிப்புகளுடன்


தினம் தினம் திருநாளே
தினப் பலன் - ஆகஸ்ட் - 26
'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்

தினப் பலன்

மேஷம்: இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். வராது என்று நினைத்திருந்த  கடன் தொகை திரும்பக் கிடைக்கும். பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளைத் தொடங்கவேண்டாம். காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். 

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு  அதிகமான பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

ரிஷபம்: அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச்  சாதகமாக முடியும். புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்கிவிடுவது நல்லது. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.  அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை..

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு.

மிதுனம்: வெளியூர்களில் இருந்து சுபச் செய்திகள் வரும்.  மனம் உற்சாகமாகக் காணப்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். 

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயார் மூலம் ஆதாயம் உண்டாகும்.

கடகம்: இன்றைய நாள்  உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடு வீர்கள். புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும்.  அத்தியாவசிய தேவைகளுக்காக கடன் வாங்கவும் நேரும். 

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

சிம்மம்:  இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்திகள் வரும்.   

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும்.

கன்னி: புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதன் காரணமாக கடன் வாங்கவும் நேரிடும். ஒரு சிலருக்கு புதியவர்களின் அறிமுகமும், அவர்களால் நன்மையும் உண்டாகும். 

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணிகளில் கவனமாக இருப்பது அவசியம்.

துலாம்: முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிற்பகலுக்குமேல் எதிர்பாராத சிலரை சந்திக்க நேரிடுவதும், அதனால் மனதில் சிறு வருத்தம் ஏற்படவும் கூடும். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி வேலைச் சுமை இருக்கும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆலயங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

விருச்சிகம்: அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதன் காரணமாக கடன் வாங்கவும் நேரிடும். 

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விருந்து விசேஷங்களில் கலந்து கொள்ளக்கூடும்

தனுசு: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். புதிய முயற்சிகளை காலையிலேயே மேற்கொள்வது நல்லது. மகான்களின் தரிசனம் போன்ற சுப பலன்கள் நடக்கும். 

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் பணிகளில் கவனமாக இருக்கவும்.

மகரம்: இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். சிலர் வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. 

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் பேசும்போது பொறுமை அவசியம்.

கும்பம்: முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். உறவினர்களால் தர்மசங்கடமான நிலைமை ஏற்படும். 

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத சங்கடங்கள் தோன்றக்கூடும்.

மீனம்:  
எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.  வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த  நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பிற்பகலுக்குமேல் சிலருக்கு சிறிய அளவில்  உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். 

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement