வெளியிடப்பட்ட நேரம்: 06:38 (13/02/2018)

கடைசி தொடர்பு:07:29 (13/02/2018)

இது காதலர்களின் மாதம்... கனவுகள் கைகூடுமா? - மாசி மாத ராசிபலன்! துலாம் முதல் மீனம் வரை

ராசிபலன்

                                                           ( முதல் ஆறு ராசிகளுக்கான பலன்களைப் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்)

 

துலாம்துலாம் ராசி அன்பர்களே!

5 -ல் சூரியன், 2-ல் குரு(வ), 2, 3 -ல் செவ்வாய், 5, 6 -ல் புதன், சுக்கிரன், 3-ல் சனி, 10-ல் ராகு, 4-ல் கேது உள்ளனர்.

திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். நண்பர்களும் அனுகூலமாக இருப்பார்கள். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். தெய்வ பக்தி அதிகரிக்கும். எடுத்த செயலை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி, சுமுகமான சூழ்நிலை உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். மாதப் பிற்பகுதியில் குடும்பப் பெரியவர்களால் நன்மைகள் நடக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். ஆண்களுக்கு பெண்களாலும் பெண்களுக்கு ஆண்களாலும் நன்மைகள் ஏற்படும். சிலருக்கு புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். ஆனால், குரு 4-ல் இருப்பதால், உடல்நலனில் கவனம் தேவைப்படுகிறது. தாயாருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும்.அவருடைய உடல் ஆரோக்கியமும் சிறிய அளவில் பாதிக்கப்பட்டு, உடனே சரியாகிவிடும். தாய்வழி உறவினர்களிடம் அனுசரனையாக நடந்துகொள்ளவும்.

அலுவலகத்தில் அதிக பணிச்சுமை ஏற்படுவதால், மனதில் சோர்வும், உடல் அசதியும் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்துப் போவது எதிர்காலத்துக்கு நல்லது. சிலருக்கு திடீர் இடமாற்றம்,. பணிமாற்றம் ஏற்படக்கூடும். எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைப்பதில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும்.

தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலையே காணப்படுகிறது. உழைப்புக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலை காணப்படுகிறது. ஆனாலும், மறைமுகப் பிரச்னைகளைச் சமாளிக்கவேண்டி இருக்கும். மாதப் பிற்பகுதியில் கொடுக்கல் - வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கை அவசியம்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் சாமர்த்தியமாகப் பேசி வாய்ப்புகளைப் பெறுவார்கள். ஆண் கலைஞர்களுக்கு பெண் கலைஞர்களாலும், பெண் கலைஞர்களுக்கு ஆண் கலைஞர்களாலும் நன்மைகள் ஏற்பட சாத்தியம் உள்ளது.

மாணவ மாணவியர்க்கு பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. தேவையற்ற சகவாசத்தைத் தவிர்க்கவேண்டியது அவசியம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதை கூடும். கணவரின் அன்பும் அவர் வழி உறவினர்களால் நன்மைகளும் ஏற்படும். சிலருக்கு வெளியூர் புண்ணிய தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

காதல் வெற்றி பெறும். காதலின் காரணமாக திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படவும் கூடும். மாதப் பிற்பகுதியில் காதலர்களுக்கிடையே மனவருத்தம் ஏற்படக்கூடும் என்பதால், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.
 

நல்ல நாள்: பிப்ரவரி 18,19,20,21,22,27,28, மார்ச் 1,2,6,7,10,11,12

சந்திராஷ்டம நாள்: பிப்ரவரி 23,24

அதிர்ஷ்ட எண்கள்: 3,4

பரிகாரம்: வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு

தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு

வெள்ளியன்று மகாலட்சுமிக்கு நெய் விளக்கு

 

விருச்சிகம்விருச்சிகராசி அன்பர்களே!

4 -ல் சூரியன். 1-ல் குரு(வ), 1, 2-ல் செவ்வாய், 4, 5 -ல் -ல் புதன், சுக்கிரன், 2-ல் சனி, 9-ல் ராகு, 3-ல் கேது உள்ளனர்.

பணவரவு கணிசமாக உயரும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதையும் சாதிக்கவேண்டும் என்ற மன உறுதி ஏற்படும். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு, புதிய வாகனம் வாங்குவீர்கள். கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். குடும்பத்துடன் விருந்து விசேஷங்களுக்குச் சென்று வருவீர்கள். உறவினர்களால் உதவி கிடைக்கும் அதே நேரத்தில் அவர்களால் சிறு உபத்திரவமும் ஏற்படலாம். உறவினர்கள் வகையில் சற்று பக்குவமாக நடந்துகொள்வது நல்லது. வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். வாழ்க்கைத்துணை வழி உறவுகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் மத்தியில் உங்கள் கௌரவம் ஒரு படி உயரும்.

