சிவனொளி சித்தர் பீடத்துக்கு திருக்குட நீராட்டுவிழா!

Sithar

நாகை மாவட்டம், சீர்காழி அருகே மாதானம் கிராமத்தில் அருள்மிகு பெரியநாயகி உடனாகிய பசுபதீஸ்வரர் என்கிற காளநாதர் திருக்கோயில் உள்ளது.  இதில் அமைந்துள்ள சிவனொளி சித்தர் பீடத்துக்கு திருக்குட நீராட்டு விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.  

சிவனொளி சித்தர்

14-ம் நூற்றாண்டின் மத்தியில் காசியிலிருந்து தென்நாடு நோக்கி பல தலங்களைத் தரிசித்தும், அங்கெல்லாம் தவம் செய்தும் வந்த சித்தர் ஒருவர், மாதானம் காளநாதரின் மேல் அதீதப் பக்தி கொண்டு அடர்ந்த காடாக இருந்த இக்கோயிலில் அமர்ந்து தவம் செய்தார். அப்போது இரவு நேரத்தில் தவ ஆற்றலால் அவரது உடலிலிருந்து தெய்வீக ஒளி வீசியது. அதைக் கண்ட மக்கள் பக்திப் பரவசமடைந்தனர். அவ்வொளியின் மத்தியில் சித்தர் சிவரூபமாக இப்பதைக் கண்டு தரிசித்த மக்கள் அன்று முதல் அவரை சிவனொளி சித்தர் என்று அழைத்தனர்.

சிவனொளி சித்தர் தவம் களைந்து எழுந்தபோதெல்லாம் அப்பகுதி மக்களின் தீராத நோய்களையும், துன்பங்களையும் வெறும் மணலைக் கொடுத்து அருள் பாலித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. அவர் தவம் செய்து சமாதியில் மூழ்கிய இடத்தில் புதிதாக சிவனொளி சித்தர் பீடம் அமைக்கப்பட்டு, அதற்கு திருக்குட நீராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சிவபுராணம் பாடல் நிகழ்ச்சியும், சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது.  இதில் அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!