வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (29/11/2017)

கடைசி தொடர்பு:18:35 (29/11/2017)

சனிப்பெயர்ச்சி... மகர ராசிக்காரர்களுக்கான பலன்கள், வழிபடவேண்டிய தெய்வம்! #SaniPeyarchi2017

ந்த வருடம் (2017)  டிசம்பர் மாதம் 19-ம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார், சனீஸ்வர பகவான். அவர் 26.12.20 வரை தனுசு ராசியிலிருந்து பலன்களைத் தரவுள்ளார். இந்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு ராசியினருக்கும் ஏற்படக்கூடிய பலன்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்து, 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம். அதன்படி, அவர் சொன்ன மகர ராசிக்காரர்களுக்கான சனிப்பெயர்ச்சிப் பலன்கள், வழிபடவேண்டிய தெய்வம் ஆகியவற்றைப் பார்ப்போம்.

சனிப்பெயர்ச்சி

 மகர ராசி அன்பர்களே! உங்களுடைய ராசிநாதனே சனிபகவான்தான். சனி பகவானுடைய ராசியிலேதான் நீங்கள் பிறந்திருக்கிறீர்கள். அதனால்தான் உங்களுக்கு மற்றவர்களைவிட பொறுமை அதிகமிருக்கிறது. இப்போது உங்களுக்கு சனி பகவான் ஏழரைச்சனியின் தொடக்கமாக, முதல் இரண்டரை ஆண்டுகள் மகரத்தில் இருக்கப்போகிறார். 

கே.பி.வித்யாதரன்முதல் இரண்டரை ஆண்டுகள் வீண் விரயச் செலவுகளை ஏற்படுத்துவார். அதனால்,  உங்களின் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக இருப்பது நல்லது. உங்கள் உடம்பில் கொழுப்புச்சத்து அதிகமாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உப்பு, புளி, காரம் ஆகியவற்றைக் குறைத்துக்கொள்ளுங்கள். வேலைச்சுமை அதிகரிக்கும், தூக்கம் கெடும் வாய்ப்புகள் அதிகம். 

பணம் கொடுக்கல்-வாங்கலில் மற்றவர்களை நம்பி, ஜாமீன் கையெழுத்துப் போடாதீர்கள். பணம் வாங்கித் தருவதில் கவனமாக இருங்கள். 

உங்கள் ராசிநாதனே சனி பகவான் என்பதால், மற்றவர்களைவிட உங்களுக்கு ஏழரைச்சனியின் பாதிப்பு குறைவாகவே இருக்கும். இந்தக் காலகட்டத்தில், 'உங்கள் நண்பர்கள் யார், எதிரிகள் யார்' என்பதைப் புரிந்துகொள்வீர்கள். உறவுக்காரர்களில் உங்கள் மேல் யார் உண்மையான அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதையும் அறிந்துகொள்வீர்கள். 

நீண்டகாலமாக போகவேண்டுமென நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குப் போய் வருவீர்கள். குடும்பத்தினருடன் வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் போய் வரும் வாய்ப்புக் கிடைக்கும். ஏழரைச்சனி தொடங்கி இருப்பதால், மனதுக்குள் சின்னதாக ஒரு பயம் இருந்துகொண்டே இருக்கும். இந்த ஏழரைச்சனி உங்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளியில் கொண்டு வரும்விதமாகவே அமையும்.

 

ராசிகள்


குடும்ப விஷயங்களை, உறவினர்கள், நண்பர்கள், சகஊழியர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாகப் பேசுங்கள். நீங்களும் இன்னும் கொஞ்ச காலம் மற்றவர்களின் சொந்த விஷயங்களில் தலையிடாமல் இருக்கவேண்டும். ஞாபக மறதி சற்று அதிகமாக இருக்கும். அதனால் சின்னச் சின்ன விஷயங்களையும் எழுதி வைத்துக்கொண்டு அதன்படி ஒவ்வொன்றாகச் செய்தால், காரியங்களில் வெற்றி கிடைக்கும். 

வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்துவார்கள். மாணவர்களுக்குப் பாடத்தை எடுத்து வைத்தாலே தூக்கம் தூக்கமாக வரும். அதனால், அவர்கள் காலையிலேயே எழுந்து படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது நல்லது. 
விவசாயிகளுக்குப் புதிதாக நிலம் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். இந்த ஆண்டு மழை நிறைய இருக்கும் என்பதால், தண்ணீர் பிரச்னை இருக்காது. குறிப்பாக, மரப் பயிர்களைப் பயிரிட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.  
மகர ராசிக்காரர்கள், சனி பகவானின் பாதிப்பிலிருந்து விலகி, மேலும் பல நல்ல பலன்களை அடைய, விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் இருக்கும் வாலீஸ்வரரை வழிபட்டுவந்தால். சிறப்பான பலன்களைப் பெறலாம்.

 


(மகர ராசிக்காரர்கள், சனிப்பெயர்ச்சியின் விரிவான பலன்களை அறிய இந்த வீடியோ லிங்க்கை கிளிக் செய்யவும்).

 

விழுப்புரத்திலிருந்து பாண்டிச்சேரி செல்லும் சாலையில், 7 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது, கோலியனூர் வாலீஸ்வரர் கோயில். இங்குள்ள சிவபெருமான், வாலீஸ்வரர்  - பெரியநாயகி சமேதகராக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இந்தக்கோயில் பிராகாரத்தில் முருகன், விநாயகர், லட்சுமி நாராயணருக்கு தனி சந்நிதிகள் அமைந்திருக்கின்றன.

சிவன்


திருநள்ளாறு, குச்சனூர் ஆகிய  ஒரு சில இடங்களில் இருப்பதுபோலவே சனீஸ்வரருக்கு இங்கும் தனி சந்நிதி அமைந்துள்ளது. 
 

தலபுராணம்:

ராமாயண காலத்தில், வாலி தன் தம்பி சுக்ரீவனின் மனைவியைத் தனதாக்கிக் கொண்டதால் ஏற்பட்ட தோஷம் நீங்க, இங்குள்ள சிவபெருமானை வழிபட்டு தோஷம் நீங்கப்பெற்றார். அதனால், `வாலீஸ்வரர்’ என்னும் பெயர் ஏற்பட்டது.


கோயில் நடை திறந்திருக்கும் நேரம்: 

காலை 6 மணியிலிருந்து 12 மணி வரையிலும் மாலை 4 மணியிலிருந்து இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அனைத்து ராசிக்காரர்களுக்குமான சனிப்பெயர்ச்சிப் பலன்கள், வழிபடவேண்டிய தெய்வம் குறித்து முழுமையாக அறிய இங்கே கிளிக் செய்யவும்...

 

மேஷ ராசிக்காரர்களுக்கான சனிப்பெயர்ச்சிப் பலன்களைப் படிக்க...இங்கே கிளிக் செய்யவும்...

ரிஷப ராசிக்காரர்களுக்கான சனிப்பெயர்ச்சிப் பலன்களைப் படிக்க...இங்கே கிளிக் செய்யவும்...

மிதுன ராசிக்காரர்களுக்கான சனிப்பெயர்ச்சிப் பலன்களைப் படிக்க...இங்கே கிளிக் செய்யவும்...

கடக ராசிக்காரர்களுக்கான சனிப்பெயர்ச்சிப் பலன்களைப் படிக்க...இங்கே கிளிக் செய்யவும்...

சிம்ம ராசியினரின் சனிப்பெயர்ச்சிப் பலன்களைப் படிக்க...இங்கே கிளிக் செய்யவும்...

கன்னி ராசிக்காரர்களுக்கான சனிப்பெயர்ச்சிப் பலன்களைப் படிக்க...இங்கே கிளிக் செய்யவும்...

துலாம் ராசிக்காரர்களுக்கான சனிப்பெயர்ச்சிப் பலன்களைப் படிக்க...இங்கே கிளிக் செய்யவும்...

விருச்சிக ராசிக்காரர்களுக்கான சனிப்பெயர்ச்சிப் பலன்களைப் படிக்க...இங்கே கிளிக் செய்யவும்...

தனுசு ராசிக்காரர்களுக்கான சனிப்பெயர்ச்சிப் பலன்களைப் படிக்க...இங்கே கிளிக் செய்யவும்...

சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்களைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்...
 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்