வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (22/06/2018)

கடைசி தொடர்பு:11:07 (23/06/2018)

'சுக்ர ப்ரீத்தி தானம்' ஸ்டாலினுக்கு அரசியல் ஆதாயம் அளிக்குமா?

மு.க.ஸ்டாலின் கொடுத்த `சுக்ர ப்ரீதி தானம்’ பதவி, அதிகாரம் அளிக்குமா?

'சுக்ர ப்ரீத்தி தானம்' ஸ்டாலினுக்கு அரசியல் ஆதாயம் அளிக்குமா?

ரண்டு நாள் பயணமாக திருமணம், கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் பங்கேற்பதற்காகத் திருச்சி சென்றிருக்கிறார் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின். இன்று காலை 8 மணியளவில் திருவரங்கத்திலுள்ள ஸ்ரீ ராமானுஜர் மடத்திலிருக்கும் பத்மசாலி திருமண மண்டபத்துக்குச் சென்றார். வழியில் திருவரங்கம் ஸ்ரீரங்கநாத சுவாமி திருக்கோயில் எதிரேயிருக்கும் ரெங்கா கோபுரம் முன்பு, கோயில் சார்பில் அர்ச்சகர் சுந்தர் பட்டர் தலைமையில் ஸ்டாலினுக்குப் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. 

சுக்ர ப்ரீத்தி தானம்

பிறகு கோயில் யானை ஸ்டாலினை ஆசீர்வதித்து மாலை அணிவித்து வரவேற்றது. அப்போது ஸ்டாலின் சார்பில், கோயில் வாசலில் ஸ்ரீரங்கநாதருக்கு முன்பாக வெண்மை நிற வஸ்திரம், சம்பாவனை ஆகியவற்றை இருபத்து ஐந்து பேருக்குத் தானம் கொடுத்திருக்கிறார்கள். இந்தத் தானத்துக்குப் பெயர் `சுக்ர ப்ரீத்தி தானம்'.

சுக்கிரன் வளமான வாழ்க்கை, செல்வம், அதிகாரம் மற்றும் சுகபோகங்களின் அதிபதியாக விளங்குபவர். சுக்கிரனின் அனுக்கிரகம் இருப்பவர்கள் அரசியல் அதிகாரம், பதவி யோகம் ஆகியவற்றைப் பெற்று சிறந்து விளங்குவார்கள். சுக்கிரனின் அனுக்கிரகம் இல்லையென்றால் என்னதான் உழைத்தாலும் உயர்வு கிடைக்காது. அவரின் அனுக்கிரகத்தைப் பெறுவதற்காகச் செய்யப்படும் தானம்தான் `சுக்ர ப்ரீத்தி தானம்'. இதைச் செய்தால் அதிகாரம், பதவி, செல்வம் ஆகியவை தேடிவரும் என்பது நம்பிக்கை.

`சுக்ர ப்ரீத்தி தானம்' என்றால் என்ன? சுக்ர ப்ரீத்தி தானத்தை எதற்காக ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் செய்ய வேண்டும் என்பது குறித்து ஸ்ரீரங்கம் பாலாஜி பட்டரிடம் பேசினோம்...

ஸ்டாலின்

``சுக்கிரன் பாவ விமோசனம் பெற்ற தலம் ஸ்ரீரங்கம். சுக்கிரனின் அதிபதி ஸ்ரீரங்கநாதர். எனவே, அவர் தொடர்பான அனைத்து வித தோஷங்களுக்கும் ஸ்ரீரங்கம் பரிகாரத் தலமாக விளங்குகிறது. ஜாதகரீதியாக சுக்கிரனின் ஆதிக்கம் யாருக்குக் குறைவாக இருக்கிறதோ, அவர்கள் ரங்கநாதரை வழிபட்டு சுக்ர ப்ரீத்தி தானமோ அல்லது சுக்ர ப்ரீத்தி ஹோமமோ செய்தால், சுக்கிரனின் அனுக்கிரகத்தைப் பெறலாம். 

சுக்கிரனுக்கு உரிய நிறம் வெண்மை நிறம். எனவே, வெண்மை நிற வஸ்திரம், வெள்ளைக் கொண்டைக்கடலை, வெள்ளை மலர், சம்பாவனை ஆகியவற்றைத் தானம் செய்து சுக்கிரனை மகிழ்விப்பதற்குப் பெயர்தான் `சுக்ர ப்ரீத்தி தானம்'. அவர் வெற்றியையும் செல்வத்தையும் அள்ளிக் கொடுப்பவர். சுக்கிரனின் அனுகூலம் இருந்தால் அனைத்து வெற்றிகளும், அதிகாரமும் வந்து சேரும். மனதில் நினைத்த காரியத்தை நிறைவேற்றிக்கொள்ள சுக்ர ப்ரீத்தி தானம் மேற்கொண்டால் கை மேல் பலன் வந்து சேரும்'' என்றார்.

ஸ்டாலின் சுக்ர ப்ரீத்தி தானத்தை எதற்காகச் செய்கிறார்? அதனால், அவருக்கு என்னவிதமான நன்மைகள் கிடைக்கும் என்று பிரபல ஜோதிடர் ஒருவரைத் தொடர்புகொண்டு பேசினோம். `தன் பெயரை வெளியிட வேண்டாம்’ என்ற வேண்டுகோளுடன் அவர் பேசினார்...

Sukra Preethi thanam

``ஸ்டாலினுடைய ஜாதகத்தை வாக்கியப் பஞ்சாங்கப்படி கணிக்கும்போது, லக்னாதிபதியாக இருக்கும் ஸ்ரீ சனி பகவான் பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். ராசி நாதனாகிய ஸ்ரீ சூரிய பகவான் லக்னத்தில் புதன் பகவானுடன் சேர்ந்திருப்பது அபரிமிதமான அனுகூல கிரக அமைப்பாக இருக்கிறது. 

தன, வாக்கு, குடும்ப ஸ்தானாதிபதியும், லாப ஸ்தானாதிபதியுமான ஸ்ரீ குரு பகவான் மூன்றாவது ஸ்தானத்தில் ஸ்ரீ சுக்கிர பகவானோடு சேர்ந்திருக்கிறார். கேந்திர ஸ்தானாதிபதியான ஸ்ரீ சுக்கிர பகவான் மறைவு ஸ்தானத்தில் இருக்கிறார். குடும்ப ஸ்தானாதிபதியாக இருக்கக்கூடிய ஸ்ரீ குரு பகவானோடு சதுர் கேந்திர ஸ்தானாதிபதியாக இருக்கக் கூடிய ஸ்ரீ சுக்கிர பகவானுக்குப் ப்ரீத்தி செய்யும்போது கூடுதல் கிரக பலத்தைப் பெற முடியும். 

கூடுதல் கிரக பலத்தைப் பெறுவதற்காக சுக்ர ப்ரீத்தி தானம் செய்யப்படுகிறது. இந்த ஜாதகத்தில் குரு பகவானும் செவ்வாய் பகவானும் பரிவர்த்தனை பெற்றிருப்பது கூடுதல் சிறப்பைக் கொடுக்கிறது. இந்த தானம் மூலம் கிடைக்கும் சுக்கிரனின் அனுகூலம் அவருக்கு அரசியல்ரீதியாக வெற்றி தேடித் தரும்.’’  

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்