வெளியிடப்பட்ட நேரம்: 07:13 (21/10/2017)

கடைசி தொடர்பு:10:26 (21/10/2017)

தினம் தினம் திருநாளே! தினப் பலன் அக்டோபர் 21-ம் தேதி பஞ்சாங்கக் குறிப்புடன்

தினப் பலன்
அக்டோபர் - 21 - சனிக்கிழமை
'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்

தினப் பலன்

மேஷம்:  உற்சாகமான நாள். உங்கள் தேவையறிந்து நண்பர்கள் உதவி செய்வார்கள். எதிர் பார்த்த பணம் கைக்கு வரும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்கவும். 

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

ரிஷபம்: காலையில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. பிற்பகலுக்குமேல் தாய்வழி உறவினர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். 

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தந்தை வழி உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

மிதுனம்: இன்றைய தினம் உங்களுக்கு உற்சாகம் தருவதாக அமையும். கனிவான பேச்சால் மற்றவர்களைக் கவர்வீர்கள். பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த விஷயம் சாதகமாக முடியும். 

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கோயில்களுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு ஏற்படும்.

கடகம்:  உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். மாலை நேரத்தில் நீண்டநாள்களாக சந்திக்காத நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தாய்மாமன் வகையில் நன்மை ஏற்படும்.

சிம்மம்: தேவையான பணம் எப்படியும் கிடைத்துவிடும். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். மாலையில் நண்பர்களின் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தந்தை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தடைப்படும்.

கன்னி:  இன்று உங்கள் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். பிற்பகலுக்குமேல் நீங்கள் எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். நீண்டநாள்களாக நினைத்திருந்த குலதெய்வ பிரார்த்தனையை இன்று நிறைவேற்றுவீர்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குச் சகோதரர்களால் அனுகூலம் ஏற்படும்

துலாம்:  காலைப் பொழுது இதமாக விடியும். மனதுக்கு இனிய சம்பவங்களைக் கேட்க நேரிடும். அன்றாடப் பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

விருச்சிகம்:  இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். அறிவுப் பூர்வமான பேச்சால் மற்றவர்களுக்கு ஆறுதல் தருவீர்கள். சந்திரன் விரயத்தில் சஞ்சரிப்பதால் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் கிடைக்கும். 

தனுசு:  காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். அலுவலகத்தில் உற்சாகமான நிலை காணப்படும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

மகரம்:  காலையில் அன்றாடப் பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். பிற்பகலுக்கு மேல் வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கப் பெறுவீர்கள். இன்றைக்குப் புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடுவது நல்லது. 

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குச் சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.

கும்பம்: மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும் என்பதால் கடன் வாங்கவும் நேரும். நண்பர்களிடமிருந்து கேட்ட உதவிகள் கிடைக்கும். அனைத்து முயற்சிகளும் உங்களுக்குச் சாதகமாக முடியும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குருபலம் இருப்பதால், புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும்.

மீனம்:  இன்று நீங்கள் அன்றாடப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும்.  பிற்பகலுக்குமேல் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். தேவைப்படும் பணம் கடனாகக் கிடைக்கும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தாய்வழி  உறவுகளால் நன்மைகள் ஏற்படக்கூடும்.

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்