சிவகங்கையில் தேரோட்ட விழா..!

சிவகங்கை மாவட்டம் கல்லலில் அமைந்துள்ள, அருள்மிகு ஸ்ரீ சௌந்திரநாயகி, சமேத, சோமசுந்தரேஸ்வரா் ஆலயத்தில், மாசி மகத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் சீரும் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு இரு தேர்களை வடம் பிடித்து இழுத்தனா்.

கல்லல் தேரோட்டம்

கல்லலில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சௌந்திரநாயகி சமேத சோமசுந்தரேஸ்வரா் ஆலயம், சிவகங்கை தேவஸ்தானம், சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட திருக்கோயிலாகும். இக்கோயிலில் கடந்த 21 ம் தேதி கொடியேற்றத்துடன் மாசி மக திருவிழா துவங்கியது. அதனை தொடர்ந்து, உற்ச்சவர், ஸ்ரீ சோமசுந்தரேஸ்வரா் மற்றும் ஸ்ரீ சௌந்திரநாயகி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சுவாமி வீதி உலா புறப்பாடுகள் நடைபெற்றது. 9 ம் திருநாளன இன்று, பெரிய தேரில் ஸ்ரீ சோமசுந்தரேஸ்வரரும், பிரியாவிடை அம்மனும் எழுந்தருள, சிறிய தேரில் ஸ்ரீ சௌந்திரநாயகி அம்மன் எழுந்தருளினார்.

இதில் சுற்று வட்டார 22 கிராமத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சிவாய நம கோஷத்துடன் நான்கு மாட வீதிகள் வழியாக தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனா். தேர் நிலையை அடைந்ததும் சுவாமி அம்மனுக்கு தீபராதனைகள் காட்டப்பட்டு, பக்தா்களுக்கு பழங்கள் சூரை வீசப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிக்கு சூரையாடப்பட்ட பழங்களை எடுப்பத்தில் ஆர்வத்தோடு காணப்பட்டார்கள்.இந்த விழாவில் ஏராளமான கலந்துகொண்டு பக்தர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!