சனிப்பெயர்ச்சி... மிதுன ராசிக்காரர்களுக்கான பலன்கள், வழிபடவேண்டிய தெய்வம்! #SaniPeyarchi2017

சனிப்பெயர்ச்சி

ந்த வருடம் டிசம்பர் மாதம் 19-ம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனீஸ்வர பகவான். அவர் 26.12.20 வரை தனுசு ராசியில் இருந்து பலன்களைத் தரவுள்ளார். இந்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு ராசியினருக்கும் ஏற்படக்கூடிய பலன்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்து, 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம். ஒவ்வொரு ராசியினருக்கும் அவர் கூறிய பலன்களில் இன்று மிதுன ராசி அன்பர்களுக்கான பலன்கள் குறித்து இங்கே பார்ப்போம். 

மிதுனராசி அன்பர்களே, நீங்கள் புதனுடைய ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். உங்களுக்கு சனிபகவான் பாக்கியாதிபதியாக வருகிறார். சனிபகவான் இவ்வளவு நாள்களாக 6 - ம் இடத்திலிருந்து உங்களுக்கு ஓரளவு நல்ல பலன்களைத் தந்துகொண்டு இருந்தவர், இப்போது 7 - ம் இடத்தில் இருந்து உங்களை வழி நடத்தப்போகிறார். 7 -ம் இடம் என்பது சனிபகவானுக்கு  திக் பலம் தரக்கூடிய இடம். இதனால், நீங்கள் முன்பு இருந்ததைவிட சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பிப்பீர்கள். உங்களுடைய ஆளுமைத்திறன் அதிகரிக்கும். இதனால் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்

சனிபகவான் 7 - ம் இடத்தில் இருந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால், உங்கள் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. சர்க்கரை நோய் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உணவுப் பழக்கவழக்கங்களில் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. வயிற்றுத் தொந்தரவு, அலர்ஜி ஆகியவை வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். பொதுவாக 7 -ம் இடம் என்பது மனைவியைக் குறிக்கும். மனைவியின் உடல் நலனில் அக்கறைகொள்ள வேண்டும். ஈகோ பிரச்னையால் சின்னச்சின்ன சச்சரவுகள் வரும் வாய்ப்பு உள்ளது. அதனால் வீண் விவாதங்களைத் தவிர்க்க வேண்டும்.

கிரகங்கள்

சனிபகவான் 3 - ம் பார்வையாக 9 - ம் இடத்தைப் பார்ப்பதால் தேவையற்ற வீண்செலவுகளைத் தவிர்த்திட வேண்டும். 9 - ம் இடம் தந்தையார் ஸ்தானமாகவும் இருப்பதால் அவரது உடல் நலனில் கவனம் செலுத்துங்கள்.  பங்குதாரர்கள், மற்றும் வேலையாட்கள் விஷயத்தில் எச்சரிக்கையோடு செயல்படுங்கள். இப்படிச்சின்னச்சின்ன தடைகள் தடங்கல்கள் இருந்தாலும், உங்கள் முன்னேற்றத்துக்கு எந்தத் தடையும் இருக்காது.

 

 

 

(மிதுன ராசிக்காரர்கள் இந்த வீடியோ லிங்க்கில்... விரிவான பலன்களை அறியலாம்.) 

மிதுன ராசிக்காரர்கள் சனிப்பெயர்ச்சியையொட்டி, கோவை மாவட்டம், காரமடை அருகே இருக்கும் இருளர்பதி என்னும் ஊரில் அருள்பாலிக்கும் சுயம்பு பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபட்டால், நல்ல பலன்களைப் பெறலாம்.
இருளர்பதி வனப்பகுதியில் உள்ள கோயில் என்பதால், கோயிலின் வலப் பக்கத்தில் கன்னிமார், கருப்பராயர்  தெய்வங்களும் இடம் பெற்றுள்ளனர்.  இடப் பக்கம் முனியப்ப சாமி  காவல்தெய்வமாக இருக்கிறார். கோயிலின் வெளியே கணபதியும் வெளிப்பிராகாரத்தில் ஆஞ்சநேயரும் உள்ளனர். 

இருளர்பதி சுயம்பு பெருமாள் கோயில்

இங்குள்ள பெருமாள் சுயம்புவாகத் தோன்றியதால், மிகவும் சக்தி வாய்ந்தவராகப் போற்றப்பெறுகிறார். பக்தர்கள் எண்ணியதை எண்ணியபடி முடித்துத் தருவார் என்பதும் காலம்காலமாக இந்தக் கோயிலுக்கு வந்து வழிபடும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இங்கு வரும் பக்தர்கள் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார்கள். 
மிதுன ராசி அன்பர்கள் இங்கு வந்து பெருமாளை வழிபட்டுச் சென்றால், அவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

 

மேஷம் ராசியினரின் சனிப்பெயர்ச்சிப்பலன்கள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்...

ரிஷபம் ராசியினரின் சனிப்பெயர்ச்சிப்பலன்கள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!