வெளியிடப்பட்ட நேரம்: 20:23 (09/11/2017)

கடைசி தொடர்பு:20:23 (09/11/2017)

செல்வம், கல்வி, ஞானம் அருளும் 14 சிவ திருக்கோலங்கள், கோயில்கள்! #VikatanPhotoStory

சிவ கோயில்

சிவபெருமான் தியாகத்தின் வடிவமாகத் திகழ்பவர். தன்னைச் சரணடைந்த பக்தர்களின் நன்மைக்காக எதையும் தியாகம் செய்யக்கூடியவர் என்பதை நமக்கு உணர்த்தும் ஒரு நிகழ்வுதான், தேவர்களின் நன்மைக்காக, பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷத்தை தாம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். 'தென்னாடுடைய சிவன்' என்று போற்றப்பெறும் சிறப்பினுக்கு உரிய சிவபெருமான், பல கோயில்களில் கொண்டிருக்கும் திருக்கோலங்களும், வழிபடுவதால் கிடைக்கும் பலன்களும் இங்கே உங்களுக்காக...

 

நாகப்பட்டினம் ஸ்ரீகாயாரோகணேஸ்வரர்

நாகப்பட்டினம் ஸ்ரீகாயாரோகணேஸ்வரர்
இடம்: நாகப்பட்டினத்தில் உள்ள ஸ்ரீகாயாரோகணேஸ்வரர் கோயில், அம்பிகையின் திருப்பெயரால் 'நீலாயதாக்ஷி திருக்கோயில்' என்றும் அழைக்கப்படுகிறது. 
சிறப்பு: சக்தி பீடங்களில் ஒன்றாகவும், சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. 
வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்: ஜாதகத்தில் உள்ள நாகதோஷத்தை நீக்கும் சக்திவாய்ந்த தலம். இந்தத் தலத்தில் அம்பாள் முன் வீற்றிருக்கும் சிற்பச் சிறப்புடைய 'இரட்டைப் பார்வை நந்தி'யை வணங்கினால் பார்வைக் கோளாறு நீங்கும். 

 

திருக்கோவிலூர் ஸ்ரீஅதுல்யநாதேஸ்வரர்

திருக்கோவிலூர் ஸ்ரீஅதுல்யநாதேஸ்வரர்
இடம்: விழுப்புரம் மாவட்டத்தை அடுத்த திருக்கோவிலூரிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது ஶ்ரீஅதுல்யநாதேஸ்வரர் கோயில். 
சிறப்பு: அடுத்தடுத்து இரண்டு சனீஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது. நாய் வாகனம் இல்லாமல் காட்சி தரும் காலபைரவர், தெற்கு திசை நோக்கிய துர்கை அம்மன் போன்றவை இந்தத் தலத்தின் சிறப்பு.
வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்: திருமணம், புத்திர தோஷங்கள் நீங்கும். 

 

பெரியமணலி ஸ்ரீநாகேஸ்வரர்

பெரியமணலி ஸ்ரீநாகேஸ்வரர்
இடம்: ராசிபுரம்- திருச்செங்கோடு சாலையில் உள்ளது வையப்பமலை. இங்கிருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ளது பெரியமணலி.
சிறப்பு: நாகம் நேரில் வந்து இங்குள்ள மூலவரை வழிபட்டதால் இந்தத் தலத்தில் உள்ள இறைவன் நாகேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்:  திருமணத் தடை, கணவன் - மனைவிக்குள் தாம்பத்ய வாழ்க்கை சிறக்கும்.

 

கருங்குளம் ஸ்ரீமார்த்தாண்டேஸ்வரர்

கருங்குளம் ஸ்ரீமார்த்தாண்டேஸ்வரர்
இடம்: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது.
சிறப்பு: முன் ஜன்ம சாபம் நீக்கும் தலம் என்பதால், தை அமாவாசை நாளில் பித்ருக்கள் கடன் செய்வதற்கு உகந்த தலம்.
வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்: இக்கோயிலில் உள்ள தம்பதி சமேதராகக் காட்சி தரும் நவகிரகங்களுக்குத் தீபமேற்றி வழிபட்டால், கிரக தோஷங்கள் யாவும் விலகும். 

 

பாக்கம்  ஸ்ரீஆனந்தீஸ்வரர்

பாக்கம்  ஸ்ரீஆனந்தீஸ்வரர்
இடம்: சென்னை, திருநின்றவூர் ரயில் நிலையத்திலிருந்து பெரியபாளையம் செல்லும் சாலையில் 4 கி.மீ தொலைவில் உள்ளது. 
சிறப்பு: அகத்திய முனிவர் வழிபட்டு அருள் பெற்ற ஆலயம்.
வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்: இங்கு வந்து வேண்டினால், கல்வியும் ஞானமும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்!

 

காஞ்சி ஸ்ரீஓணகாந்தன்தளி ஓணகாந்தேஸ்வரர்

காஞ்சி ஸ்ரீஓணகாந்தன்தளி ஓணகாந்தேஸ்வரர்
இடம்: காஞ்சிபுரம்.
சிறப்பு: வாணாசுரனின் சேனைத் தலைவர்களான ஓணன், காந்தன் ஆகிய இருவரும் வழிபட்ட திருத்தலம். சுந்தரர் பதிகம் பாடி, சிவனருளால் பொன் புளியங்காய்களைப் பெற்ற திருத்தலம் இது.
வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்: கல்வி ஞானத்தை அளிக்கும்.

