வெளியிடப்பட்ட நேரம்: 10:29 (27/05/2018)

கடைசி தொடர்பு:07:34 (28/05/2018)

ஆழ்வார்திருநகரி நவ கருடசேவை வைபவம்... கோலாகலம்! #VikatanPhotoStory

ஆழ்வார்திருநகரி நவ கருடசேவை வைபவம்

ஆழ்வார்திருநகரி நவ கருடசேவை வைபவம்... கோலாகலம்! #VikatanPhotoStory

கருடசேவை
 

நம்மாழ்வாரின் அவதார நட்சத்திரத்தை முன்னிட்டு, ஆழ்வார் திருநகரியில் நடைபெறும் வைகாசி உற்சவத்தின் ஐந்தாவது நாள் இரவு, ஒன்பது கருடசேவை வைபவம் நடைபெறவிருப்பதை முன்னிட்டு, கோலம் போட்டு அலங்கரிக்கும் காட்சி...

கருடசேவை
 

நம்மாழ்வார், மதுரகவியாழ்வார் ஆகியோருடன் நவதிருப்பதி பெருமாள்களையும் தரிசிக்க ஆவலுடன் காத்திருக்கும் பக்தர்கள்...


கருடசேவை

தாம் இருந்த இடத்திலிருந்தபடியே 35 திவ்ய தேசங்களில் அருளும் பெருமாள்களின் தரிசனம் பெற்று மங்களாசாசனம் செய்த சிறப்புக்கு உரிய நம்மாழ்வார் அன்ன வாகனத்தில் எழுந்தருளிய காட்சி...

நம்மாழ்வார்
 

நம்மாழ்வாரையே குருவாகவும் பெருமாளாகவும் பாவித்து நம்மாழ்வாரை மட்டுமே போற்றிப் பாடிய மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாருக்கு வந்தனம் செலுத்துவதுபோல் கூப்பிய கரங்களுடன் எழுந்தருளிய திருக்கோலம்...

பெருமான்
 

ஆழ்வார்திருநகரி கோயிலில் அலங்கரிக்கப்பட்ட பந்தலில், பக்தர்கள் பரவசத்துடன் பார்த்திருக்க, காலையிலேயே எழுந்தருளிவிட்டார் அருள்மிகு பொலிந்துநின்ற பெருமான்...


கள்ளபிரான்

தன்னிடம் அளவற்ற பக்திகொண்டிருந்த கள்வன் ஒருவனை அரச தண்டனையிலிருந்து விடுவிப்பதற்காக, தானே கள்வனாக அரண்மனைக்குச் சென்ற பெருமாள். அதன் காரணமாகவே `கள்ளபிரான்' என்ற திருப்பெயரும் கொண்டார்...

வரகுணமங்கை
 

நம் வாழ்க்கையில் எதிர்ப்படும் இன்னல்களையெல்லாம் நொடிப்பொழுதில் கடிதோட்டும் பெருமான் வரகுணமங்கை எம் இடர்கடிவான் பெருமான்...

ஆழ்வார்திருநகரி பெருமான்
 

நம்மாழ்வார் அவதரித்த பெருமைக்கு உரிய ஆழ்வார்திருநகரி பெருமான் இரவு கருட வாகனத்தில் எழுந்தருளிய திருக்கோலம்...

தேவர்பிரான்
 

நவதிருப்பதிகளில், `இரட்டைத் திருப்பதி' என்ற சிறப்பைப் பெற்றிருக்கும் திவ்ய தேசத்திலிருந்து ஆழ்வார்திருநகரிக்கு எழுந்தருளிய அருள்மிகு தேவர்பிரான்...

திருக்குளந்தை

`திருக்குளந்தை’ என்னும் பெருங்குளத்திலிருந்து நம்மாழ்வாருக்கும் மதுரகவியாழ்வாருக்கும் அருள்புரிவதற்காக எழுந்தருளிய அருள்மிகு மாயக்கூத்த பெருமான்...

திருப்புளியங்குடி

திருப்புளியங்குடி திவ்வியதேசத்திலிருந்து அருள்மிகு காய்சினவேந்த பெருமானும் ஆழ்வார்திருநகரிக்கு எழுந்தருளிவிட்டார்...

வைத்தமாநிதி பெருமாள்

`தனக்கு ஒப்பாரும் மிக்காருமில்லை’ என்று சொல்லாமல் சொல்வதுபோல், தென்திருப்பேரை திருத்தலத்திலிருந்து எழுந்தருளிய அருள்மிகு நிகரில் முகில்வண்ணப் பெருமான்...

திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள்

குபேரனுக்கு நவநிதிகளையும் அருளியவர் திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள். ஆழ்வார்திருநகரி கருடசேவை சாதிக்கும் இவரை தரிசித்தால் வாழ்வில் நவநிதிகளும் பெருகுமே...


கருடசேவை

திருமணத்தடை விலக்கி, இனிய இல்லற வாழ்க்கையை அருளும் தொலைவில்லிமங்கலம் அரவிந்தலோசன பெருமானின் அற்புதக் காட்சி...

கருட சேவை
 

'பணிந்து வணங்கினால்தான் இறைவனின் அருள் நமக்குக் கிடைக்கும்' என்பதை உணர்த்துவதேபோல், பக்தை ஒருவர் பல்லக்கில் எழுந்தருளியிருக்கும் பெருமாளை பணிவுடன் வழிபடும் காட்சி.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்