வெளியிடப்பட்ட நேரம்: 16:54 (12/06/2018)

கடைசி தொடர்பு:16:54 (12/06/2018)

கோயில், ஆதீனங்களுக்குச் சொந்தமான `தரும சாசன சொத்து'களை வாங்கலாமா?

கோயில், ஆதீனங்களுக்குச் சொந்தமான `தரும சாசன சொத்து'களை வாங்கலாமா?

கோயில், ஆதீனங்களுக்குச் சொந்தமான `தரும சாசன சொத்து'களை வாங்கலாமா?

ந்து சமய அறநிலையத்துறை கொள்கைவிளக்கக் குறிப்பேட்டில் தமிழகத்தில் மொத்தம் 56 ஆதீன மடங்களும், அதற்குக் கீழே 57 கோயில்கள் இருப்பதாகவும் குறிப்பு இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் 36,590 கோயில்களுக்குக் கீழே 4,22,000 ஏக்கர் நிலங்களும்; 56 மடங்களுக்குக் கீழே கிட்டத்தட்ட 56,000 ஏக்கர் நிலங்களும் இருப்பதாக அறநிலையத்துறையின் தகவல் தெரிவிக்கிறது. திருவாவடுதுறை ஆதீனம், வானமாமலை ஆதீனம், திருக்குறுங்குடி ஜீயர் மடம், தர்மபுரம் ஆதீனம், மதுரை ஆதீனம், திருப்பனந்தாள் காசி மடம், அகோபில மடம், காஞ்சி சங்கர மடம் போன்ற சில ஆதீன மடங்களுக்குச் சொந்தமாகத்தான் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் குவிந்துகிடக்கின்றன. திருவாவடுதுறை ஆதீனத்துக்கு மட்டும் சுமார் 19,000 ஏக்கர் நிலம் சொந்தமாக இருக்கிறது. ஆதீனத்துக்குச் சொந்தமான இந்த நிலங்கள் மக்களுக்குக் குத்தகைவிடப்படுகின்றன; வாடகைக்கும் விடப்படுகின்றன; இவற்றின் மூலமாக வருமானம் வருகிறது. 

கோயில் சொத்து

இந்தச் சூழலில் அண்மைக்காலமாக கோயில்கள், ஆதீனங்கள், மடங்களுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதாகவும், சட்ட விரோதமாக விற்கப்படுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இது தொடர்பாக திருத்தொண்டர் சபை என்ற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். 

அந்த மனுவில் இப்படிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது... `தூத்துக்குடி மாவட்டம் நெடுங்குளத்தில் இருக்கிறது `செங்கோல் ஆதீனம்.’ இந்த ஆதீனத்துக்குச் சொந்தமான நிலங்கள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கின்றன. இதனால் அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை உடனடியாக மீட்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.'  

மதுரை உயர்நீதிமன்ற கிளை

இந்த வழக்கு விசாரணையில், `தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீனங்கள் மற்றும் மடங்களையும் இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக இணைக்க' உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. மேலும், `தமிழகத்திலுள்ள ஆதீனங்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான சொத்துகள் மற்றும் நிலங்கள், இதரச் சொத்துகள், குத்தகை மற்றும் வாடகைக்கு விடப்பட்டுள்ள விவரங்களை அறநிலையத்துறை உடனடியாகத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி அனைத்து ஆதீனம் மற்றும் மடங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.  

இது தொடர்பாக வழக்கை தாக்கல் செய்த திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனர் மற்றும் தலைவரான ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்... ``உயர் நீதிமன்றம், `தமிழகத்திலிருக்கும் கோயில், ஆதீனங்கள் மற்றும் மடங்களின் நிலங்களை அளந்து ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டும்’ என்று அறநிலையத்துறையினருக்கு உத்தரவிட்டது. ஆனால், எந்த ஆக்கிரமிப்பு மீட்பு நடவடிக்கையையும் யாரும் மேற்கொள்ளவில்லை. மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் `செங்கோல் ஆதீன’த்துக்கு உரிய நிலங்களை மீட்க வேண்டும் என்று கூறி பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தோம். நீதிமன்றமே மற்ற ஆதீன நிலங்களின் ஆக்கிரமிப்பு தகவல்களைக் கேட்டறிந்து, அனைத்து ஆதீன மடங்களையும் வழக்கில் எதிர் மனுதாரர்களாக இணைத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை, 55,820 ஏக்கர் நிலங்கள் ஆதீனங்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. ஆனால், ஆதீன மடங்களுக்கு உரிய நிலத்தை அளந்தால் இதன் மதிப்பு இன்னும் அதிகமாகும். தனிப்பட்டவர்களின் சுயநலத்தால் நிலங்களை மீட்க முடியாத சூழல் நிலவிக்கொண்டிருக்கிறது. கண்துடைப்புக்காக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அனைவரையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் அனைத்து நிலங்களையும் மீட்டு வருவாயை ஒழுங்குபடுத்தினால், பல்வேறு நலத்திட்டப் பணிகளை மேற்கொள்ள முடியும்.

ஆதினங்கள்

கோயில் மற்றும் ஆதீன, மட நிலங்களை விற்பவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள். ஆனால், அதை வாங்கும் நடுத்தர மக்கள்தாம்  சிக்கிக்கொள்கிறார்கள். திருக்கோயில், ஆதீன, மடங்களின் பட்டா, புறம்போக்கு நிலங்களுக்கு `தரும சாசன சொத்துகள்’ என்று பெயர். `இந்த தரும சாசனச் சொத்துகளை யார் வாங்கி பட்டா போட்டுக்கொண்டாலும், அது செல்லாது’ என்று உச்ச நீதிமன்றமே அறிவித்திருக்கிறது. பொது மக்கள் யாரும் கோயில் மற்றும் ஆதீன, மட நிலங்களை வாங்கி ஏமாற வேண்டாம். அந்த நிலங்கள் மீண்டும் தன்னிச்சையாக திருக்கோயில் வசம் வந்துவிடும். தர்ம சாசன நிலங்களை விற்பவர்கள் மீதும், வாங்குபவர்கள் மீதும் குண்டர் சட்டம் பாயும்படி சட்டம் இயற்றப்பட வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில் மக்களுக்கும் இது தொடர்பாக விழிப்புஉணர்வு அதிகம் வந்திருக்கிறது.. ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் தொடர்பாக வழக்கு, நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது. நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்..." என நம்பிக்கையுடன் பேசுகிறார் ராதாகிருஷ்ணன். 

`சிவன் சொத்து குல நாசம்' என்பார்கள். பல்வேறு காலகட்டங்களில் நம் முன்னோர்களால் தானமாக, புனித காரியங்களுக்காக அளிக்கப்பட்ட இந்த நிலங்களை அத்துமீறி அனுபவிப்பது என்பது தவறான செயல். தர்ம சாசன சொத்துகளை முறைகேடாக வாங்கியவர்களே கோயிலுக்குத் திருப்பிக் கொடுக்க முன்வர வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையும் ஆக்கிரமிக்கப்பட்ட மற்றும் முறைகேடாக விற்கப்பட்ட நிலங்களை விரைந்து மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்..!

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க