தென் காளஹஸ்தியில் மாசி மகா உற்சவ விழா! - களைகட்டிய திருக்கல்யாண திருவிழா

தென் காளஹஸ்தி என்று சிறப்புடன் அழைக்கப்படும் தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் ஞானம்பிகை திருக்கோயிலில் நேற்று (28/02/2018)  மாசி மகா உற்சவ விழா சிறப்பாக நடைபெற்றது. தென் மாவட்டங்களின் ராகு கேது பரிகார ஸ்தலமாக விளங்கும் இத்திருத்தலத்தில் ஆண்டு தோறும் கொண்டாடப்படும் மாசி மகா உற்சவ விழா மிகவும் பிரசித்தம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மாசி மகா உற்சவ திருவிழா 18.2.2018 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் ஒவ்வொரு நாள்களிலும் ஒவ்வொரு சமுதாய மண்டகப்படியுடன் தெடர்ந்து 10 நாள்கள் விழா நடைபெற்றது. 11-ம் நாளான நேற்று அருள்மிகு ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் ஞானம்பிகை திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பள்ளியறை பூஜையும், இன்று சுவாமி நகர்வலம் நிகழ்ச்சியான ரத உற்சவ திருவிழா நடைபெற உள்ளது. திருக்கல்யாண திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!