மகா சிவராத்திரி... மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் குவிந்த மக்கள்!

மகாசிவராத்திரி, maha shivarathiri

மகா சிவராத்திரியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் பக்தர்கள் விடிய விடிய வழிபாடுசெய்தனர். தமிழக சிவன் கோயில்களில் பிரசித்திபெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில், சென்னை மற்றும் வெவ்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் வந்து குவிந்தனர். இரவு முழுவதும் பக்தர்கள் அங்குதங்கி சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

மகாசிவராத்திரி, maha shivarathiri

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், சிதம்பரம் நடராஜர் திருக்கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் என தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் சிவராத்திரி வழிபாடுகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. ஏராளமான பக்தர்கள் வழிபட்டுவருகின்றனர்.

maha shivarathiri, சிவராத்திரி

இதற்கான முன் ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட நிர்வாகமும், கோயில் நிர்வாகமும் இணைந்து செய்துள்ளன. போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மகா சிவராத்திரியின் மூன்றாம் காலத்தில் சிவபெருமானை வழிபட்டால், எத்தகைய பாவம் செய்திருந்தாலும் அது நம்மை விட்டு விலகிப்போகும் என்பது ஐதீகம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!