அலுவலகத்தில் இது வரை இருந்து வந்த இறுக்கமான சூழ்நிலை மாறும். உங்கள் பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். நிர்வாகத்தினரிடம் எதிர்பார்த்த கோரிக்கைகள் நிறைவேறும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சுமாராகத்தான் கிடைக்கும். மாத முற்பகுதியில் வீண் விரயம் ஏற்பட சாத்தியமுள்ளது. புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதுடன், வியாபாரத்தை விரிவு படுத்தும் முயற்சிகளையும் தவிர்க்கவும். சக வியாபாரிகளால் மறைமுகப் போட்டிகளைச் சந்திக்க நேரிடலாம். அரசாங்க வகையில் கிடைக்கவேண்டிய அனுமதிகள் கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படலாம்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்த புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பட்டங்களும் விருதுகளும் பெறும் வாய்ப்பு உண்டாகும். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள். தொழில் சம்பந்தமாக பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பல வகைகளிலும் முன்னேற்றம் தரும் மாதமாக இருக்கும். புகுந்த வீட்டு உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். கணவரின் பாராட்டுகள் கிடைக்கும்.அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு சிறப்பான பலன்கள் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கக்கூடும்.

காதலர்களுக்கிடையே பரஸ்பரம் அன்பு அதிகரிக்கும். காதலால் அனுகூலம் உண்டாகும். ஒருவருக்கொருவர் விலையுயர்ந்த பரிசுப் பொருள்களைப் பரிமாறிக்கொண்டு மகிழ்ச்சி அடைவார்கள்.
 

நல்ல நாள்: பிப்ரவரி 13,14,15,21,22,23,24, மார்ச் 1,2,3,4,5,8,9,13,14

சந்திராஷ்டம நாள்: பிப்ரவரி 25,26

அதிர்ஷ்ட எண்கள்: 7,9

பரிகாரம்: சனிக்கிழமை பெருமாளுக்கு துளசி அர்ச்சனை

வெள்ளியன்று ராகு காலத்தில் நாகர் வழிபாடு

செவ்வாயன்று முருகனுக்கு பாலாபிஷேகம்

 


 

தனுசுதனுசு ராசி அன்பர்களே!

3 -ல் சூரியன், 12-ல் குரு(வ), 12, 1 -ல் செவ்வாய், 3, 4 -ல் புதன், சுக்கிரன், 1-சனி, 8-ல் ராகு, 2-ல் கேது உள்ளனர்.

மகிழ்ச்சியும் பல வகைகளிலும் வளர்ச்சியும் தரும் மாதமாக அமையும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் அனைத்துமே மிக எளிதாக வெற்றி அடையும். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதுடன், எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். குடும்பத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவார்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். சுபநிகழ்ச்சிகளை திட்டமிட்டபடியே நடத்தி முடிப்பீர்கள். உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். சிலருக்கு வெளிமாநிலங்களில் உள்ள புகழ் பெற்ற புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். இதுவரை இருந்த உடல் உபாதைகள் நீங்கி, உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான திருப்புமுனை மாதமாக இந்த மாதம் அமையும்.

அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். உயர் அதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுப்பார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். உங்களுடைய கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். மாதப் பிற்பகுதியில் சக வியாபாரிகளால் மறைமுகப் போட்டிகள் ஏற்படக்கூடும். பற்று வரவில் கவனம் தேவை.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு நல்ல நல்ல வாய்ப்புகளும், தாராளமான பணவரவும் கிடைக்கும். பொது நிகழ்ச்சிகளில் கௌரவிக்கப்படுவீர்கள். புகழும், ரசிகர்களிடம் செல்வாக்கும் அதிகரிக்கும்.

மாணவ மாணவியர், மனத்தெளிவு பெற்று ஓரளவு படிப்பில் கவனம் செலுத்த முயற்சி செய்வீர்கள். ஆசிரியர்களின் ஆலோசனைகள் பயன் தருவதாக இருக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதம். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு பல வகைகளிலும் அனுகூலமான மாதம் இது.

