திருவாரூர் சரஸ்வதி கோயிலில் கும்பாபிஷேகம்..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிப்பு

தமிழகத்திலேயே சரஸ்வதி கடவுளுக்கென தனிக்கோயில் கொண்டுள்ள கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

கும்பாபிஷேகம்

தமிழகத்திலேயே திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் சரஸ்வதிக்கென தனிக்கோயில் அமைந்துள்ளது. இந்த அம்மனை ஒட்டக்கூத்தர் தனக்கு கவிபாடும் திறமை வேண்டி வழிபட்டதாகவும், ஒட்டக்கூத்தரின் வழிபாட்டையடுத்து சரஸ்வதி அம்மன் அவரை வரகவி ஆக்கினார் என்றும் அதற்காகவே ஒட்டக்கூத்தரின் திறமையைப் பாராட்டி சரஸ்வதி அம்மன் அருள் புரிந்த ஊரை கூத்தனூர் என தஞ்சையை ஆண்ட இரண்டாம் குலோத்துங்க சோழன் பெயரிட்டதாகவும் வரலாறுகள் சொல்லப்படுகின்றன.

இதுபோன்ற பல சிறப்பு வாய்ந்த கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோயிலுக்கு, கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. இதற்காக  யாகசாலை பூஜைகள் கடந்த 24-ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கின. தொடர்ந்து 8 கால யாக சாலை பூஜைகள் நிறைவடைந்து காலை 9 45 மணி அளவில் புனித நீரை வாத்தியங்கள் முழங்க எடுத்து வந்து கோயில் கோபுரங்கள், விமானங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 10.30 மணி அளவில் மூலவர் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தில் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தைக் கண்டு ரசித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!