வெளியிடப்பட்ட நேரம்: 07:32 (07/09/2017)

கடைசி தொடர்பு:07:32 (07/09/2017)

தினம் தினம் திருநாளே! தினப் பலன் செப்டம்பர் 7-ம் தேதி பஞ்சாங்கக் குறிப்புடன்


தினம் தினம் திருநாளே!
தினப் பலன் - செப்டம்பர் - 7
'ஜோதிடஶ்ரீ'முருகப்ரியன்

தினப் பலன்

மேஷம்: புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். ஒரு சிலருக்கு புதியவர்களின் அறிமுகமும், அவர்களால் நன்மையும்  உண்டாகும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். 

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

ரிஷபம்: அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச்  சாதகமாக முடியும். புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்கிவிடுவது நல்லது. பிற்பகலுக்குமேல் மனதில் இனம் புரியாத கலக்கம் உண்டாகும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை..

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாகும்.

மிதுனம்: வெளியூர்களில் இருந்து எதிர்பார்த்த சுபச் செய்திக வரும். மனம் உற்சாகமாகக் காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். 

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். 

கடகம்: இன்றைய நாள்  உங்களுக்கு உற்சாகமாக அமையும். புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும்.  அத்தியாவசிய தேவைகளுக்காக ஒரு சிலர் கடன் வாங்கவும் நேரும். 

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் சிறு சங்கடம் ஏற்படக்கூடும்.

சிம்மம்:  இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வெளியூர்களில் இருந்து சுபச் செய்தி வரும்.  

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.

கன்னி: இன்று உற்சாகமான நாள். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். வராது என்று நினைத்திருந்த  கடன் தொகை திரும்பக் கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். 

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

துலாம்: அதிகாரிகள் சந்திப்பும், அதனால் காரிய அனுகூலமும்  ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி வேலைச் சுமை இருந்துகொண்டே இருக்கும். மாலையில் மனதில் உற்சாகம் உண்டாகும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சங்கடம் நேரிடும்.

விருச்சிகம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். . வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். சிலருக்கு எதிர்பாராத தன லாபம் உண்டாகும். ஆனால், மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் ஆசிகள் கிடைக்கும்.

தனுசு: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளை காலையிலேயே மேற்கொள்வது நல்லது. தந்தை வழியில் நன்மைகள் ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பிற்பகலுக்கு மேல் மனதில் சிறு சலனம் ஏற்பட்டு நீங்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.

மகரம்: உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை  ஆபரணங்கள் வாங்குவீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெரியோர்களின் அன்பும் ஆசிகளும் கிடைக்கும்.

கும்பம்: அரசு அதிகாரிகளுடன் கருத்துவேறுபாடும் மனக் கசப்பும் உண்டாகும். வீண் அலைச்சல் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். 

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

மீனம்:  அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும் என்பதால், கடன் வாங்க நேரிடும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாள்களாக தேடிய முக்கிய ஆவணம் கிடைக்கும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்