Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தினம் தினம் திருநாளே! தினப் பலன் செப்டம்பர் - 3-ம் தேதி பஞ்சாங்கக் குறிப்புடன்

தினம் தினம் திருநாளே!
தினப் பலன்
செப்டம்பர் - 3 - ஞாயிற்றுக்கிழமை
'ஜோதிடஶ்ரீ'' முருகப்ரியன்

தினப் பலன்

மேஷம்: மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். 

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.

ரிஷபம்: இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.  காரியங்கள் அனுகூலமாகும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. 

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு.

மிதுனம்: முற்பகல் வரை காரியங்களில் அனுகூலம் உண்டாகும். இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். பணத்தேவை அதிகரிக்கும். 

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சஞ்சலங்கள் ஏற்படக்கூடும்.

கடகம்: உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. பிற்பகலுக்குமேல்  உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். 

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

சிம்மம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். விருந்து விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். 

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் ஏற்படும்.

கன்னி: இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள்.  நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். 

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

துலாம்: இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூர்களில் இருந்து எதிர்பார்த்த  தகவல்கள் வரும். அவசியத் தேவைகளுக்கு கடன் வாங்க நேரும்.  பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்கவும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படும். 

விருச்சிகம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள்.  சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். 

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்கள் சேரும்.

தனுசு: மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். 

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.

மகரம்:  நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி வேலைச் சுமை இருந்துகொண்டே இருக்கும். ஆனாலும், முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். 

கும்பம்: மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிற்பகலுக்குமேல் வீண் செலவுகள் உண்டாகும். காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். 

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் நன்மைகள் ஏற்படும்.

மீனம்: உற்சாகமான நாள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பிற்பகலுக்கு மேல் புதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம். 

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement