வெளியிடப்பட்ட நேரம்: 08:01 (30/09/2017)

கடைசி தொடர்பு:08:01 (30/09/2017)

தினம் தினம் திருநாளே! தினப் பலன் செப்டம்பர் - 30-ம் தேதி பஞ்சாங்கக் குறிப்புடன்

தினப் பலன்
செப்டம்பர் - 30 - சனிக்கிழமை
'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்

தினப் பலன்

மேஷம்:  தொடங்கும் முயற்சிகள் நல்லவிதத்தில் முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலை காணப்படும். பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். 

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிரமுகர்களின் சந்திப்பும் ஆதாயமும் உண்டாகும்.

ரிஷபம்: அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும்.  உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. 

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு உண்டு.

மிதுனம்: இன்று காரியங்களில் மிகுந்த பொறுமையும், கவனமும் தேவை. சிலரால் மனச் சங்கடமும் குழப்பமும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிற்பகலுக்கு மேல்  குழப்பம் நீங்கி தெளிவும் உற்சாகமும் பிறக்கும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமை காப்பது அவசியம்.

கடகம்: புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். எதிர்பாராத விருந்தினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். 

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.

சிம்மம்: எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பிற்பகலுக்குமேல் சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியக் குறைவு ஏற்பட்டு நீங்கும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.

கன்னி:  மனம் உற்சாகமாகக் காணப்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். 

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

துலாம்: இன்று வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். மாலையில் வாழ்க்கைத்துணை வழி உறவினர்களின் வருகையும், அதனால் ஆதாயமும் கிடைக்கும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் நன்மை ஏற்படும்.

விருச்சிகம்: இன்றைய நாள்  உங்களுக்கு உற்சாகமாக அமையும். புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வரும்.  அத்தியாவசிய தேவைகளுக்காக ஒரு சிலர் கடன் வாங்கவும் நேரும். 

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

தனுசு: புது முயற்சிகளை காலையிலேயே தொடங்கிவிடுவது நல்லது. பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பிற்பகலுக்கு மேல் ஏற்படும் திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.

மகரம்:  எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்தி வரும்.  வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும்.  சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவுக்கு வாய்ப்பு உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். 

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களைத் தவிர்க்கவும்.

கும்பம்: இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். வராது என்று நினைத்திருந்த  கடன் தொகை திரும்பக் கிடைக்கும். செலவுகளும் அதிகரிக்கும். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். 

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மீனம்:  புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. ஒரு சிலருக்கு புதியவர்களின் அறிமுகமும், அவர்களால் நன்மையும்  உண்டாகும். 

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.


 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்