வெளியிடப்பட்ட நேரம்: 00:17 (02/09/2017)

கடைசி தொடர்பு:00:17 (02/09/2017)

தினம் தினம் திருநாளே! தினப் பலன் செப்டம்பர் 2-ம் தேதி பஞ்சாங்கக் குறிப்புகளுடன்

தினம் தினம் திருநாளே!
தினப் பலன் - செப்டம்பர் - 2 - சனிக்கிழமை
'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்

தினப் பலன்

மேஷம்: வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும்.

ரிஷபம்:காலையில் புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவேண்டாம். வீட்டில் பராமரிப்புப் பணிகள் அதிகரிக்கும்.  பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வகையில் ஆதாயம்  உண்டாகும். பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களின் சந்திப்பு மனதுக்கு மகிழ்ச்சி தருவதாக அமையும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் நன்மைகள் ஏற்படும்.

மிதுனம்: இன்று வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். பிற்பகலுக்குமேல் உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். காரியங்கள் அனுகூலமாகும்.சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு.  மற்றவர்களால் மன அமைதி குறையக்கூடும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும்.

கடகம்: எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள்.  சிலருக்கு  உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். பொறுமையுடன் இருப்பது அவசியம். பிற்பகலுக்குமேல் காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.  வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த செய்தி வந்து வந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் அதிஷ்டான தரிசனம் ஏற்படும்.

சிம்மம்: உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளை அனுசரித்துச் செல்லவும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். மாலையில் நீண்டநாள்களாக சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்விர்கள்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

கன்னி: புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.தெய்வப் பணிகளில் ஈடுபடுவீர்கள்.  ஒரு சிலருக்கு புதியவர்களின் அறிமுகமும், அவர்களால் நன்மையும்  உண்டாகும். பிற்பகலுக்குமேல் ஒரு சிலருக்கு சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்படும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டு.

துலாம்:இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும்.  வெளியூர்களில் இருந்து  சுபச் செய்திகள் வரும்.  சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவுக்கு வாய்ப்பு உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். 

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

விருச்சிகம்:  வீண் அலைச்சலுடன் ஆதாயமும் உண்டாகும். சிலருக்கு முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும்.  மாலையில் உறவினர்கள் வகையில் சிறு மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையாக இருக்கவும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.

தனுசு: இன்றைய நாள்  உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். வெளியூரில் இருந்து வரும் தகவல் மகிழ்ச்சி தருவதாக இருக்கும் .  அத்தியாவசிய தேவைகளுக்காக ஒரு சிலர் கடன் வாங்கவும் நேரும். 

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும்.

மகரம்: எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி  வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பிற்பகலுக்குமேல் சிலருக்கு  உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். மற்றவர்களால் மன அமைதி குறையக்கூடும். பொறுமையுடன் இருக்கவும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ தரிசனம் கிடைக்கும்.

கும்பம்:  புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதன் காரணமாக கடன் வாங்கவும் நேரிடும்.  பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் பெருமை உண்டாகும்.

மீனம்:  இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். வராது என்று நினைத்திருந்த  கடன் தொகை திரும்பக் கிடைக்கும்.  தாய் வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். மாலை நேரத்தில் நீங்கள் கேள்விப்படும் செய்தி மனதுக்கு மகிழ்ச்சி தரும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலப் பலன் உண்டாகும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்