வெளியிடப்பட்ட நேரம்: 07:22 (22/01/2018)

கடைசி தொடர்பு:07:22 (22/01/2018)

இந்த வார ராசிபலன் ஜனவரி 22 முதல் 28 வரை

ராசி

மேஷம்:

மேஷராசி அன்பர்களே! எதிர்பார்த்ததை விடவும் வருமானம் கூடுதலாகக் கிடைக்கும். சிலருக்குப் புதிய சொத்து வாங்கும் முயற்சி சாதகமாகும். கணவன் - மனைவி இடையில் அன்னியோன்னியம் அதிகரிக்கும். பள்ளி, கல்லூரி கால நண்பர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவியாக இருப்பார்கள். திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும்.

அலுவலகத்தில் சற்று சிரமமான சூழ்நிலையே காணப்படுகிறது. வேலைகளைச் சிறப்பாகச் செய்தாலும் அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். ஒரு சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றம் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.

வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். ஆனால், வியாபாரம் எதிர்பார்த்தபடி இருக்காது.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். சில வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாத சூழ்நிலை அமையும்.

மாணவ மாணவியர்க்குப் படிப்பில் அவ்வளவாக ஆர்வம் இருக்காது. உடல்நலனும் சிறிய அளவில் பாதிக்கப்படக்கூடும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு வீட்டுச் செலவுகளைச் சமாளிப்பது சற்று கடினமாகத்தான் இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 
அசுவினி: 22,25,26,27; பரணி: 22,23,26,27,28; கார்த்திகை: 22,23,24,27,28

அதிர்ஷ்ட எண்கள்: 4,5

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
அசுவினி: 23,24,28; பரணி: 24,25; கார்த்திகை: 25,26

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பாள்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டுப் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்

மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த 
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்கு 
பிணியே பிணிக்கு மருந்தே அமரர்தம் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின்பத்மபாதம் பணிந்த பின்னே

ரிஷபம்:

ரிஷபராசி அன்பர்களே! எதிர்பார்த்ததை விட பணவரவு அதிகரிக்கும். அதே நேரம் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஒரு சிலருக்குச் சிறிய அளவில் ஆரோக்கியக் குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். சிலருக்குப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடமுடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த விற்பனையும் லாபமும் கிடைக்கும். வேலையாள்கள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவியாக இருப்பார்கள்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வருமானமும் கூடுதலாகக் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.

மாணவ மாணவியர்க்கு அவ்வப்போது தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும் என்பதால், படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். ஆனாலும், பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்குக் குடும்பத்தை நிர்வகிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்குக் கிடைக்கும் சலுகைகள் உற்சாகத்தைத் தரும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 
கார்த்திகை: 22,23,24,27,28; ரோகிணி: 23,24,25,28; மிருகசீரிடம்: 22,24,25,26

அதிர்ஷ்ட எண்கள்: 1,5

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
கார்த்திகை: 25,26; ரோகிணி: 22,26,27; மிருகசீரிடம்: 23,27,28

வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டுப் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்

குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள்விசும்பருளும் அருளொடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா எனும் நாமம்

மிதுனம்:

மிதுனராசி அன்பர்களே! வருமானம் திருப்திகரமாக இருக்கும். அலுவலகத்திலும் வீட்டிலும் கூடுதலான பொறுப்புகள் ஏற்படும் என்பதால், உடல் அசதியும் சோர்வும் ஏற்படக்கூடும். திருமண முயற்சிகள் பலிதமாகும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். உடல் நலனில் அக்கறை அவசியம். கணவன் - மனைவி இடையில் அன்னியோன்னியம் அதிகரிக்கும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனாலும் உற்சாகமாகச் செய்து முடித்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். 

வியாபாரத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலையாள்களாலும், பங்குதாரர்களாலும் பிரச்னைகள் ஏற்படக்கூடும். எந்த விஷயத்திலும் அவசரம் வேண்டாம்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகளும் தாமதமும் உண்டாகும். கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள கடுமையாக உழைக்கவேண்டியிருக்கும்.

மாணவ மாணவியரைப் பொறுத்தவரை தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று, பெற்றோரின் பாராட்டுகளைப் பெறுவதுடன், விரும்பிய மேற்படிப்பில் படிக்க இடம் கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு அதிகப் பொறுப்புகளின் காரணமாக அசதியும் சோர்வும் உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகள் அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 
மிருகசீரிடம்: 22,24,25,26; திருவாதிரை: 22,23,25,26,27; புனர்பூசம்: 22,23,24,26,27,28

அதிர்ஷ்ட எண்கள்: 2,7

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
மிருகசீரிடம்: 23,27,28; திருவாதிரை: 24,28; புனர்பூசம்: 25

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நல்லது.
       

