தூத்துக்குடி சங்கரராமேஷ்வரர் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

தூத்துக்குடி, அருள்மிகு பாகம்பிரியாள் அம்பிகை உடனுறை சங்கரராமேஷ்வரர் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

தூத்துக்குடி, அருள்மிகு பாகம்பிரியாள் அம்பிகை உடனுறை சங்கரராமேஷ்வரர் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

 தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பாகம்பிரியாள் அம்பிகை உடனுறை சங்கரராமேஷ்வரர் திருக்கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 5.30 மணிக்கே திருக்கோயில் நடை திறக்கப்பட்டது. காலை கொடிப்பட்டம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து, கொடி மரத்தில் கொடிப்பட்டம் ஏற்றப்பட்டது. பின்னர், அபிசேகம், புஷ்ப அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. 

இன்று தொடங்கி, வரும் 28-ம் தேதி வரை 10 நாள்கள் திருவிழா நடைபெறுகிறது. இந்த 10 நாள்களில் தினமும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம் நடைபெறுகிறது. இந்த நாள்களில், சுவாமி - அம்பாள் காலை மற்றும் மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 3-ம் நாள் திருவிழாவான வரும் 21-ம் தேதி, திருஞான சம்பந்தருக்கு `ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சி’ நடைபெறும். 

7-ம் நாள் திருவிழாவான வரும் 25-ம் தேதி காலை 10 மணிக்கு நடராஜருக்கு உருகு சட்ட சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 10-ம் நாள் திருவிழாவான வரும் 28-ம் தேதி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் பெரிய தேரில் பாகம்பிரியாள் அம்பிகை மற்றும் சங்கரராமேஷ்வரரும் சிறிய தேரில் விநாயகரும் சண்முகரும் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் பவனி வருதல் நடைபெறுகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு காலை முதல் மாலை வரை திருக்கோயில் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெறுகிறது. விழா நாள்களில் தினமும் மாலை பல்வேறு தலைப்புகளில் ஆன்மிகச் சொற்பொழிவுகளும் நடைபெறுகின்றன.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!