வெளியிடப்பட்ட நேரம்: 16:55 (11/12/2017)

கடைசி தொடர்பு:11:35 (31/01/2018)

தைப்பூச தினத்தில் சந்திரகிரகணம்!

தைப்பூச தினத்தில் சந்திரகிரகணம் வரவிருக்கிறது. இதனால், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நடைதிறக்கும் நேரத்திலும் தேரோட்டம் நடைபெறும் நேரத்திலும் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

palani

பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா வரும் 2018ம் ஆண்டு ஜனவரி 25-ல் தொடங்கி பிப்ரவரி 3-ம் தேதி வரை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஜனவரி 30-ம் தேதியும் தேரோட்டம் ஜனவரி 31-ம் தேதி தைப்பூச தினத்தன்று நடக்கிறது.

2018-ம் ஆண்டு சந்திரகிரகணம் ஜனவரி மாதம் 31-ம் தேதி மாலை 6.22 மணி முதல் இரவு 8.41 மணி வரை நிகழவிருக்கிறது. இதனால் பழனி கோயிலில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் சாயரட்சை பூஜை, மதியம் 2.45 முதல் 3.45 மணி வரை நடைபெறும். அதன் பிறகு கோயில் நடை அடைக்கப்படும். தைப்பூசத்தில் மாலை நேரத்தில் நடைபெறும் தேரோட்டம், சந்திரகிரகணத்தால் பகல் 11.00 மணிக்கு நடக்கவுள்ளது.

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பும் இதேபோல தைப்பூசத்தில் சந்திரகிரகணம் வந்ததாகவும் அதனால் பகலில் தைப்பூசத் தேரோட்டம் நடந்ததாகவும் கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர்.