காதலை வெளிப்படுத்த மிகவும் உகந்த காலம். மாதம் முழுவதுமே காதலர்களுக்குப் பல வகைகளிலும் மகிழ்ச்சி தருவதாக அமையும். காதலர்களுக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
 

நல்ல நாள்: பிப்ரவரி 16,17,23,24,25,26, மார்ச் 3,4,5,6,7,10,11,12

சந்திராஷ்டம நாள்: பிப்ரவரி 27,28

அதிர்ஷ்ட எண்கள்: 4,6

பரிகாரம்: ஞாயிறு ராகு காலத்தில் பைரவர் தீபம்

புதன் கிழமைகளில் குலதெய்வ தரிசனம்

வியாழனன்று ராகவேந்திரர் வழிபாடு


 

மகரம்மகரம் ராசி அன்பர்களே!

2 -ல் சூரியன், 11-ல் குரு(வ), 11, 12 -ல் செவ்வாய், 2, 3 -ல் புதன், சுக்கிரன், 12-ல் சனி, 7-ல் ராகு, 1-ல் கேது உள்ளனர்.

புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். அரசாங்க விவகாரங்கள் சாதகமாக முடியும். குருபகவானின் பார்வைகள் சாதகமாக இருப்பதால், திருமணம், வளைகாப்பு போன்ற சுபநிகழ்ச்சிகள் நல்லபடி நடைபெறும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆனால், உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்.

குடும்பத்தில் சிற்சில பிரச்னைகள் ஏற்பட்டு மன அமைதியை பாதிக்கக்கூடும். கூடுமானவரை மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிக்கவும். எந்த ஒரு செயலையும் ஒருமுறைக்குப் பலமுறை போராடித்தான் முடிக்கவேண்டி இருக்கும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எந்த ஒரு வேலையையும் சற்று கஷ்டப்பட்டுத்தான் முடிக்கவேண்டி இருக்கும். தீவிர முயற்சியின் பேரிலேயே உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்களால் ஓரளவு உதவி உண்டு.

தொழில், வியாபாரத்தில் கூடுதலாக உழைக்கவேண்டும். ஆனால், அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. பங்குதாரர்களால் வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புகழும் கௌரவமும் அதிகரிக்கும். சிலருக்கு விருது களும் பட்டங்களும் கிடைக்கும்.

மாணவ - மாணவியர்க்கு படிப்பில் இருந்த தேக்க நிலை மாறும். பாடங்களை ஆர்வத்துடன் கவனிப்பீர்கள். ஆசிரியர்களின் கேள்விகளுக்கு உரிய பதில்களைக் கூறி, பாராட்டு பெறுவீர்கள். ஆனாலும், நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாகவே இருக்கும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சிரமம் எதுவும் இருக்காது. அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு பணிகளில் கூடுதல் கவனம் தேவை.

காதலில் வெற்றி உண்டாகும். காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். ஒருவர் முயற்சிக்கு மற்றவர் உறுதுணையாக இருப்பார். 

நல்ல நாள்: பிப்ரவரி 13,14,15,18,19,20,23,24,25,26,27,28, மார்ச் 6,7,9,13,14

சந்திராஷ்டம நாள்: மார்ச் 1,2

அதிர்ஷ்ட எண்கள்: 6,7

பரிகாரம்: வெள்ளியன்று காளிக்கு அர்ச்சனை

தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு

வியாழனன்று தட்சிணாமூர்த்தி தரிசனம்


 

கும்பம்கும்பம் ராசி அன்பர்களே!

1-ல் சூரியன், 10 -ல் குரு(வ), 10, 11-ல் செவ்வாய், 1, 2-ல் புதன், சுக்கிரன், 11-சனி, 6-ல் ராகு, 12-ல் கேது உள்ளனர்.

அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும். பணவரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். தெய்வ பக்தியும் ஆன்மிகத்தில் நாட்டமும் அதிகரிக்கும். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பும் ஏற்படும். பெண்களால் பொருள் சேர்க்கை உண்டாகும். ஆனாலும், உறவினர்களால் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கூடுமானவரை அளவோடு பேசவும். கணவன் - மனைவிக்கு இடையில் சிறுசிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால், குடும்பத்தில் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக்கூடும். நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படக்கூடும்.

அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். ஆனாலும், பணிச்சுமை அதிகரிக்கவே செய்யும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு வேலையில் இடமாற்றமும் ஊர்மாற்றமும் ஏற்பட வாய்ப்பு உண்டாகும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் மாத முற்பகுதியில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் படிப்படியாக உயரும். ஆனால், முன்பின் தெரியாதவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டாம். ஷேர் மூலம் ஆதாயம் வரும்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு தடைப்பட்ட வாய்ப்புகள் கைகூடி வரும். வருமானமும் அதிகரிக்கும். பாராட்டுகள் குவியும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.

