தினம் தினம் திருநாளே! தினப் பலன் அக்டோபர் 7-ம் தேதி பஞ்சாங்கக் குறிப்புகளுடன் | Daily Horoscope for October - 7 with Panchangam details

வெளியிடப்பட்ட நேரம்: 07:26 (07/10/2017)

கடைசி தொடர்பு:07:26 (07/10/2017)

தினம் தினம் திருநாளே! தினப் பலன் அக்டோபர் 7-ம் தேதி பஞ்சாங்கக் குறிப்புகளுடன்

தினப் பலன்
அக்டோபர் - 7 - சனிக்கிழமை
'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்

தினப் பலன்

மேஷம்:    
    இன்று மகிழ்ச்சியான நாளாக அமையும். எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். உங்கள் தேவையறிந்து மற்றவர்கள் உதவி செய்வார்கள். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.

ரிஷபம்:   
    காலை வேளையில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். பிற்பகல் வரை வழக்கமான பணிகளையும் கூடுதல் கவனத்துடன் மேற்கொள்வது அவசியம். பிற்பகலுக்குமேல் தாய் வழி உறவினர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். மனதுக்கு இனிய செய்தியைக் கேட்பீர்கள்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். 

மிதுனம்:     
    இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக விடியும். அறிவுபூர்வமான பேச்சால் மற்றவர்களைக் கவருவீர்கள். சிலருக்கு வேலையின் காரணமாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள நேரிடும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தியைக் கேட்பீர்கள். நண்பர்களின் சந்திப்பும் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும்.

கடகம்:   
உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில் சுறுசுறுப்பாக பணி செய்வீர்கள். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். வழக்கில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வரும். 

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறுவதில் தடைகள் ஏற்படும்.

சிம்மம்:      
    அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனாலும், சக பணியாளர்களின் உதவியால் மனதில் உற்சாகம் ஏற்படும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி வரும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கன்னி:     
    இன்று வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். பணப்புழக்கம் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிப்பதால், நேரத்துக்குச் சாப்பிடமுடியாது. வியாபாரத்தில் விற்பனை மந்தமாகத்தான் இருக்கும். உறவினர்களால் மனச் சங்கடம் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம்.

இன்று சந்திராஷ்டமம் என்பதால் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். 

துலாம்:      
    காலைப் பொழுது இதமாக விடியும். மனதுக்கு இனிய செய்தியைக் கேட்பீர்கள். அன்றாடப் பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பிற்பகலுக்குமேல் வாழ்க்கைத் துணை வழியில் ஆதரவும் ஆதாயமும் உண்டாகும். ஆடம்பரப் பொருள்கள் வாங்குவீர்கள்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்க வாய்ப்பு உண்டு. 

விருச்சிகம்:       
    மனம் உற்சாகமாகக் காணப்படும். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். சகோதர வகையில் ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு அலுவலகப் பணியின் காரணமாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள நேரிடும். மாலையில் உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிற்சில சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும்.
 

தனுசு:      
    இன்று முயற்சி செய்யும் காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு மனதுக்கு ஆறுதல் தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும்.

மகரம்:  
    இன்று வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் தருவதாக இருக்கும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.

கும்பம்:    இன்று உங்கள் மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். அலுவலகத்தில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்ப்பதை விடவும் கூடுதல் லாபம் கிடைக்கும். நண்பர்களிடம் கேட்ட உதவிகள் கிடைக்கும். 

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பயணம் மேற்கொள்ள நேரிடும்.

மீனம்:   இன்று நீங்கள் அன்றாடப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். நேரத்துக்குச் சாப்பிட  முடியாதபடி வேலைச் சுமை இருந்துகொண்டே இருக்கும். ஆனால், பிற்பகலுக்குமேல் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். தேவைப்படும் பணம் கடனாகக் கிடைக்கும். நண்பர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவியாக இருப்பார்கள். 

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கக் கூடும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்