வெளியிடப்பட்ட நேரம்: 01:12 (18/06/2018)

கடைசி தொடர்பு:01:12 (18/06/2018)

இந்த வார ராசிபலன் ஜூன் 18 முதல் 24 வரை 12 ராசிகளுக்கும்

கும்பராசி அன்பர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைக்கும்

இந்த வார ராசிபலன் ஜூன் 18 முதல் 24 வரை 12 ராசிகளுக்கும்

ராசி

மேஷம்மேஷராசி அன்பர்களே! பணவசதி திருப்திகரமாக இருக்கும். குடும்பச் சூழ்நிலை நிம்மதி தருவதாக அமையும். தேவையற்ற செலவுகள் எதுவும் இந்த வாரம் ஏற்படுவதற்கில்லை. திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். ஆனால்,  பழைய கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. தாயாருக்கு சிறிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும்.

அலுவலகத்தில் உங்கள் வேலைகளைச் சிறப்பாகச் செய்து உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பதவிஉயர்வு, சம்பளஉயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

வியாபாரத்தில் சற்று பிற்போக்கான நிலைமையே காணப்படுகிறது. எதிர்பார்த்தபடி லாபம் கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. வியாபாரத்தை விரிவு படுத்தவோ அல்லது புதிய முதலீடு செய்யவோ கடன் வாங்கவேண்டாம்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராதபடி வருமானம் அதிகரிக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும்.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்கள் பாடம்  நடத்தும்போது கூர்ந்து கவனிப்பீர்கள். தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் கிடைக்கும்.

குடும்ப நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டுள்ள பெண்மணிகளுக்கு மனமகிழ்ச்சி தரும் வாரமாக இருக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை சந்தோஷம் தருவதாக இருக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 
அசுவினி: 19, 20, 21, 23, 24; பரணி: 20, 21, 22, 24; கார்த்திகை: 18, 21, 22, 23 

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1, 5

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
அசுவினி: 18, 22; பரணி: 18, 19, 23; கார்த்திகை: 19, 20, 24

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றிற் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம் போம்
நல்ல குணம திகமா மருணைக் கோபுரத்துள் மேவு 
செல்வ கணபதியைக் கைதொழுதக்கால். 

 

ரிஷபம்ரிஷபராசி அன்பர்களே! எதிர்பார்த்ததை விட வருமானம் கூடுதலாகக் கிடைக்கும்.  வீடு, மனை வாங்கும் முயற்சிகள் சாதகமாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.  உறவினர், நண்பர்கள் வகையில் உதவிகள் உண்டு. திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும்.

அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலையே காணப்படும். வேலைகளைச் சிறப்பாகச் செய்வீர்கள். ஒரு சிலருக்கு வேறு ஊருக்கு மாற்றல் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிடவும் கூடுதல் விற்பனை நடப்பதுடன் லாபமும் அதிகரிக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். சில வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாதபடி குடும்பச் சூழ்நிலை அமையும்.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் அவ்வளவாக ஆர்வம் இருக்காது. உடல்நலனும் சிறிய அளவில் பாதிக்கக்கூடும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு வீட்டுச் செலவுகளைச் சமாளிப்பது சற்று கடினமாகத்தான் இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 
கார்த்திகை: 18, 21, 22, 23; ரோகிணி: 18, 19, 22, 23, 24; மிருகசீரிடம்: 18, 19, 20, 23, 24

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 5, 6

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
கார்த்திகை: 19, 20, 24; ரோகிணி: 20, 21; மிருகசீரிடம்: 21, 22

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பாள்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டுப் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்

வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறை முடித்த
ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே

 

மிதுனம்மிதுனராசி அன்பர்களே! பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல் நலம் சீராகும். வாழ்க்கைத் துணையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம். திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளுக்கு வரன் தேடும் முயற்சியை இந்த வாரம் மேற்கொள்ளலாம். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனாலும், அதிகாரிகளின் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும். எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைப்பது தாமதமாகும்.

வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். கடையை வேறு இடத்துக்கு மாற்றும் முயற்சி நல்லபடி முடியும். பங்குதாரர்களை அனுசரித்துச் செல்லவும்.

