வெளியிடப்பட்ட நேரம்: 18:17 (26/11/2017)

கடைசி தொடர்பு:08:14 (27/11/2017)

சனிப்பெயர்ச்சி... துலாம் ராசிக்காரர்களுக்கான பலன்கள், வழிபட வேண்டிய தெய்வம்! #SaniPeyarchi2017

இந்த வருடம் (2017)  டிசம்பர் மாதம் 19-ம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனீஸ்வர பகவான். அவர் 26.12.20 வரை தனுசு ராசியில் இருந்து பலன்களைத் தர உள்ளார். இந்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு ராசியினருக்கும் ஏற்படக்கூடிய பலன்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்து, 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம். ஒவ்வொரு ராசியினருக்கும் அவர் கூறிய பலன்களில் இன்று துலாம் ராசி அன்பர்களுக்கான பலன்கள் குறித்து இங்கே பார்ப்போம்.

சனிப்பெயர்ச்சி

துலா ராசி அன்பர்களே! உங்களுக்கு எல்லா வகையிலும்  யோகாதிபதியாக இருந்து பலன்களைத் தரக்கூடியவர். கடந்த ஏழரை வருடங்களாக எதை எடுத்தாலும் தோல்வி, எதைத் தொட்டாலும் நஷ்டம், இழப்பு என்கிற நிலைமை. வாய் விட்டுக்கூட யாரிடமும் சொல்ல முடியாத சூழ்நிலை. 
கடைசியாக பாதச்சனியாக இருந்தவர், போகும்போது ஏதாவது கொடுத்துவிட்டுப் போவார் எனப் பார்த்தால் அப்போதும் அவர் எதுவும் செய்யாமல் போய் விட்டார். அவருடைய பகை கிரகமான செவ்வாயின் வீட்டில் இருந்ததால்தான்  அவரால் நன்மை எதையும் செய்ய முடியாமல் போய்விட்டது. 
அந்த நிலைமை எல்லாம் இனி மாறப்போகிறது. இவ்வளவு நாள்களாக 2-ம் இடத்தில் இருந்த சனிபகவான், இப்போது 3-ம் வீட்டுக்குள் நுழைகிறார். 3-வது வீடு முடி சூட்டி வைக்கும். இனி, நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும்.  நினைத்த காரியங்கள் எல்லாம் வெற்றியாக முடியும். 

துலாம்

மனதில் தைரியமும் உற்சாகமும் பிறக்கும். உடல் ஆரோக்கியம் பெறும் . உங்கள் முக அழகு கூடும். வாழ்க்கையில் நீங்கள் மிக முக்கியமான ஒரு இடத்துக்கு நிச்சயம் வருவீர்கள். சகோதரர்கள் உதவுவார்கள். பிரிந்து இருந்த கணவன் மனைவி மீண்டும் ஒன்றாகச் சேருவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி, பொறுப்புகள் தேடி வரும்.  சமுதாயத்தில் உங்களுக்கு  பெரிய அந்தஸ்து உருவாகும். 

 

சனி

வியாபாரிகளுக்கு இத்தனை நாள்களாகத் தடைப்பட்டு வந்த வேலைகள் இனி வேகவேகமாக  நடந்து முடியும். நீண்ட நாள்களாக சொந்த வீடு வாங்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு வீடு வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். மாணவ மாணவிகள் கல்வி கேள்விகளில் சிறப்பாக விளங்குவார்கள். அரசுத் தேர்வுகள் எழுதினால், அதில் தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். 
துலாம் ராசிக்காரர்கள், பெரம்பலூர் மாவட்டம், வெங்கனூரில் அமைந்திருக்கும், அருள்மிகு விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரரை, பிரதோஷ நாளில் வணங்கி வந்தால், மேலும் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

 

 

 

(துலாம் ராசிக்காரர்கள் இந்த வீடியோ லிங்க்கில்... சனிப்பெயர்ச்சியின் விரிவான பலன்களை அறியலாம்.)

 

பெரம்பலூரில் இருந்து ஆத்தூர் செல்லும் சாலையில் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வெங்கனூரர். திருவெங்கை என்றும் இந்த ஊரை அழைப்பார்கள். திருவாரூர் தேர் அழகு... காஞ்சிபுரம் வீதி அழகு... வெங்கனூர் வேலை (சிற்ப வேலை) அழகு என பழந்தமிழ்ப் பாடல் ஒன்று உண்டு. இங்குள்ள சிற்பங்கள் அவ்வளவு அழகாக இருக்கும். கோயிலில் பாதாள விநாயகர், நர்த்தன கணபதி, துர்கை, பிரம்மன் ஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன.


சிவலிங்கம்

தலபுராணம்: 

முன்னொரு காலத்தில் லிங்க ரெட்டியார் என்பவர், விருத்தாசலத்தில் இருக்கும் விருத்தகிரீஸ்வரரைச் சென்று வழிபடுவது வழக்கம். அப்படி ஒருமுறை புறப்பட்டுச் செல்லும் போது, வழியில் உள்ள வெள்ளாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

எப்படிப் போவது என வழிதெரியாமல் நின்றவர், 'வெள்ளம் விலகி வழி விட வேண்டும்' என ஈசனை எண்ணி வழிபட்டார். ஆற்றில் பாதம் நனையும் அளவாக தண்ணீர் குறைந்தது. அவரும் சென்று விருத்தகிரீஸ்வரரை வழிபட்டார். அன்று இரவே அவரது கனவில் தோன்றிய இறைவன், 'வெங்கனூரில் என் மேனி உள்ளது அங்கு ஒரு கோயில் அமைத்து வழிபாடு செய். அங்கிருந்தே நான் உங்களுக்கு அருள்பாலிக்கிறேன்' எனக்கூறி மறைந்தார். அப்படி அமைந்ததுதான் இந்த விருத்தகிரீஸ்வரர் கோயில்.


கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை
 மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை


மேஷம் ராசியினரின் சனிப்பெயர்ச்சிப் பலன்களை படிக்க..இங்கே கிளிக் செய்யவும்...


ரிஷபம் ராசியினரின் சனிப்பெயர்ச்சிப் பலன்களை படிக்க...இங்கே கிளிக் செய்யவும்...


மிதுனம் ராசியினரின் சனிப்பெயர்ச்சிப் பலன்களை படிக்க...இங்கே கிளிக் செய்யவும்...


கடகம் ராசியினரின் சனிப்பெயர்ச்சிப் பலன்களை படிக்க...இங்கே கிளிக் செய்யவும்...


சிம்மம் ராசியினரின் சனிப்பெயர்ச்சிப் பலன்களை படிக்க...இங்கே கிளிக் செய்யவும்...


கன்னி ராசியினரின் சனிப்பெயர்ச்சிப் பலன்களை படிக்க...இங்கே கிளிக் செய்யவும்...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்