வெளியிடப்பட்ட நேரம்: 20:39 (12/09/2017)

கடைசி தொடர்பு:21:14 (12/09/2017)

வாஸ்துபடி நல்ல வீட்டு மனையை நாமே தேர்வு செய்யலாம்! #Vasthu

'வீடு என்பது இல்லம் அல்ல' என்று சொல்வார்கள். சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலருடைய மனதிலும் இருந்து வருகிறது. சொந்த வீடு வாங்க முடிவு செய்துவிட்டால், முதலில்  நல்ல வீட்டு மனையைத் தேர்வு செய்வதுதான் மிகவும் முக்கியமான அம்சம். நல்ல மனை அமைவதுதான், வளமான வாழ்க்கைக்கு அடிப்படையாக அமையும். வாஸ்துப்படி நல்ல மனையை எப்படித் தேர்வு செய்வது என்பது பற்றி வாஸ்து ஜோதிட நிபுணர் எம்.எஸ்.ஆர்.மணிபாரதியைக் கேட்டோம். 

வீட்டு மனை

''வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டாலே, முதலில்  நமக்கு அதற்கான இடம் தேவை. இடமானது எட்டு வகையானத் தன்மைகளைக் கொண்டது. அதிலும் நேர்த்தன்மை, மூலைத்தன்மை ஆகிய சிறப்புகளைக் கொண்டிருக்க வேண்டும். அதிலும் நிலம் வாஸ்து சாஸ்திர கட்டுப்பாட்டுக்கு இணங்கி வந்தால் மட்டுமே, மனைகள் மனமகிழ்ச்சியைத் தரும்.

ஈசான்ய மனைகள்: 
மனைக்கு வடக்கிலும் கிழக்கிலும் சாலை அமைப்புள்ள மூலை மனை, ‘ஈசான்ய மனை’ எனப்படும். இது அனைத்துச் சிறப்புகளும் கொண்ட மனை . இப்படிப்பட்ட மனைகள் குபேர சம்பத்து தரும் மனைகளாகும். ஈஸ்வர அம்சமுள்ளவை.

வீட்டு மனை
கிழக்கு மனைகள்

வீட்டு மனை  அமைந்துள்ள இடத்துக்கு கிழக்கே சாலை அமைப்பு இருந்தால் இத்தகைய மனைகளை கிழக்கு மனைகள் என்று அழைப்பார்கள்.  இந்த வீட்டு மனைகளும் சிறந்த மனையிடங்கள் ஆகும். அறிவினாலும், மதியூக செயல்பாட்டினாலும் வெற்றி தரக்கூடிய மனைகள் கிழக்கு மனைகள். இந்திரனைப் போன்ற வாழ்வை அமைத்துத் தருபவை..
ஆக்கினேய மனைகள்
கிழக்கிலும், தெற்கிலும் சாலை அமைப்பு கொண்ட அக்கினி பகவானின் தனித்தன்மை கொண்ட மனைகளை 'ஆக்கினேய மனைகள்' என்று அழைப்பார்கள். இத்தகைய மனைகள், இதில் வசிப்பவர்களுக்கு உஷ்ணம் சம்பந்தமான நோய்களைத் தரக்கூடியவை. இதுபோன்ற மனைகளில் வீடு கட்டிக் குடி இருப்பதை விட கடைகள் கட்டலாம். வர்த்தக அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றைக் கட்டுவதற்கு இவை ஏற்றவை.


தெற்கு மனைகள்
மனை  இருக்கும் இடத்திலிருந்து தெற்கே சாலை அமைப்பு கொண்ட மனைகள், ‘தெற்கு மனைகள்’ எனப்படும். இப்படிப்பட்ட மனைகளில் வசிப்பவர்கள் தர்ம நெறிப்படி வாழ்வார்கள். அதற்குரிய சிந்தனைகளை உருவாக்கும் வலிமை வாய்ந்தவை. ஆனால், அதன்படி நடக்காமல் போனால் எதிர்வினைகளையும் இத்தகு மனைகள் ஏற்படுத்தும். இப்படிப்பட்ட மனைகளை வாங்கி வீடு கட்டும்போது  வாசல் அமைப்புகளில் தவறுதல்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், பெண்களின் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

காலி மனை
 

நைருதிய மனைகள்
தெற்கிலும், மேற்கிலும் சாலை இருக்கும் மூலைத்திசை மனை ‘நைருதிய மனைகள்’ ஆகும். வீடு கட்டும்போது மிக மிகக் கவனமாக வடிவமைக்காவிட்டால், அடுத்த தலைமுறையில் அந்த வீடு கை மாறும்  நிலையை ஏற்படுத்தும். இத்தகைய மனையில் வீடு கட்டி குடியேறுபவர்களுக்கு அசாத்திய தைரியத்தைத் தரும். கூடவே பல சோதனைகளையும் தடைகளையும் சந்திக்க வைக்கும்.
 