கலைத்துறை அன்பர்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்வது அவசியம். சக கலைஞர்களுடன் அனுசரனையாக நடந்துகொள்வது அவசியம்.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது கவனமாகக் கேட்பது அவசியம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு ஓரளவுக்கு மன நிம்மதி தரும் வாரம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 
மிருகசீரிடம்: 18, 19, 20, 23, 24; திருவாதிரை: 19, 20, 21, 24; புனர்பூசம்: 18, 20, 21, 22

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 4
தவிர்க்க வேண்டிய நாள்கள்:
மிருகசீரிடம்: 21, 22; திருவாதிரை: 18, 22, 23; புனர்பூசம்: 19, 23, 24

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டுப் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

விழிக்குத் துணை திருமென் மலர்ப் பாதங்கள்! மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்! முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும்! பயந்த தனி
வழிக்குத் துணை வடி வேலும் செங்கோடன் மயூரமுமே!

 

கடகம்கடகராசி அன்பர்களே! தேவையான அளவுக்கு பணவரவு இருக்கும். சகோதரர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். குடும்பம் மற்றும் பிள்ளைகளின் திருமணம் தொடர்பான முக்கிய முடிவுகளை இந்த வாரம் எடுப்பது சாதகமாக முடியும். ஒரு சிலருக்கு உணவு தொடர்பான வயிற்று பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலையே காணப்படும். உங்கள் பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த விற்பனையும், லாபமும் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாள்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடை தாமதம் ஏற்படும். சக கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் இருக்காது. தேவையற்ற எண்ணங்களால் மனக்குழப்பம் ஏற்படும். 

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு ஓரளவு மகிழ்ச்சியான வாரமாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:
புனர்பூசம்: 18, 20, 21, 22; பூசம்: 18, 19, 21, 22, 23; ஆயில்யம்: 18, 19, 20, 22, 23, 24

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 5

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
புனர்பூசம்: 19, 23, 24; பூசம்: 20, 24; ஆயில்யம்: 21

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

உருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து  உமையோடும் வெள்ளை விடைமேன்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி  திசை தெய்வ மானபலவும்
அருநெறி நல்லநல்ல அவைநல்ல நல்ல  அடியா ரவர்க்கு மிகவே.    

 

சிம்மம்சிம்மராசி அன்பர்களே! பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் மற்றவர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் குடும்ப விஷயத்தில் மற்றவர்களைத் தலையிட அனுமதிக்கவேண்டாம். கணவன் - மனைவிக்கிடையே சிறுசிறு கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. ஒரு சிலருக்கு புண்ணிய தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அதனால் மனதில் சோர்வு உண்டாகும்.ஒரு சிலருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு ஆறுதல் தரும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு ஓரளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். மூத்த கலைஞர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் கவனம் செலுத்தமுடியாத சூழ்நிலை ஏற்படக்கூடும். பெற்றோரின் அறிவுரை பயனுள்ளதாக இருக்கும். ஆசிரியர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு குடும்பப் பொறுப்புகள் அதிகரிப்பதால் மன அமைதி குறையும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 
மகம்: 19, 20, 21, 23, 24; பூரம்: 20, 21, 22, 24; உத்திரம்: 18, 21, 22, 23 

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1, 3

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
மகம்: 18, 22; பூரம்: 18, 19, 23; உத்திரம்: 19, 20, 24

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.

 

கன்னிகன்னிராசி அன்பர்களே! பணவரவு தேவையான அளவுக்கு இருந்தாலும் தேவையற்ற செலவுகளால் மன உளைச்சல் ஏற்படக்கூடும். அன்றாடப் பணிகளில் கவனத்துடன் ஈடுபடமுடியாது. கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். உறவினர்கள் வகையில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அதனால் உடல் அசதியும் சோர்வும் உண்டாகும். சக பணியாளர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.

வியாபாரத்தில் சில பிரச்னைகளைச் சமாளிக்கவேண்டி வரும். பணியாளர்களிடம் தேவையான ஒத்துழைப்பை எதிர்பார்க்கமுடியாது.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் உடல் நிலை காரணமாக சில வாய்ப்புகளைப் பயன்படுத்த முடியாமல் போகும்.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். நினைவாற்றல் அதிகரிக்கும். ஆசிரியர்களின் பாராட்டுகள் கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு ஓரளவு நிம்மதி தருவதாக அமையும். செலவுக்குத் தேவையான பணம் கிடைக்கும். அலுவலகத்தில் இறுக்கமான சூழ்நிலை காணப்படும். பொறுமையாக இருப்பது அவசியம்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:
உத்திரம்: 18, 21, 22, 23; அஸ்தம்: 18, 19, 22, 23, 24; சித்திரை: 18, 19, 20, 23, 24

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 5, 7

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
உத்திரம்: 19, 20, 24; அஸ்தம்: 20, 21; சித்திரை: 21, 22

வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் – செருக்கிளறும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று

கிருஷ்ணதுளசி

துலாம்துலாம்ராசி அன்பர்களே! பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷமும் நிம்மதியும் இருக்கும். ஆனால், சகோதரர்கள் வகையில் சங்கடங்கள் உண்டாகும். சிலருக்கு புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவர். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்கள் உங்களுடைய பணிகளைப் பகிர்ந்துகொள்வர். அதிகாரிகளின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் தரும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். ஆனால், கிடைக்கும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வது அவசியம்.

