மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்! #Astrology

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், வணங்கவேண்டிய தெய்வம் மற்றும் வழிபடவேண்டிய தலம் பற்றிய விவரங்கள்

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்! #Astrology

ட்சத்திர வரிசையில் ஐந்தாவதாக உள்ள மிருகசீரிடம், இரண்டு ராசிகளில் இடம்பெறும் நட்சத்திரம். முதல் இரண்டு பாதங்கள் ரிஷப ராசியிலும் அடுத்த இரண்டு பாதங்கள் மிதுன ராசியிலும் இடம்பெறும். இந்த நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய். மிருகசீரிடம் இரண்டு ராசிகளில் வருவதால், இரண்டு ராசிக்கும் பொதுவான சில குணநலன்கள் காணப்படும். துணிச்சல் மிகுந்தவர்களாக இருப்பீர்கள். தேசத்தின் மீது மிகுந்த பற்றுகொண்டிருப்பீர்கள். மன உறுதி மிக்கவர்களாகவும், எதிலும் உறுதியான நம்பிக்கைகொண்டிருப்பவர்களாகவும் இருப்பீர்கள். பரந்த நெற்றியும், வலிமையான உடற்கட்டும் கொண்டவர்களாக இருப்பீர்கள். எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டே இருப்பீர்கள். தாய் தந்தையிடம் அளவற்ற பாசம்கொண்டிருப்பீர்கள். கற்பனை வளம் மிக்கவர்களாக இருப்பதுடன் அடிக்கடி  கனவுலகில் மூழ்கிவிடுவீர்கள்.

மிருகசீரிடம்

மற்றவர்கள் சொல்வதைவிட, உங்களுடைய சுயவிருப்பத்தின்படியே செயல்படுவீர்கள். எடுத்த காரியத்தைத் துணிச்சலாக முடிப்பீர்கள். மற்றவர்களுக்குக் கட்டுப்பட மாட்டீர்கள். என்றாலும் பெரியவர்களிடம் பணிவுடன் நடந்துகொள்வீர்கள். தவறுகளைத் தட்டிக் கேட்பீர்கள். கல்வியில் அவ்வளவாக ஆர்வமிருக்காது என்றாலும், பொது அறிவை வளர்த்துக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். கல்வியில் தடை ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் ஒழுங்குமுறையைக் கடைப்பிடிப்பீர்கள். கடினமாக உழைப்பதில் சளைக்க மாட்டீர்கள். நீங்கள் விரும்பியபடியே திருமணம் நடைபெறும். பிள்ளைகளிடம் அதிகப் பாசம்கொண்டிருப்பீர்கள். அவர்கள் வளர்ச்சியில் அதிக அக்கறை வைத்திருப்பீர்கள். அவர்களுக்காக சொத்துகளைச் சேர்த்து வைக்க வேண்டும் என்பதற்காகக் கடுமையாக உழைப்பீர்கள். மற்றவர்களைக் கவரும் வகையில் பேசுவீர்கள். 'ஏகசந்த கிராஹி' என்பதற்குப் பொருத்தமாக எதையும் உடனே கிரகித்துக்கொள்வீர்கள். நீங்கள் இருக்குமிடத்தில் நீங்கள்தான் முதன்மை ஸ்தானத்தில் இருப்பீர்கள். நல்ல வசதியான இடத்தில் வாழ்க்கைத்துணை அமையும். வாழ்க்கையில் அனைத்துவிதமான ஆடம்பர வசதிகளும் பெற்றிருப்பீர்கள். கஷ்டங்கள் அடுக்கடுக்காக வந்தாலும் சர்வசாதாரணமாகக் கடந்து சென்றுவிடுவீர்கள்.

மற்றவர்களுக்கு விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் வெளியிடங்களில் அதிக நண்பர்களைப் பெற்றிருப்பீர்கள். எந்தக் குறையையும் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டீர்கள். வேகம் இருந்தாலும் விவேகமும் பெற்றிருப்பீர்கள்.  

இனி பாதவாரியான பலன்களைப் பார்க்கலாம்.

மிருகசீரிடம் 1- ம் பாதம்

நட்சத்திர அதிபதி - செவ்வாய்; ராசி அதிபதி - சுக்கிரன்; நவாம்ச அதிபதி - சூரியன்

சவால்களை எதிர்கொள்வதில் அதிக விருப்பம்கொண்டிருப்பீர்கள். கண்கள் செவ்வரியோடி காணப்படும். துணிச்சல் மிக்கவர்களாக இருப்பீர்கள். தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்டிருப்பீர்கள். நினைத்த காரியத்தை எப்படியும் முடித்துக்காட்டுவீர்கள். போராட்ட குணம் அதிகமிருக்கும். எதிரிகளை வீழ்த்தும் வலிமை பெற்றிருப்பீர்கள். நீங்கள் எந்தத் துறையில் ஈடுபடுவீர்கள் என்பதை யாராலும் புரிந்துகொள்ள முடியாது. நீங்கள் எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் சாதனை படைப்பீர்கள். மற்றவர்களிடம் வேலை செய்வதைவிட சொந்தத் தொழில் செய்வதையே விரும்புவீர்கள். உங்களில் சிலர் சிறந்த வழக்கறிஞராகவோ அல்லது அரசியலிலோ சாதனை புரிவீர்கள். சகோதரர்களிடம் அதிகப் பாசம் வைத்திருப்பீர்கள். அவர்கள் கேட்கும் உதவியை எப்பாடுபட்டாவது செய்து தருவீர்கள். விலையுயர்ந்த ஆபரணங்களை வாங்குவதில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். பழைமையை நேசிப்பதுடன் நவீனத்தையும் விரும்புவீர்கள். இளம் வயதிலேயே உங்கள் வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து, அதைச் செயல்படுத்தியும் காட்டுவீர்கள்.

