வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (14/06/2018)

கடைசி தொடர்பு:19:10 (14/06/2018)

ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்திலிருந்து ஏழு சிலைகள் தமிழகத்திற்கு எப்போது வரும்?

திருடுபோன சிலைகள்... மீட்பு நடவடிக்கைகள்... சமூக ஆர்வலர்களின் ஆதங்கம்!

ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்திலிருந்து ஏழு சிலைகள் தமிழகத்திற்கு எப்போது வரும்?

மிழக வரலாற்றுச் சின்னங்களின் பெருமைகளையும், அருமைகளையும் நாம் அறிந்துவைத்திருக்கிறோமோ இல்லையோ... நம்மைவிட வெளிநாட்டவர்கள் நன்கு அறிந்துவைத்திருக்கிறார்கள். அதனால்தான் தமிழகத்திலிருந்து திருடப்படும் சிலைகளும் செப்புத் திருமேனிகளும் வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் விலை போகின்றன. அண்மைக்காலம் வரை திருடுபோன சிலைகளைக் கண்டுபிடித்த பிறகும்கூட, அந்தச் சிலைகளை மீட்கும் நடவடிக்கைகள் மெத்தனமாகவே நடந்துகொண்டிருந்தன. இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட சில நூறு சிலைகளில், திருவேலங்குடி நடராஜர் சிலை மட்டுமே மீட்கப்பட்டது என்பது வருத்தத்துக்குரிய செய்தி. மற்ற சிலைகளின் நிலை என்னவென்று தெரியவில்லை. இதேபோல அமெரிக்கச் சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் தமிழக வரலாற்றுச் சின்னங்களை மீட்பதற்கும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் மெத்தனப் போக்கே நிலவிக்கொண்டிருந்தது.

ராஜராஜர்

60 ஆண்டுகளுக்கு முன்னர், தஞ்சைப் பெரிய கோயிலிலிருந்து திருடப்பட்ட ராஜராஜன், உலக மாதேவி செப்புத் திருமேனிகள் குஜராத் மாநிலத்திலுள்ள காலிக்கோ அருங்காட்சியகத்திலிருந்து தமிழகச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் ஐ.ஜி பொன். மாணிக்கவேல் குழுவினரால் அதிரடியாக மீட்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, `தமிழகத்திலிருந்து திருடப்பட்டு வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலுள்ள அருங்காட்சியகங்களில் உள்ள சிலைகளும், தெய்வத் திருமேனிகளும் மீட்கப்பட வேண்டும்’ என்று பலர் கோரிக்கை எழுப்பினர்.

ராஜராஜன், உலகமாதேவி சிலைகள் மீட்கப்பட்ட பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ``தமிழகத்தின் கலாசாரச் சின்னங்கள் உலகில் எங்கு, எந்த மூலையில் இருந்தாலும் அவற்றை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சிங்கப்பூர், ஆஸ்திரேலியா அருங்காட்சியகங்களிலுள்ள சிலைகள் அனைத்தும் மீட்கப்படும்" என்று திருடுபோன சிலைதெரிவித்திருந்தார்.

தமிழகத்திலிருந்து சிலைக் கடத்தல் மீட்புக் குழுவினர் ஆஸ்திரேலியா, கென்பரா நகரிலுள்ள நேஷனல் கேலரி ஆஃப் ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்துக்குச் சென்று பார்வையிட்டு வந்திருந்தனர். இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் மாஃபா பாண்டியராஜன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் சிலைக் கடத்தல் பிரிவின் ஐ.ஜி பொன் மாணிக்கவேல், ஆஸ்திரேலியா தூதரக அதிகாரி சூசன் கிரேஸ், ஆஸ்திரேலியாவின் தேசிய அருங்காட்சியகத்தின் துணை இயக்குநர் கிறிஸ்டியன் பாய்ஸ்லே மற்றும் பல அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் கென்பரா நகரிலுள்ள நேஷனல் கேலரி ஆஃப் ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்திலுள்ள ஏழு சிலைகளை முதல் கட்டமாக தமிழகத்துக்குத் திருப்பித் தருவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது.

இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும், பேசிய அமைச்சர் பாண்டியராஜன், ``நேஷனல் கேலரி ஆஃப் ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் அடையாளம் காணப்பட்ட சிலைகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறோம். அடையாளம் காணப்பட்ட சிலைகளின் தொல்லியல் சான்றுகள், கல்வெட்டுச் சான்றுகள், சிலைகள் கோயிலில் இருந்த இடம், சிலைகளின் புகைப்படங்கள் போன்ற ஆதாரங்களைக் கொடுத்து ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. இதன் அடிப்படையில் ஏழு சிலைகளை விரைவில் திருப்பித் தர ஆஸ்திரேலியா சம்மதித்திருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.

ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைப் பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. அவற்றில் ஆவணப்படுத்தப்பட்ட, ஆதாரங்களுள்ள தமிழகச் சிலைகளை மட்டுமே திருப்பித் தர ஆஸ்திரேலியா சம்மதித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா திரும்பி வரும் சிலைகளில் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த குழந்தை சம்பந்தர் செப்புத் திருமேனி, 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்திய காளி தேவியின் செப்புத் திருமேனி, 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆறுமுகர் கல்சிலை, 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடனமாடும் சம்பந்தர் செப்புத் திருமேனி, 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரானைட் கல்லால் ஆன நந்தி சிலை, விஜயநகர அரசர்களின் காலத்தைச் சேர்ந்த இரண்டு துவாரபாலகர் சிலைகள் என மொத்தம் ஏழு சிலைகள் இந்தியாவுக்குக் கொண்டுவரப்படுகின்றன.

ராஜராஜன், உலகமாதேவி சிலைகள்கூட அந்தச் சிலைகளுக்கான கல்வெட்டு ஆதாரங்களைக் கொடுத்த பிறகே குஜராத்திலிருந்து மீட்டு வர முடிந்தது.

சிலைகள்

தமிழகத்திலுள்ள கோயில் சிலைகளை ஆவணப்படுத்த வேண்டும் என்று நெடுங்காலமாகக் குரல்கள் எழுந்துகொண்டிருக்கும் நிலையில்தான், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் உள்ள ஐம்பொன் சிலைகள், செப்புத் திருமேனிகள், கோயில் சிலைகள் ஆகியவற்றின் அளவுகள் எடுக்கப்பட்டு கணினிமயமாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இது குறித்து, `ஆவணம் தொல்லியல் பத்திரிகை’ தலைவர் மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகக் கடல்சார் பேராசிரியர் ராஜவேலிடம்  ராஜவேலுபேசினோம்... ``உலகத்திலுள்ள அனைத்து அருங்காட்சியகங்களிலும் தமிழகத்திலிருந்து திருடப்பட்ட சிலைகளும், செப்புத் திருமேனிகளும் இருக்கின்றன. சிலைகள், செப்புத் திருமேனிகள் மட்டுமல்லாமல் நம் நாட்டைச் சேர்ந்த பல முக்கியமான ஆவணங்களும் திருடு போயிருக்கின்றன. நாகை மாவட்டத்தில், சூடாமணி விகாரத்துக்கு ராஜராஜன் வழங்கிய நிவந்தங்கள் தொடர்பான ஆனைமங்கலச் செப்பேடுகள், குலோத்துங்கன் ஆணையிட்ட சிறிய ஆனைமங்கலச் செப்பேடுகள் ஆகியவை நெதர்லாந்து லெய்டன் அருங்காட்சியத்தில் இருக்கின்றன. டச்சுக்காரர்கள் இந்தியா வந்தபோது அவர்கள் கொண்டு சென்ற புத்தர் சிலைகளுடன் இந்த ஆவணங்களும் எடுத்துச் செல்லப்பட்டன. ஆஸ்திரேலியாவின் பட்டாவியா அருங்காட்சியகத்தில் நாயக்கர்கால வெள்ளிச் செப்பேடுகளிருக்கின்றன. தமிழகத்தின் முக்கிய ஆவணமாக விளங்கும் இவற்றையும் மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்கிறார் ராஜவேல்.

சமூக ஆர்வலரும் உலகில் பல்வேறு அருங்காட்சியங்களிலிருக்கும் தமிழகத் தொன்மைச் சின்னங்களை மீட்க அரசுக்கு உதவி செய்துகொண்டிருப்பவருமான விஜயகுமாரிடம் பேசினோம்... ``தமிழகத்தின் சிலைகளும் அரிய பொக்கிஷங்களும் உலகில் எங்கெங்கோ இருக்கின்றன. சுபாஷ் கபூர் திருடிய 30-க்கும் மேற்பட்ட சிலைகள் அமெரிக்காவில் சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. கபூரால் கடத்தப்பட்ட புதிய சிலைகளையும் மீட்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவிலுள்ள பல்வேறு அருங்காட்சியகங்கள் கபூரிடமிருந்து தமிழகச் சிலைகளை வாங்கிவைத்திருக்கின்றன. இவை மட்டுமல்லாமல் தமிழகத்தைச் சேர்ந்த செப்புத் திருமேனிகள் பல அமெரிக்காவின் சில அருங்காட்சியகங்களில் இருக்கின்றன. இவற்றையெல்லாம் மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.

நடனமாடும் சம்பந்தர்

``இதேபோல தமிழகத்திலிருக்கும் 36,590 கோயில்களிலும் இருக்கும் சிலைகள் அனைத்தும் கணக்கெடுக்கப்பட்டு அதன் தகவல்களை கணினிமயமாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். சிங்கப்பூர் ஏசியன் சிவிலைசேஷன் அருங்காட்சியகம், அமெரிக்காவின் டொலைடோ அருங்காட்சியகம், நேஷனல் கேலரி ஆஃப் ஆஸ்திரேலியா மியூசியத்திலிருக்கும் மற்ற சிலைகள் என அனைத்தும் மீட்கப்பட வேண்டும்" என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

உலோகங்களுக்கும், கற்களுக்கும்கூட உயிர் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள். வெளிநாடுகளில் கடத்திவைக்கப்பட்டிருக்கும் உயிரோட்டமும், தெய்விகத் தன்மையும் நிறைந்த சிலைகளை மீட்பதைவிடவும் அவற்றுக்குச் செலுத்தும் சிறந்த வழிபாடு வேறு எதுவும் இருக்காது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க