மாணவ மாணவியர்க்கு மகிழ்ச்சி தரும் வாரமாக இருக்கும். வகுப்புத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர்களிடமும் பெற்றோர்களிடமும் பாராட்டு பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பிரச்னை இல்லாத வாரம். செலவுக்குத் தேவையான பணம் கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:
சித்திரை: 18, 19, 20, 23, 24; சுவாதி: 19, 20, 21, 24; விசாகம்: 18, 20, 21, 22

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 5

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
சித்திரை: 21, 22; சுவாதி: 18, 22, 23; விசாகம்: 19, 23, 24

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

தேனோக்குங் கிளிமழலை உமைகேள்வன் செழும்பவளந்
தானோக்குந் திருமேனி தழலுருவாஞ் சங்கரனை
வானோக்கும் வளர்மதிசேர் சடையானை வானோர்க்கும்
ஏனோர்க்கும் பெருமானை என்மனத்தே வைத்தேனே.

 

விருச்சிகம்விருச்சிகராசி அன்பர்களே! பணவரவு எதிர்பார்த்தபடி இருக்காது என்பதால் வெளியில் கடன் வாங்க நேரும். அந்நியர்களால் குடும்பத்தில் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை. ஒருசிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியம் பாதிக்கப்படும். வழக்குகள் எதுவும் இருந்தால் உங்களுக்குச் சாதகமாக முடியும். வராது என்று நினைத்த கடன் தொகை வந்து சேரும்.

அலுவலகத்தில் வழக்கமான பணிகளையும் கூடுதல் கவனத்துடன் செய்வது அவசியம். சிறு தவறுகள் ஏற்படவும் அதனால் அதிகாரிகளின் கண்டனத்துக்கு உள்ளாகவும் கூடும். சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதமாகக் கிடைக்கும். பாக்கிகள் வசூலாவது  தாமதமாகும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் வருமானம் எதிர்பார்த்தபடி இருக்காது. மூத்த கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை. ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது அக்கறையுடன் கவனிக்கவும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சற்று அமைதிக் குறைவான வாரம். பொறுமையும் சகிப்புத்தன்மையும் அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது தள்ளிப்போகும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 
விசாகம்: 18, 20, 21, 22; அனுஷம்: 18, 19, 21, 22, 23; கேட்டை: 18, 19, 20, 22, 23, 24

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 4

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
விசாகம்: 19, 23, 24; அனுஷம்: 20, 24; கேட்டை: 21

வழிபடவேண்டிய தெய்வம்: மகா விஷ்ணு

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நல்லது.

நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான் 
தன்னையே தான்வேண்டும் செல்வம்போல் மாயத்தால் 
மின்னையே சேர்திகிரி விற்றுவக்கோட் டம்மானே 
நின்னையே தான்வேண்டி நிற்ப னடியேனே 

 

தனுசுதனுசுராசி அன்பர்களே! வருமானம் திருப்திகரமாக இருக்கும். அலுவலகத்திலும் வீட்டிலும் கூடுதலான பொறுப்புகள் ஏற்படும் என்பதால், உடல் அசதியும் சோர்வும் ஏற்படக்கூடும். திருமண முயற்சிகள் சாதகமாகும். உறவினர்கள் அனுசரனையாக இருப்பார்கள். உடல் நலனில் அக்கறை அவசியம். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சமயத்தில் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்குச் செல்லத் தோன்றும். ஆனால், அவசரப்பட்டு முடிவெடுக்கவேண்டாம். பொறுமை அவசியம்.

வியாபாரத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். வேலையாள்களாலும், பங்குதாரர்களாலும் பிரச்னைகள் ஏற்படக்கூடும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கவேண்டாம்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகளும் தாமதமும் உண்டாகும். கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள கடுமையாக உழைக்கவேண்டி இருக்கும்.

மாணவ மாணவியரைப் பொறுத்தவரை படிப்பில் சிறந்த முன்னேற்றம் ஏற்படக்கூடும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு அதிக பொறுப்புகளின் காரணமாக அசதியும் சோர்வும் உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகள் அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:
மூலம்: 19, 20, 21, 23, 24; பூராடம்: 20, 21, 22, 24; உத்திராடம்: 18, 21, 22, 23 

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1, 5

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
மூலம்: 18, 22; பூராடம்: 18, 19, 23; உத்திராடம்: 19, 20, 24

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நல்லது.
       

