மான் மழு தாங்கிய மங்கல மூர்த்தி... பழஞ்சூரில் புதைந்து கிடந்த பழமலைநாதர்! #VikatanPhotoStory

பட்டுக்கோட்டை நகரின் கிழக்கே 7 கி.மீ தொலைவில் உள்ளது பழஞ்சூர் கிராமம். இங்கு 1000 ஆண்டுகளைக் கடந்த பழமலைநாதர் சிவாலயம் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது பதினைந்து ஐம்பொன் விக்கிரகங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்தச் சிலைகள் அனைத்தும் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று தெரிய வருகிறது.  சோழர்களால் கட்டப்பட்ட பழமலைநாதர் கோயில், பிற்காலத்தில் சிதைவுற்று நலிந்து போனது. சோழர்களின் கலைநயம் பொருந்திய ஐம்பொன் சிற்பங்களை அள்ளிச் செல்வதில் அந்நிய மன்னர்கள் பெரிதும் ஆர்வம் காட்டினார்கள். அவர்களிடமிருந்து காக்க, மக்கள் இச்சிலைகளைப் பூமிக்குள் புதைத்து வைத்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். .

 

மண்ணில் மறைந்திருந்து, காலம் கனிந்து வர தன்னைத்தானே வெளிக்காட்டிக்கொண்ட கடவுளர்களின் தொகுப்பு 

விக்கிரங்கங்கள்

எளிய வடிவில் பழமலை நாதர், இவரே விலை மதிக்க முடியாத உற்சவ மூர்த்திகளுக்குச் சொந்தக்காரர். 

பழமலைநாதர்

மான் மழு தாங்கிய மங்கல மூர்த்தி மண்ணிலிருந்து தரிசனம் தர வந்த காட்சி ...

ஐம்பொன் சிலைகள்

மாலும் அயனும் காணக்கிடைக்காத மூர்த்தி, இந்த மண்ணின் அடியில் தவமிருந்தாரோ? ....

சோழர் சிலைகள்

'வேதங்கள் யாவும் பாடிப் பரவும் விமலனை மறைத்தது யாரோ?' என வியக்கும் மக்கள் கூட்டம்.. 

பழஞ்சூர்

ஈசனிடம் இடபாகம் பெற்ற அன்னை சக்தியின் திருமேனியில் இடம் கொண்ட திருமண். சக்திதேவிக்கு பூமிதேவியின் அலங்காரமோ?!   

சக்திதேவி

இன்னுமிருக்குமோ இறைவனின் உருவங்கள் என்ற பதைபதைப்பிலும் எதிர்பார்ப்பிலும் பழஞ்சூர் மக்கள். 

பழமலை நாதர் கோயில்

 'பாதாளம் அதனுள் பாய்ந்த எங்கள் அரனே, எங்கள் சிவனே' என்று தேடும் பக்தர்களுக்கு 'சிக்கும்' சிவபெருமான் .... 

அகழ்வாராய்ச்சி

கங்கையைத் தாங்கிய கருணாமூர்த்தி அடியவர் அபிஷேகத்தில் தூய்மையாகும் காட்சி ...

சோழர் சிவாலயம்

'எத்தனை ஆண்டுகள் தவமோ, இத்தனை கடவுளர்கள் எங்களுக்கு அருள வந்தது!' என வியக்கும் பக்தர்கள் ...

பஞ்சலோக சிலைகள்

 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!