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய் 
    மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
    கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் 
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

கடகம்:

கடகராசி அன்பர்களே! பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் மூன்றாம் நபர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் குடும்ப விஷயத்தில் மற்றவர்களைத் தலையிட அனுமதிக்க வேண்டாம். கணவன் - மனைவி ஒருவருக்கு ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. ஒரு சிலருக்கு புண்ணிய தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அதனால் மனதில் சோர்வு உண்டாகும்.ஒரு சிலருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி தரும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு ஓரளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். சக கலைஞர்களிடம் பக்குவமாகப் பழகுவது மிக அவசியம்.

மாணவ மாணவியர்க்குப் படிப்பில் கவனம் செலுத்தமுடியாதபடி உடல்நலன் பாதிக்கப்படும். உரிய சிகிச்சையினால் உடனே நிவாரணம் கிடைத்துவிடும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்குக் குடும்பப் பொறுப்புகள் அதிகரிப்பதால் மன அமைதி குறையும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு உற்சாகமான சூழ்நிலை காணப்படும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 
புனர்பூசம்: 22,23,24,26,27,28; பூசம்: 23,24,25,27,28; ஆயில்யம்: 24,25,26,28

அதிர்ஷ்ட எண்கள்: 1,7

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
புனர்பூசம்: 25; பூசம்: 22,26; ஆயில்யம்: 22,23,27

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.

சிம்மம்:

சிம்மராசி அன்பர்களே! பணவசதி போதுமான அளவு இருந்தாலும் செலவுகளும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். திருமண முயற்சிகள் பலிதமாகும். பழைய கடன்கள் தொல்லை தரக்கூடும் என்பதால், எச்சரிக்கை அவசியம். 

அலுவலகத்தில் உங்கள் வேலைகளைச் சிறப்பாகச் செய்து உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கக்கூடும்.

வியாபாரத்தில் சற்று பிற்போக்கான நிலைமையே காணப்படுகிறது. எதிர்பார்த்தபடி லாபம் கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. எந்தக் காரணத்தை முன்னிட்டும் கடன் வாங்கவேண்டாம்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராதபடி வருமானம் அதிகரிக்கும். 

மாணவ மாணவியர்க்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் கிடைக்கும்.

குடும்ப நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டுள்ள பெண்மணிகளுக்கு மன மகிழ்ச்சி தரும் வாரமாக இருக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை சந்தோஷம் தருவதாக அமையும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 
மகம்: 22,25,26,27; பூரம்: 22,23,26,27,28; உத்திரம்: 22,23,24,27,28

அதிர்ஷ்ட எண்கள்: 1,2

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
மகம்: 23,24,28; பூரம்: 24,25; உத்திரம்: 25,26

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கைதணி விப்பான் விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கிருஷ்ணதுளசி
கண்ணிற் பணிமின் கனிந்து .

கன்னி:

கன்னிராசி அன்பர்களே! வருமானம் எதிர்பார்த்தபடி இருக்காது என்பதால் வெளியில் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்கள் வகையில் குடும்பத்தில் சில பிரச்னைகள் தோன்றலாம். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கணவன் - மனைவி இடையில் அன்னியோன்னியம் அதிகரிக்கும்.

அலுவலகத்தில் பணிகளைச் சிறப்பாகச் செய்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஒரு சிலருக்குப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

வியாபாரம் நல்லபடியே நடக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் முதலிடு செய்வதற்கான கடனுதவி கிடைக்கும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்பார்த்தபடியே நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் திருப்திகரமாக இருக்கும்.

மாணவ மாணவியர்க்குப் பாடங்களில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியரின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் தரும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்குப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சில சிரமங்கள் இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் சலுகைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:
உத்திரம்: 22,23,24,27,28; அஸ்தம்: 23,24,25,28; சித்திரை: 22,24,25,26

அதிர்ஷ்ட எண்கள்: 5,7

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
உத்திரம்: 25,26; அஸ்தம்: 22,26,27; சித்திரை: 23,27,28

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நல்லது.

இல்லக விளக்கது இருள்கெடுப்பது
சொல்லக விளக்கது சோதியுள்ளது
பல்லக விளக்கது பலருங்காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே

துலாம்:

துலாம்ராசி அன்பர்களே! பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷமும் நிம்மதியும் இருக்கும். சகோதரர்கள் வகையில் சங்கடங்கள் உண்டாகும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேர்வர். தம்பதியர் இடையில் அன்னியோன்னியம் அதிகரிக்கும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்கள் உங்களுடைய பணிகளைப் பகிர்ந்துகொள்வது மனதுக்கு ஆறுதலாக இருக்கும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பங்குதாரர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வது அவசியம்.