 

திருச்சி ஸ்ரீஉய்யக்கொண்டார்

திருச்சி ஸ்ரீஉய்யக்கொண்டார்
இடம்: திருச்சி - வயலூர் சாலையில், திருச்சிக்கு அருகிலேயே அமைந்துள்ளது உய்யக்கொண்டான் திருமலை.
சிறப்பு: மேற்கு திசை நோக்கிய ஶ்ரீஉய்யக்கொண்டார் சுயம்புவான சிவலிங்கம்.
வழிபடுவதால் கிடைக்கும் பலன்:  மனஅமைதியைக் கொடுக்கும்.

 

ஓமாம்புலியூர் ஸ்ரீதுயர்தீர்த்தநாதர்

ஓமாம்புலியூர் ஸ்ரீதுயர்தீர்த்தநாதர்
இடம்: கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது ஓமாம்புலியூர்
சிறப்பு: பூங்கொடி நாயகியுடன் துயர்தீர்த்த நாதர் அருளும் இத்தலம், இறைவன் தட்சிணாமூர்த்தியாக உமையம்மைக்குப் பிரணவ மந்திரத்தை விளக்கியதால் மகிமை பெற்றது.
வழிபடுவதால் கிடைக்கும் பலன்:  கல்வி ஞானத்தைக் கொடுக்கும்.

 

திருச்சேறை ஸ்ரீசாரபரமேஸ்வரர்

திருச்சேறை ஸ்ரீசாரபரமேஸ்வரர்
இடம்: தஞ்சாவூர் மாவட்டம், திருச்சேறை.
சிறப்பு: கடன் நிவர்த்தி செய்யும் ரிண விமோசன லிங்கேஸ்வரர் இந்தத் தலத்தில் சிறப்பு.
வழிபடுவதால் கிடைக்கும் பலன்: ருணவிமோசன லிங்கேஸ்வரரை வழிபட்டால், கடன் தொல்லைகள் தீரும்!

 

காஞ்சி ஸ்ரீமேற்றளீஸ்வரர்

காஞ்சி ஸ்ரீமேற்றளீஸ்வரர்
இடம்: காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம் எனும் இடத்தில் உள்ளது திருக்கச்சி மேற்றளி.
சிறப்பு: சம்பந்தர் பாடிய பதிகத்தைக்கேட்டு உருகியதால், `ஓத உருகீசர்’ என்றும் இவருக்குச் சிறப்புப் பெயர் உண்டு.
வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்: கவிபாடும் திறமை பெறலாம்.

 

சிவன்

மணக்கால் ஐயம்பேட்டை ஸ்ரீபிரியநாதர்
இடம்: திருவாரூர் - குடவாசல் மார்க்கத்தில், மணக்கால் எனும் ஊரை அடைந்து, அங்கிருந்து வடமேற்கில் சென்றால், இத்தலத்தை அடையலாம்.
சிறப்பு: சுயம்புவான சிவலிங்கத் திருமேனியராக அருள்வது விசேஷம். 
வழிபடுவதால் கிடைக்கும் பலன்: கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். 

 

திருமால்பூர் ஸ்ரீமணிகண்டேஸ்வரர்

திருமால்பூர் ஸ்ரீமணிகண்டேஸ்வரர்
இடம்: காஞ்சியிலிருந்து அரக்கோணம் செல்லும் வழியில், சுமார் 20 கி.மீ. தூரத்தில் உள்ளது, திருமால்பூர். 
சிறப்பு: இத்தலத்துக்கு வருபவர்களுக்கு முக்தி நிச்சயம். 
வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்: இந்தத் தலத்துக்கு வருபவர்கள் புகழும் சகல ஐஸ்வர்யங்களும் பெற்று வாழ்வார்கள்.


 குட்டையூர் ஸ்ரீமாதேஸ்வரர்
குட்டையூர் ஸ்ரீமாதேஸ்வரர்
இடம்: கோவையிலிருந்து மேட்டுப் பாளையம் செல்லும் வழியில் குட்டையூர் உள்ளது
சிறப்பு: பசு வழிபட்ட தலம்.
வழிபடுவதால் கிடைக்கும் பலன்: குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

 

திருவெண்ணெய்நல்லூர் ஸ்ரீஅருள்துறைநாதர்

திருவெண்ணெய்நல்லூர் ஸ்ரீஅருள்துறைநாதர்
இடம்: விழுப்புரத்திலிருந்து சுமார் 21 கி.மீ தொலைவில் உள்ளது திருவெண்ணெய்நல்லூர். 
சிறப்பு: சுந்தரருடன் வழக்காடி சிவனார், அவரைத் தடுத்தாட்கொண்ட தலம். மெய்கண்ட தேவர் வாழ்ந்து உபதேசம் பெற்ற தலம்.
வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்: கல்வி ஞானம் அருளும் தலம்.


டிரெண்டிங் @ விகடன்