வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (05/01/2018)

கடைசி தொடர்பு:10:51 (08/01/2018)

நாதபிரம்மம் தியாகராஜர் வாழ்ந்த திருவையாற்றில் ஓர் உலா! #VikatanPhotoStory

* சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஶ்ரீதியாகராஜர், ஶ்ரீராமபிரானிடம் அளவற்ற பக்தி கொண்டிருந்தார். ஶ்ரீராமன், சீதை, லட்சுமணன் ஆகியோருடன் தாம் வாழ்ந்துகொண்டிருப்பதாகவே பாவித்த பக்தி அவருடையது. எண்ணற்ற முறை ஶ்ரீராமபிரானின் தரிசனம் பெற்ற ஶ்ரீதியாகராஜர், திருவையாற்றில் ஸித்தி அடைந்தார். திருவையாற்றில் ஶ்ரீதியாகராஜர் ஆராதனை நடைபெறும் வேளையில், ஶ்ரீதியாகராஜரின் கீர்த்தனைகளுடன், திருவையாற்றின் எழில் மிகுந்த காட்சிகளும் இங்கே உங்களுக்காக...


தியாகபிரம்மம்

* ‘ஸ்ரீதியாகராஜரின் கீர்த்தனைகள் இன்னமும் இடைவிடாமல் இங்கே ஒலிக்கின்றனவோ’ என்ற பிரமிப்பை ஏற்படுத்தும் ஸ்ரீதியாகையரின் இல்லம்

காவிரி ஆறு
 

* காவிரி, கொள்ளிடம், குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு என ஐந்து நதிகள் தவழும் திருவையாற்றில் காவிரியின் எழில்காட்சி...


காவிரி ஆறு

* பஞ்சரத்ன கீர்த்தனை பிறந்த திருவையாற்றில் தவழும் காவிரியில் நீராட, பாவங்கள் யாவும் விலகுமே..


ஐயாறப்பர்

* அப்பர் பெருமானுக்குத் திருக்கயிலைக் காட்சி அருளிய ஶ்ரீஐயாறப்பரின் ஆலயத் தோற்றம்


சங்கீத மும்மூர்த்திகள்

* சங்கீத மும்மூர்த்தியரின் எழிலோவியம்...


தியாகராஜர்

* 'எனக்குப் பின்னால் இருந்தாலும் நான் உன்னை அறியமாட்டேனா என்ன?' என்கிறாரோ ஶ்ரீதியாகபிரும்மம்?!


தியாகபிரம்மம் வீடு

 

காவிரி படித்துறையில் அமைந்திருக்கும் புஷ்ய மண்டபம்... அருள்மிகு ஐயாறப்பர் தீர்த்தவாரி கண்டருளும் இடம்.


தியாகய்யர்

* ஶ்ரீதியாகராஜரின் 200-வது பிறந்தநாள் நினைவாக அமைந்த நுழைவாயில் தோற்றம்...


தியாகபிரம்மம்

* பக்தியில் மனம் கனியக் கனிய கீர்த்தனைகள் பாடிய ஶ்ரீதியாகராஜருக்குக் கனிவகைகள் சமர்ப்பணம்...


தீபாராதனை

* ஶ்ரீதியாகராஜர் ஆராதனை விழாவில் ஶ்ரீதியாகராஜருக்கு தீபாராதனை...

தியாகராஜ கீர்த்தனை
 

* 'எந்தரோ மகானுபாவுலு அந்தரிகி வந்தனமு'

இந்தப் புண்ணியபூமியில் அவதரித்த அத்தனை மகான்களுக்கும் என் வந்தனங்கள்


கீர்த்தனை

* 'நிதி சால சுகமா ராமா நு சந்நிதி சால சுகமா'

ஶ்ரீராமபிரானே! நின் சந்நிதியில் சேவை செய்வதுதான் எனக்குச் சுகமே தவிர, செல்வங்களால் எனக்கு சுகம் கிடைக்காது.


தியாகராஜ கீர்த்தனை

* 'சக்கநி ராஜ மார்க்கமுலு உண்டக சந்துல தூரநிலி ஓ மனசா'

ஓ மனமே! சம்சார சாகரத்திலிருந்து கடைத்தேறுவதற்கு ஶ்ரீராமபக்தி என்னும் அகலமான ராஜவீதி இருக்கும்போது, ஏன் தவறான சந்து பொந்துகளில் செல்கிறாய்?


தியாகராஜ கீர்த்தனை

* 'தேவாதிதேவ நேரநம்மிதினி காகனு பாதாப்ஜ பஜனாம்பு மரசின'

நல்லது கெட்டது தெரியாமல் கண்ணுக்கு அழகாகத் தெரிவதையெல்லாம் பற்றிக்கொள்ளும் நாம், அந்தப் பாவத்தோடு பெரிய பாவமாக இறைவனையும் மறந்துவிடுகிறோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்