மாணவ மாணவியர்க்கு மகிழ்ச்சி தரும் வாரமாக இருக்கும். நல்ல மதிப்பெண் பெற்று ஆசிரியர்களிடமும் பெற்றோர்களிடமும் பாராட்டு பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்குப் பிரச்னை இல்லாத வாரம். செலவுக்குத் தேவையான பணம் கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 
சித்திரை: 22,24,25,26; சுவாதி: 22,23,25,26,27; விசாகம்: 22,23,24,26,27,28

அதிர்ஷ்ட எண்கள்: 4,5

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
சித்திரை: 23,27,28; சுவாதி: 24,28; விசாகம்: 25

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

துணையும், தொழும் தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் - பனி மலர்ப் பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில் 
அணையும், திரிபுர சுந்தரி - ஆவது அறிந்தனமே.

விருச்சிகம்:

விருச்சிகராசி அன்பர்களே! தேவையான அளவுக்குப் பணவரவு இருக்கும். சகோதரர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். குடும்பம் மற்றும் பிள்ளைகளின் திருமணம் தொடர்பான முக்கிய முடிவுகளை இந்த வாரம் எடுப்பது சாதகமாக முடியும். ஒரு சிலருக்கு உணவு தொடர்பான வயிற்று பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலையே காணப்படுகிறது. உங்கள் பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த விற்பனையும், லாபமும் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாள்களின் ஒத்துழைப்பு ஓரளவுக்குத்தான் இருக்கும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடை தாமதம் ஏற்படும். சக கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

மாணவ மாணவியர்க்குப் படிப்பில் ஆர்வம் இருக்காது. தேவையற்ற எண்ணங்களால் மனக்குழப்பம் ஏற்படும். 

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு ஓரளவு மகிழ்ச்சியான வாரமாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 
விசாகம்: 22,23,24,26,27,28; அனுஷம்: 23,24,25,27,28; கேட்டை: 24,25,26,28

அதிர்ஷ்ட எண்கள்: 1,3

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
விசாகம்: 25; அனுஷம்: 22,26; கேட்டை: 22,23,27

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

பரிகாரம்: தினமும் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

வடிவேறு திரிசூலம் தோன்றும் தோன்றும் வளர்சடைமேல் இளமதியம் தோன்றும்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும் காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும் எழில்திகழும் திருமுடியும் இலங்கித்தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே

தனுசு:

தனுசுராசி அன்பர்களே! பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல் நலம் சீராகும். வாழ்க்கைத் துணையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம். திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளுக்கு வரன் தேடும் முயற்சியை இந்த வாரம் மேற்கொள்ளலாம். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். ஆனாலும், அதிகாரிகளின் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும். பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். கடையை வேறு இடத்துக்கு மாற்றும் முயற்சி நல்லபடி முடியும். பங்குதாரர்களை அனுசரித்துச் செல்லவும்.

கலைத்துறை அன்பர்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்வது அவசியம். சக கலைஞர்களுடன் பக்குவமாகப் பழகுவது எதிர்காலத்துக்கு நல்லது.

மாணவ மாணவியர்க்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது கவனமாகக் கேட்பது அவசியம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு ஓரளவுக்கு மன நிம்மதி தரும் வாரம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 
மூலம்: 22,25,26,27; பூராடம்: 22,23,26,27,28; உத்திராடம்: 22,23,24,27,28

அதிர்ஷ்ட எண்கள்: 2,4

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
மூலம்: 23,24,28; பூராடம்: 24,25; உத்திராடம்: 25,26

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

விழிக்குத் துணை திருமென் மலர்ப் பாதங்கள்! மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்! முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும்! பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!

மகரம்:

மகரராசி அன்பர்களே! வருமானம் திருப்திகரமாக இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம் வயிறு சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கணவன் - மனைவி இடையில் அன்னியோன்னியம் அதிகரிக்கும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் என்று சொல்லமுடியாது. உங்கள் பணிகளை நீங்களே முடிப்பது நல்லது. 

வியாபாரத்தில் கடுமையாகப் பாடுபடவேண்டி இருக்கும். பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். பங்குதாரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் கிடைப்பதில் தடை தாமதம் ஏற்படும். எதிர்பார்த்தபடி வருமானம் கிடைப்பதில் பிரச்னை இருக்காது.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். 

