குன்றுதோறும் ஆடிவரும் குமர வடிவேலன்... ஞானமலை முருகன்! #VikatanPhotoStory | Special Pictures of Gnanamalai Murugan Temple

வெளியிடப்பட்ட நேரம்: 17:09 (16/12/2017)

கடைசி தொடர்பு:17:07 (04/02/2019)

குன்றுதோறும் ஆடிவரும் குமர வடிவேலன்... ஞானமலை முருகன்! #VikatanPhotoStory

குன்றுதோறும் ஆடிவரும் குமரவடிவேலன், எங்கள் குலத்தை காக்கவென்றே அமர்ந்திருக்கும் ஞானமலை. இயற்கையோடு இணைந்து பிரம்ம சாஸ்தா வடிவில் முருகப்பெருமான் அருளாட்சி செய்யும் ஞானமலையின் காட்சிகள் இங்கே.

காடு மலை தாண்டி, கடவுளைத் தேடி..! - பரவசப் பயணம் தொடரைப்படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...

ஞானமலை முருகர்

 

ஞானமே வடிவான ஞானபண்டிதன் வீற்றிருக்கும் ஞானமலையின் தோரண வாயில் மட்டுமில்லை இது, இயற்கை எழில் கொலுவிருக்கும் குறிஞ்சி நிலத்தின் அடையாளமும் இதுதான். 

 

ஞானமலை முருகன்

வள்ளிக்குறமகள் தழுவக்குழைந்த தயாபரன், வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை, நாகமுண்டு தோஷமில்லை என்று நமக்கு அபயம் அருளும் முருகப் பெருமான் அருணகிரிநாதருக்கு அருள் செய்த கோலத்தில் உற்சவ மூர்த்தியாகக் காட்சி தருகிறார். 

ஞானமலை

சிலையாக மட்டுமல்ல, ஈசன் மகிழ்ந்தளித்த முருகன், திருமால்  நேசத்துக்கு உரிய மருகன், இயற்கை வடிவிலும் காணும் இடமெங்கும் பசுமையாகக் காட்சியளிக்கிறான்.

பொன்னியம்மன்

ஞானமலையின் காவல் தெய்வம் பொன்னியம்மன். காலமெல்லாம் காத்தருளும் பொன்னியம்மா, எமைக் கண்போலக் காத்தருள்வாய் கன்னியம்மா..

ஞான சித்தி கணபதி

பரசு, மாங்கனி, கரும்புத்துண்டு, பூங்கொத்து ஏந்திய ஞான சித்தி கணபதி. கணபதி, 'நான் இருக்க கவலைகள் ஏன்?' எனப் புன்னகைக்கிறாரோ!

ஞானமலை படிக்கட்டுகள்

படிகள் ஏற ஏற கவலைகள் கீழே செல்கின்றன, புண்ணியப்பலன்கள் உயர்ந்துகொண்டே செல்கின்றன. ஞானமலையின் படிக்கட்டுகள், ஞானத்துக்கான வாசல்கள்...

ஞானமலை மண்டபம்

ஞானமலையின் அருணகிரிநாதர் யோகாநுபூதி மண்டபம். அருணகிரிக்கு அருளிய ஆறுமுகன் அனைவருக்கும் இளைப்பாறுதல்  தருவான் என்பதை உணர்த்தும் மண்டபம். சுமைகளை மட்டுமல்ல, உங்கள் பாவங்களையும் இங்கே இறக்கி வைத்துவிடலாம்.

தட்சிணாமூர்த்தி

ஆலமர்ச்செல்வன் எங்கள் அகிலாண்டகோடி நாயகன், ஞான தட்சிணாமூர்த்தியாக வீற்றிருக்கும் அருட்கோலம். உன் மௌனமே உபநிடதங்களை உபதேசித்தது என்றால், ஐயனே, உன் புன்னகை என்னதான் சொல்லித்தராது?!

முருகப்பெருமான் ஞானமலை

ஞானவள்ளி, ஞானகுஞ்சரி சமேதராக அலங்கார ரூபத்தில் அழகன் முருகன். மூலவப்பெருமானின் திவ்விய ரூப தரிசனம் இது.

சந்தன அபிஷேகம்

சந்தன அபிஷேகத்தில் சக்திபாலன். குளிரக் குளிரக் காட்சிதரும் குமரவேலன், எங்கள் குறைகளையெல்லாம் தீர்த்தருள வேணும்.

இளநீர் அபிஷேகம்

இளநீர் அபிஷேகத்தில் கணபதியின் இளவல், இன்னல்களைத் தீர்த்து எம்மை காவல் காக்க வேணும்.

சித்தர் சமாதி

ஞானவெளி சித்தர் எனும் பாலை சித்தரின் ஜீவசமாதி. தீராத நோய்களை எல்லாம் தீர்த்துவைத்த மகானின் ஜீவசக்தி உலவும் இடம் இது.

பாலைச் சித்தர்

பாலை சித்தரின் அதிஷ்டானம். ஞானகிரீஸ்வரன் என்ற சிவலிங்க வடிவாக சித்தரின் ஜீவசமாதி வணங்கப்படுகிறது.

முருகன் திருவடி

அருணகிரிநாதருக்கு அருள வந்த முருகப்பெருமானின் திருவடித்தடம். முருகனின் திருவடி அடைந்தார்க்குப் பிறவிப்பிணி ஏதும் உண்டோ?!


டிரெண்டிங் @ விகடன்