வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (01/01/2018)

கடைசி தொடர்பு:11:13 (01/01/2018)

சபரிமலையில் ஜனவரி 14-ம் தேதி மகரஜோதி!

Sabarimala

பரிமலை அய்யப்பன் கோயில் மண்டல பூஜைக்காக, நவம்பர் மாதம் 15-ம் தேதி திறக்கப்பட்டது. அதன்பின்னர், பூஜைகள் நடைபெற்று வந்தன. டிசம்பர் 26-ம் தேதி, மண்டல பூஜை நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை ஐயப்பனைத் தரிசித்தனர். மண்டல பூஜைக்குப் பின் டிசம்பர் 26-ம் தேதி இரவு 11 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டது.

இந்நிலையில், மகர விளக்குப் பூஜையை முன்னிட்டு கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. தந்திரி கண்டரரு, மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி உண்ணிக்கிருஷ்ணன் நம்பூதிரி, நடையைத் திறந்தார். வரும் 14-ம் தேதி, சபரிமலையில் மகரவிளக்குப் பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் நிகழ இருக்கிறது.

அப்போது, லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிவார்கள். இப்போதே பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால், போலீஸார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். பம்பை, சபரிமலை, எரிமேலி, நிலக்கல் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.           3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

மகரவிளக்கு பூஜைக்குப் பின்னர், 16-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை படி பூஜை நடக்கும். 20-ம் தேதி, கோயில் நடை அடைக்கப்படும்.