வெளியிடப்பட்ட நேரம்: 02:23 (27/12/2017)

கடைசி தொடர்பு:07:37 (27/12/2017)

திருப்பதியில் ஆங்கில புத்தாண்டுக்கு சிறப்பு ஏற்பாடுகள் இல்லை!

"ந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உத்தரவின் படி, ஜனவரி 1-ம் தேதி திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு உள்ளிட்ட எந்தவிதமான ஏற்பாடுகளும் செய்யப்படமாட்டாது" என்று தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அணில்குமார் சிங்கால் அறிவித்திருக்கிறார்.

திருப்பதி

ஆங்கிலப் புத்தாண்டான ஜனவரி 1-ம் தேதி ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் நடத்தப்படும் சிறப்பு ஏற்பாடுகளை ரத்துசெய்ய வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக, தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி அன்று புத்தாண்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் சமீபத்தில் ஆந்திர அறநிலையத் துறை உத்தரவிட்டது. இந்த உத்தரவு ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து பெரிய, சிறிய கோயில்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஆந்திராவில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் உட்பட அனைத்துக் கோயில்களிலும் இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து திருமலையில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அணில்குமார் சிங்கால் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''முதல்வரின் உத்தரவின்பேரில், வரும் ஜனவரி 1-ம் தேதி ஏழுமலையான் கோயில் உட்பட தேவஸ்தானத்தின் பிற கோயில்களிலும் புத்தாண்டு சிறப்பு ஏற்பாடுகள் ரத்துசெய்யப்பட்டுள்ளது. இதற்குப் பதில், உகாதி பண்டிகைக்கு புத்தாண்டு சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க