மாணவ - மாணவியர் படிப்பில் கூடுதல் கவனம் எடுத்துப் படிக்கவேண்டியது அவசியம். பொழுதுபோக்குகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. ஆசிரியர்கள் பாடங்கள் நடத்தும்போது கூர்ந்து கவனிப்பது அவசியம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு குடும்பத்தை நிர்வகிப்பதில் சற்று சிரமம் இருக்கவே செய்யும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு வேலைச்சுமை கூடுதலாக இருக்கும்.

தாங்கள் விரும்பும் நபரிடம் காதலை வெளிப்படுத்தத் தயங்கவேண்டாம். இப்போது விட்டுவிட்டால், பிறகு அதற்கான சந்தர்ப்பம் அமைய வாய்ப்பு ஏற்படாமல் போகக்கூடும். ஏற்கெனவே காதலித்துக்கொண்டிருப்பவர்கள், தங்கள் காதலின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்திக்கொண்டே இருப்பது அவசியம்.
 

நல்ல நாள்: பிப்ரவரி 16,17,21,22,27,28, மார்ச் 1,2,8,9,10,11,12

சந்திராஷ்டம நாள்: மார்ச் 3,4,5

அதிர்ஷ்ட எண்கள்: 1,9

பரிகாரம்: ஞாயிறன்று காலையில் சூரிய நமஸ்காரம்

செவ்வாயன்று துர்க்கைக்கு எலுமிச்சை தீபம்

சனிக்கிழமையில் தர்ம சாஸ்தா வழிபாடு

 

மீனம் ராசி பலன்மீன ராசி அன்பர்களே!

12-ல் சூரியன், 9 -ல் குரு(வ), 9, 10 -ல் செவ்வாய், 12, 1-ல் புதன், சுக்கிரன், 10-ல் சனி, 5-ல் ராகு, 11-ல் கேது உள்ளனர்.

பணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். முன்னேற்றத்துக்கான வழிவகைகள் பிறக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் சிலருக்கு புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நவீன ரக மின்சார, மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகள் வழியில் பெருமைப்படத்தக்க செய்திகளைக் கேட்பீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். ஆனால், மாதப் பிற்பகுதியில் உறவினர்களால் குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். குடும்ப விஷயங்களில் அவர்களின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால்,கவனமாகச் செல்வதன் மூலம் விபத்துகளைத் தவிர்க்கலாம்.

அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு பதவி மாற்றமும், இட மாற்றமும் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சக ஊழியர்களிடமும் போதுமான ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது. மாதப் பிற்பகுதியில் ஓரளவு அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததை விடவும் குறைவாகவே கிடைக்கும். மறைமுக எதிரிகளால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதுவும் இந்த மாதம் வேண்டாம். மாதப் பிற்பகுதியில் ஓரளவுக்கு நன்மைகளை எதிர்பார்க்கலாம்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்தபடியே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத் தாகும். நியாயமாக உங்களுக்குக் கிடைக்கவேண்டிய பாராட்டுகள் மறுக்கப்படும். மாதப் பிற்பகுதியில் நிலைமை சீராகும். புகழும் கௌரவமும் ஒருபடி உயரும். பரிசுகளும் பாராட்டுகளும் கிடைக்கும்.

மாணவ - மாணவியர்க்கு பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. கஷ்டப்பட்டு படித்தால்தான், பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெற முடியும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாகவே இருக்கும்.உறவினர்களுடன் இணக்கமான சூழ்நிலையே காணப்படுகிறது. குடும்ப உறுப்பினர்கள் உங்கள் ஆலோசனைகளுக்கு மதிப்பு தருவார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

காதலர்களுக்கு பல வகைகளிலும் மகிழ்ச்சியும், ஆதாயமும் தரும் மாதமாக அமையும். காதலர்கள் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் பரிசுப் பொருள்களைப் பரிமாறிக்கொண்டு மகிழ்ச்சி அடையும் சந்தர்ப்பம் அடிக்கடி ஏற்படக்கூடும்.

நல்ல நாள்: பிப்ரவரி 13,14,15,18,19,20,23,24, மார்ச் 1,2,3,4,5,10,11,12,13,14

சந்திராஷ்டம நாள்: மார்ச் 6,7

அதிர்ஷ்ட எண்கள்: 2,7

பரிகாரம்: செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம்

ஞாயிறன்று ராகு காலத்தில் பைரவர் வழிபாடு

பிரதோஷத்தன்று சிவனுக்கு நெய் தீபம்


 


 


 


டிரெண்டிங் @ விகடன்