பழநி - வழிபடவேண்டிய தெய்வம்

மிருகசீரிடம் 2-ம் பாதம்

நட்சத்திர அதிபதி - செவ்வாய்; ராசி அதிபதி - சுக்கிரன்; நவாம்ச அதிபதி - புதன்

இரக்க சுபாவம் மிகுந்தவராக இருப்பீர்கள். பகைவர்க்கும் அருளும் உள்ளம்கொண்டிருப்பீர்கள். சுய முயற்சியால் முன்னேற விரும்புவீர்கள். நல்ல மனிதர்களைத்தான் பார்ப்பீர்களே தவிர பணத்தைப் பெரிதாகப் பொருட்படுத்த மாட்டீர்கள். சாத்விக குணம்கொண்டிருக்கும் நீங்கள் நெருக்கடியான நிலையிலும் உண்மையே பேச வேண்டுமென்று விரும்புவீர்கள். பல துறைகள் தொடர்பான தகவல்களை விரல்நுனியில் வைத்திருப்பீர்கள். ஓவியம் வரைவதிலும், கதை, கவிதை எழுதுவதிலும் ஆர்வம்கொண்டிருப்பீர்கள். உணவு விஷயத்தில் தரமும் சுவையும் எதிர்பார்ப்பீர்கள். மற்றவர்களின் மனநிலைக்கேற்ப ஆலோசனை சொல்லவும், நடந்துகொள்ளவும் செய்வீர்கள். உங்களுடைய மதியூகத்தின் காரணமாக அரசாங்கத்திலும் பெரிய நிறுவனங்களிலும் ஆலோசகராகப் பொறுப்பு வகிப்பீர்கள். சுயகௌரவத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். தன்மானத்துக்கு இழுக்கு ஏற்படும் பட்சத்தில் பட்டம், பதவி ஆகியவற்றைத் துச்சமாக மதித்து தூக்கியெறிந்துவிடுவீர்கள். ஆன்மிகப் பணிகளிலும் அறப்பணிகளிலும் ஈடுபடுவீர்கள்.

 

மிருகசீரிடம் 3-ம் பாதம்

நட்சத்திர அதிபதி - செவ்வாய்; ராசி அதிபதி - புதன்; நவாம்ச அதிபதி - சுக்கிரன்

வாழ்க்கையில் யதார்த்தமாக இருக்க விரும்புவீர்கள். சண்டை என்றாலே காத தூரம் ஓடுவீர்கள். எப்போதும் சமாதானத்தையே விரும்புவீர்கள். வசீகரமான தோற்றத்துடன் காணப்படுவீர்கள். எழுத்தாளராகப் புகழ்பெற விரும்புவீர்கள். 'போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்ற பழமொழியைப் புரிந்துகொண்டு மனத் திருப்தியுடன் வாழ்வீர்கள். அவ்வப்போது சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். எந்தச் சூழ்நிலையிலும் கலங்க மாட்டீர்கள். ஆன்மிகத்தைப் பொறுத்தவரை மிகவும் தீவிரமாக இருப்பீர்கள். நீங்கள் சார்ந்திருக்கும் மதத்தைப் பற்றி மற்றவர்கள் தாழ்த்திப் பேசுவதை விரும்ப மாட்டீர்கள். பெற்றோர், மனைவி, பிள்ளைகளை மிகவும் நேசிப்பீர்கள். அவர்கள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். பொதுநலப் பணிகளில் ஈடுபாடுகொண்டிருப்பீர்கள். தாத்தா, பாட்டியின் அன்பும் ஆதரவும் அமோகமாகப் பெற்றிருப்பீர்கள். பெற்றோரைவிட அவர்களுடனேயே அதிக நேரம் இருப்பீர்கள். 

முருகன்

மிருகசீரிடம் 4-ம் பாதம்

நட்சத்திர அதிபதி - செவ்வாய்; ராசி அதிபதி - புதன்; நவாம்ச அதிபதி - செவ்வாய்

தவறுகளை யார் செய்தாலும் தட்டிக்கேட்பீர்கள். உண்மைக்காகப் போராடுவீர்கள். பள்ளிப் படிப்பு சற்று சிரமமாகத்தான் இருக்கும். சிறு வயதிலேயே பல ஏமாற்றங்களை எதிர்கொள்வீர்கள். ஆனாலும், அதற்காகச் சோர்ந்துவிட மாட்டீர்கள். இயல்பிலேயே நகைச்சுவை உணர்வு அதிகம்கொண்டிருப்பீர்கள். அதனால் உங்களைச் சுற்றி எப்போதும் நண்பர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள். வாழ்க்கைத்துணை தங்களிடம் அதிகப் பாசம் வைத்திருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். பிள்ளைகளை மிகவும் கட்டுப்பாட்டுடனும் பொறுப்பு உணர்வுடனும் வளர்க்க வேண்டும் என்று விரும்புவீர்கள். எதிராளிகள் எப்படி மடக்கிக் கேட்டாலும் சாமர்த்தியமாக பதில் சொல்லி சமாளித்துவிடுவீர்கள். மூடநம்பிக்கைகளை அடியோடு வெறுப்பீர்கள். உயர்ந்த பொறுப்பில் இருந்தாலும் தவறான பாதைக்குச் செல்ல மாட்டீர்கள். அதனால், மற்றவர்களால் பெரிதும் மதிக்கப்படுவீர்கள்.

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான், மகாவிஷ்ணு

அணியவேண்டிய நவரத்தினம்: பவளம்

வழிபடவேண்டிய தலம்:  பழநி, திருக்கண்ணபுரம்

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!