       உருவாய் அருவாய் உளதாய் இலதாய் 
       மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
       கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் 
       குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

 

மகரம்மகரராசி அன்பர்களே! வருமானம் எதிர்பார்த்தபடி இருக்காது என்பதால் வெளியில் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். சிறு அளவில் உடல்நலக் குறைவு ஏற்படலாம். உறவினர்கள் வகையில் குடும்பத்தில் சில பிரச்னைகள் தோன்றலாம். மனதில் அடிக்கடி இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்படலாம். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

அலுவலகத்தில் பணிகளைச் சிறப்பாகச் செய்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஒரு சிலருக்கு பதவிஉயர்வும் சம்பளஉயர்வும் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

வியாபாரம் நல்லபடியே நடக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் முதலிடு செய்வதற்கான கடனுதவிகள் கிடைக்கும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்பார்த்தபடியே நல்ல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் திருப்திகரமாக இருக்கும்.

மாணவ மாணவியர்க்கு சிறிய அளவில் ஆரோக்கியக் குறைவு ஏற்படக்கூடும். உடனே மருத்துவரை பார்த்து சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சில சிரமங்கள் இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் சலுகைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:
உத்திராடம்: 18, 21, 22, 23; திருவோணம்: 18, 19, 22, 23, 24; அவிட்டம்: 18, 19, 20, 23, 24

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 3

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
உத்திராடம்: 19, 20, 24; திருவோணம்: 20, 21; அவிட்டம்: 21, 22

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நல்லது.

இல்லாமை சொல்லி ஒருவர்தம்பால் சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் - நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒருக்காலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே!

 

கும்பம்கும்பராசி அன்பர்களே! எதிர்பார்த்ததை விட பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஒரு சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியக் குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். ஒரு சிலருக்கு புராதனமான புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். குருபகவான் அருளால் திருமண முயற்சிகள் சாதகமாக முடியும்.

அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடமுடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகளை இந்த வாரம் எதிர்பார்க்கலாம்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த விற்பனையும் லாபமும் கிடைக்கும். வேலையாள்கள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவியாக இருப்பார்கள்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வருமானமும் கூடுதலாகக் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.

மாணவ மாணவியர்க்கு அவ்வப்போது தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும் என்பதால், படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். ஆனாலும் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு குடும்பத்தை நிர்வகிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் கிடைக்கும் சலுகைகள் உற்சாகத்தைத் தரும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 
அவிட்டம்: 18, 19, 20, 23, 24; சதயம்: 19, 20, 21, 24; பூரட்டாதி: 18, 20, 21, 22

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4, 5

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
அவிட்டம்: 21, 22; சதயம்: 18, 22, 23; பூரட்டாதி: 19, 23, 24

வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நல்லது.

இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்,
மறையாய் மறைப்பொருளாய் வானாய் - பிறைவாய்ந்த
வெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான்,
உள்ளத்தி னுள்ளே உளன்.

 

மீனம்மீனராசி அன்பர்களே! வருமானம் திருப்திகரமாக இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம் வயிறு சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.  கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் என்று சொல்லமுடியாது. உங்கள் பணிகளை நீங்களே முடிப்பது நல்லது. சலுகைகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.

வியாபாரத்தில் கடுமையாகப் பாடுபடவேண்டி இருக்கும். பணியாள்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். பங்குதாரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் கிடைப்பதில் தடை தாமதம் ஏற்படும். ஆனால், எதிர்பார்த்தபடி வருமானம் கிடைப்பதில் பிரச்னை இருக்காது.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சியான வாரமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் உற்சாகம் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது தாமதமாகும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 
பூரட்டாதி: 18, 20, 21, 22; உத்திரட்டாதி: 18, 19, 21, 22, 23; ரேவதி: 18, 19, 20, 22, 23, 24

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 5

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
பூரட்டாதி: 19, 23, 24; உத்திரட்டாதி: 20, 24; ரேவதி: 21

வழிபடவேண்டிய தெய்வம்:  சிவபெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

தண்ணார்மதி சூடீதழல் போலுந்திரு மேனீ
எண்ணார்புரம் மூன்றும்எரி யுண்ணநகை செய்தாய்
மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அண்ணாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.

 


 


டிரெண்டிங் @ விகடன்