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சியான வாரமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் உற்சாகம் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்குப் பணிச் சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது தாமதமாகும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 
உத்திராடம்: 22,23,24,27,28; திருவோணம்: 23,24,25,28; அவிட்டம்: 22,24,25,26

அதிர்ஷ்ட எண்கள்: 3,5

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
உத்திராடம்: 25,26; திருவோணம்: 22,26,27; அவிட்டம்: 23,27,28

வழிபடவேண்டிய தெய்வம்:  சிவபெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

பித்தா பிறை சூடி, பெருமானே அருளாளா
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்துறையுள்
அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனல் ஆமே

கும்பம்:

கும்பராசி அன்பர்களே! பணவரவு எதிர்பார்த்தபடி இருக்காது. அதேநேரம் தேவையற்ற செலவுகளும் ஏற்படாது.. அந்நியர்களால் குடும்பத்தில் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை. ஒருசிலருக்குச் சிறிய அளவில் ஆரோக்கியம் பாதிக்கப்படும். வழக்குகள் எதுவும் இருந்தால் உங்களுக்குச் சாதகமாக  முடியும். 

அலுவலகத்தில் வழக்கமான பணிகளையும் கூடுதல் கவனத்துடன் செய்வது அவசியம். சிறு தவறுகள் ஏற்படவும் அதனால் நிர்வாகத்தின் கண்டனத்துக்கு உள்ளாகவும் கூடும். சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதமாகக் கிடைக்கும். 

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் வருமானம் எதிர்பார்த்தபடி இருக்காது. மூத்த கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

மாணவ மாணவியர்க்கு விரும்பிய மேற்படிப்பில் சேருவதற்கு கடின முயற்சி தேவைப்படும். சிலரின் சிபாரிசை நாடவேண்டியிருக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்குச் சற்று அமைதி குறைவான வாரம். பொறுமையும் சகிப்புத்தன்மையும் அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது தள்ளிப்போகும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 
அவிட்டம்: 22,24,25,26; சதயம்: 22,23,25,26,27; பூரட்டாதி: 22,23,24,26,27,28

அதிர்ஷ்ட எண்கள்: 1,4

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
அவிட்டம்: 23,27,28; சதயம்: 24,28; பூரட்டாதி: 25

வழிபடவேண்டிய தெய்வம்: மகா விஷ்ணு

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நல்லது.

நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான் 
தன்னையே தான்வேண்டும் செல்வம்போல் மாயத்தால் 
மின்னையே சேர்திகிரி விற்றுவக்கோட்டம்மானே 
நின்னையே தான்வேண்டி நிற்பனடியேனே 

மீனம்:

மீனராசி அன்பர்களே! பணவரவு சுமாராகத்தான் இருக்கும். அதனால் மன உளைச்சல் ஏற்பட்டு அன்றாடப் பணிகளில் கவனத்துடன் ஈடுபடமுடியாது. கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அதனால் உடல் அசதியும் சோர்வும் உண்டாகும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் அனுசரணையாக இருப்பார்கள்.

வியாபாரத்தில் சில பிரச்னைகளைச் சமாளிக்கவேண்டியிருக்கும். பணியாளர்களிடம் தேவையான ஒத்துழைப்பை எதிர்பார்க்கமுடியாது. பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும், சூழ்நிலையின் காரணமாக வாய்ப்புகளைப் பயன்படுத்தமுடியாமல் போகும்.

மாணவ மாணவியர்க்குப் படிப்பில் ஆர்வம் உண்டாகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். ஆசிரியர்களின் பாராட்டுகள் கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு ஓரளவு நிம்மதி தருவதாக அமையும். அலுவலகத்தில் இறுக்கமான சூழ்நிலை காணப்படும். பொறுமையாக இருப்பது அவசியம்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:
பூரட்டாதி: 22,23,24,26,27,28; உத்திரட்டாதி: 23,24,25,27,28; ரேவதி: 24,25,26,28

அதிர்ஷ்ட எண்கள்: 2,9

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
பூரட்டாதி: 25; உத்திரட்டாதி: 22,26; ரேவதி: 22,23,27

வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

விண்கடந்த சோதியாய்விளங்கு ஞான மூர்த்தியாய்
பண்கடந்த தேசமேவு பாவநாச நாதனே
எண்கடந்த யோகினோடி ரந்துசென்று மாணியாய்
மண் கடந்த வண்ணம்நின்னை யார்மதிக்க வல்லரே.