மேற்கு மனைகள்
 மேற்கு மனைகளை 'வருண மனை' என்று அழைப்பார்கள். மனைக்கு மேற்குப் புறத்தில் சாலை அமைப்புகொண்ட மனைகள் மேற்கு மனைகள். ஆளுகைத் தன்மையில் கம்பீரம் கொண்ட மனைகள் என்று வர்ணிக்கப்பட்டாலும், வீடு கட்டும்போது தவறுகள்  ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே, இம்மனைகளில் வீடு கட்டும்போது, திட்டமிடுதல் மிக மிக அவசியம். மேற்கு மனைகளில் வீடு திட்டமிடப்படவில்லை என்றால், குடும்பத் தலைவரின் புகழ் குறையும்படியான அமைப்பு சுலபமாக அமைந்துவிடும்.

வாஸ்து பூஜை

வாயுவிய மனைகள்
மேற்கிலும், வடக்கிலும் சாலை அமைப்பு கொண்ட மனைகள் ‘வாயுவிய மனைகள்’ எனப்படும். இத்தகைய மனைகளில் வசிக்கும்போது பெண்களின்  மனதில் தேவையற்ற குழப்பங்களை உண்டு பண்ணும்.  இத்தகைய மனைகளில் கடைகள் கட்டி வாடகைக்கு விடுவது நல்லது.
 

வடக்கு மனைகள்
 மனைக்கு வடக்கே சாலை அமைப்பு கொண்ட மனை ‘வடக்கு மனை’ எனப்படும். இதை குபேர மனை என்றும் அழைப்பார்கள். சகல ஐஸ்வர்யங்களையும் இந்த மனைகள் தரக்கூடியவை. மாத்ரு ஸ்தான பலன் முழுவதும் தரவல்ல சிறந்த மனைகள் ஆகும்.
 

மேடு பள்ளங்கள்
இப்படி எட்டு வகையான மனைகளில் ஒன்றை நாம் தேர்வு செய்யும்போது, மனையின் பொதுத் தன்மை, சிறப்புத் தன்மை இவற்றைக் கவனத்தில் கொண்டு வந்தால்தான், முழுப் பலன் அடையமுடியும். இந்த வகையில், மனையின் மேடு பள்ளங்களும் மனையின் நல்ல பலனுக்கு உதவக்கூடியவை.

 

இல்லம்


மனையானது தெற்கே உயர்ந்து வடக்கே பள்ளமாக இருக்கவேண்டும். இதைப் போலவே மேற்கு உயர்ந்து, கிழக்கு பள்ளமாக இருக்க வேண்டும். இந்த அடிப்படையில் நைருதியம் உயர்ந்து ஈசான்யம் பள்ளமாக இருப்பது தனிச்சிறப்பு கொண்ட மனையாக அமையும்.
மாறாக, கிழக்கு உயர்ந்து மேற்கு சரிவாக இருந்தால், குடும்பத் தலைவனை பலவீனப்படுத்துவதுடன் பொருளாதாரச் சீரழிவைத் தரும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். இளைய மகனின் கல்வியில் மந்த நிலையை ஏற்படுத்தும். 

இதைப்போல, வடக்கு உயர்ந்து தெற்கு சரிவாக அமைந்துவிட்டால், கிடைக்கக்கூடிய இடத்தில் கேட்டால்கூட, கடன்  கிடைக்காது. பரிகாசப் பேச்சுகளுக்கு ஆளாக நேரிடும். குடும்பத் தலைவி மற்றும் மகள் வகையில் மருத்துவச் செலவுகள், பெண்களால் சண்டைச் சச்சரவுகள் ஏற்படும். மாமனார் வீட்டு வகையில் வரக்கூடிய உதவிகள் தடைப்படும். அதனால் பகை ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு. ஆக இவற்றை எல்லாம் மனை வாங்கும் போது கவனத்தில் கொண்டு வாங்கினால் நல்ல பலன்களை அடையலாம்''
 என்று கூறினார்.

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்