வெளியிடப்பட்ட நேரம்: 08:26 (24/05/2018)

கடைசி தொடர்பு:09:44 (24/05/2018)

அக்னி பகவான் வழிபட்ட அருள்மிகு ஆழ்வார்க்குறிச்சி வன்னீஸ்வரர் ஆலயம்! #VikatanPhotoStory

அக்னி பகவான் வழிபட்ட அருள்மிகு ஆழ்வார்க்குறிச்சி வன்னீஸ்வரர் ஆலயம்! #VikatanPhotoStory

* அக்னி பகவான் வழிபட்ட அருள்மிகு வன்னீஸ்வரர் ஆலயம்... ஆழ்வார்க்குறிச்சியில் அமைந்திருக்கும் ஆலயத்தின் தரிசனம் காண்போமே..!

அருள்மிகு வன்னீஸ்வரர் ஆலயம்

* சிதிலமடைந்த நிலையிலும்கூட சிவனாரின் திருக்கோயில் கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் கம்பீரமாகக் காட்சி தருவது ஐயனின் அருள்திறம்தானோ?!

ஆழ்வார்க்குறிச்சி

* எழிலார்ந்த சிற்பங்கள் நிறைந்த மண்டபம், இன்னும் எத்தனை காலம்தான் பொலிவிழந்த நிலையிலேயே இருப்பது?

மண்டபம்

* கோயில் நந்தவனத்தின் பசுமைச் செழிப்புடன் காணப்பட்டாலும் அதன் பின்னணியில் ஏதோ ஒரு குறை இருப்பதாகத் தெரிகிறதே...

நந்தவனம்

* கோயிலுக்குள் நந்தவனம் இருக்கலாம்... பசுமையாக இருந்தாலும் புதர் மண்டிக் கிடக்கலாமா..?

கோயில் நந்தவனம்

* மங்கியதோர் இரவினிலே ஆரத்தி ஒளியில் ஐயனின் அருள் தரிசனம்... ஆலயம் புதுப் பொலிவு பெற பிரார்த்திக்கத் தூண்டும் அற்புதக் காட்சி..!

ஆழ்வார்க்குறிச்சி

* பிரகாசிப்பது கற்பூர ஜோதியோ... அம்பிகையின் இருவிழிகளிலிருந்து பெருகி வரும் அருள் சுடரின் ஒளிதானோ..!

தரிசனம்

* கோயிலுக்குள் யார் வருகையை அறிவிக்கின்றனவோ இந்த ஒளிக் கற்றைகள்..?

ஒளிக் கற்றைகள்

* ஓ... கயிலை நாயகனை தரிசித்து வழிபட கதிரவனே வந்துவிட்ட கவின்மிகு காட்சி!

கதிரவன்

* `அந்தக் காலத்தில் ஆலயம் எத்தனை பொலிவுடன் திகழ்ந்திருக்குமோ?'  என்று நம்மைச் சிந்திக்கத் தூண்டும் மண்டபத்தின் விசாலத் தோற்றம்...

மண்டபம்

* வன்னீஸ்வரர் சந்நிதிக்கு எதிரில் நேர்க்கோட்டில் கொடி மரம், பலிபீடம் காட்சி தரும் நேர்த்தியான தோற்றம் நம் நெஞ்சை அள்ளும்...

கொடி மரம்

* மணிக் கதவம் தாள் திறக்க... காணக்கிடைக்கும் மகேஸ்வர தரிசனம் மனக் கவலைகளைப் போக்கும்!

மணிக்கதவம்

* பசுமை படர்ந்த சூழலில், நம்மைப் பரவசப்படுத்தும் ஆலயத் தோற்றம்...

பசுமை

* ஐயன் திருக்கோயிலின் சிதிலம் கண்டு வானமும் இருண்டதோ..?

இருண்ட வானம்

* 'சிந்திப்பாரவர் சிந்தையுளான்' என்று சுந்தரர் பாடிப் போற்றிய சிவனாரின் கருவறை விமானம் இப்படியா பொலிவிழந்து காண்பது..?

கருவறை விமானம்

* ஆலயமணி ஒலிக்கட்டும்... ஆலயம் புதுப் பொலிவு பெறட்டும்... ஆயிரமாயிரம் பக்தர்கள் ஐயனின் அருள் பெற்றுச் சிறக்கட்டும்

ஆலயமணி

* 'வேயுறு தோளிபங்க'னின் அருளிங்கு நமக்கிருக்க... நாளும் கோளும் நமக்கு நாளும் நன்மையே செய்யுமே

வேயுறு தோளிபங்கனின் அருள்

 

 

 

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்