வெளியிடப்பட்ட நேரம்: 19:07 (30/04/2018)

கடைசி தொடர்பு:19:07 (30/04/2018)

வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலுக்குச் செல்லும் கள்ளழகர்!

வைகை ஆற்றில் இன்று காலை தங்கக்குதிரை வாகனத்தில் பச்சைப் பட்டுடுத்தி ஆர்பாட்டமாக எழுந்தருளிய

 வைகை ஆற்றில் இன்று காலை தங்கக்குதிரை வாகனத்தில் பச்சைப் பட்டுடுத்தி ஆர்ப்பாட்டமாக எழுந்தருளிய கள்ளழகர் நீண்ட நேரம் அங்கு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சர்க்கரை நிரப்பிய சொம்புகளில் தீபம் ஏற்றி மக்கள் கள்ளழகரை வழிபட்டனர். அதன் பின்பு அங்கிருந்து கிளம்பி மதியம் 12 மணிக்கு அருகிலுள்ள ராமராயர் மண்டபத்துக்கு வந்தார் கள்ளழகர். அங்கும் அவர் வேடமணிந்த பக்தர்கள் அவர்மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்து அவரைக் குளிரவைக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. 

வண்டியூர் வீரராகவ

அங்கு பெருவாரியான மக்கள் கள்ளழகரை தரிசிக்க வந்ததால் வைகை வடகரை சாலை முழுவதும் மக்கள் கூட்டத்தால் திணறியது. தொடர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கிவிட்டு, இன்று இரவு 11 மணிக்கு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலுக்குச் செல்கிறார். இரவு முழுவதும் அங்கு மக்களுக்கு அருள்பாலித்துவிட்டு, நாளை காலை 11 மணிக்கு சேஷ வாகனத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் செல்கிறார். அங்கு கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு சாப விமோஷனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ச்சியாகப் பல்வேறு வாகனங்களில் வந்து மக்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். மதுரை மாநகரமே அழகர் செல்லும் பாதையில் பின் தொடர்ந்து சென்றுகொண்டிருக்கிறது.