ஆடிமாத ராசிபலன் மேஷம் முதல் கன்னி வரை 6 ராசிகளுக்கான ராசிபலன் #Astrology

ஆடி மாத ராசிபலன் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 16 வரை மேஷம் முதல் கன்னி வரை 6 ராசிகளுக்கான ராசிபலன் அதிர்ஷ்டக் குறிப்புகள் மற்றும் எளிய பரிகாரங்களுடன் தந்திருக்கிறோம்.

ஆடிமாத ராசிபலன் மேஷம் முதல் கன்னி வரை 6 ராசிகளுக்கான ராசிபலன் #Astrology

ராசி

மேஷம்மேஷம்:

மேஷராசி அன்பர்களே!

4-ல் சூரியன், புதன்;  5,6-ல் சுக்கிரன்; 7-ல் குரு; 9-ல் சனி(வ); 10-ல் செவ்வாய், கேது; 4-ல் ராகு

இந்த மாதம் முழுவதும் குருபகவானால் முன்னேற்றம் ஏற்படும். மாத முற்பகுதியில் சுக்கிரன் பல நன்மைகளை அளிப்பார்.  புதனால் பொருளாதார வளம் மேம்படும். மேலும் அவர் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கச் செய்வார். மேஷராசி அன்பர்களுக்கு பல வகை களிலும் முன்னேற்றம் உண்டாகும்.

பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். லாபம் அதிகரிக்கும். மனதில் தெய்விக பக்தி அதிகரிக்கும். மாதப் பிற்பகுதியில்  முயற்களில் சில தடைகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி, குதூகலம், நல்ல பணப்புழக்கம் காணப்படும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாக முடியும்.

கணவன், மனைவிக்கிடையே அன்பு, பாசம் மேலோங்கும். உறவினர் வருகையால் நன்மைகள் ஏற்படும். மாத இறுதியில் உறவினர்களிடம் பக்குவமாகப் பழகுவது நல்லது.தேவையில்லாத பேச்சினைத் தவிர்த்து ஒதுங்கி இருப்பது நல்லது. மாதப் பிற்பகுதியில் சிலருக்கு புத்தாடை, அணிகலன்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.

அலுவலகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவால் பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சிலருக்கு விரும்பிய இடத்துக்கு மாற்றல் கிடைக்கும். குரு சாதகமான இடத்தில் இருப்பதால் பின் தங்கிய நிலை மாறும். இதுநாள் வரை தடைப்பட்ட பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 

தொழில், வியாபாரத்தில் கடின உழைப்பு தேவைப்படும். அதற்கேற்ற வருமானமும் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் சந்திரனால் தடைகள் வரலாம். பண விரயம் ஆகலாம். மதிப்பு, மரியாதை எதிர்பார்த்தபடி இருக்காது. எதிர்பாராத பணவரவு கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும்.  அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும். நற்பெயர் , புகழுக்கு களங்கம்  ஏற்படாது. கடினமாக முயற்சி செய்தால் மட்டுமே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். 

மாணவர்கள் சிறப்பான நிலையை காணலாம். ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்படும். 

பெண்கள் குடும்பத்துடன் வெளியூரில் இருக்கும் புனித தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படக்கூடும். அக்கம்பக்கத்தினர் அனுசரணையுடன் நடந்துகொள்வார்கள். வேலைக்குச் செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். மாதப் பிற்பகுதியில் பிள்ளைகளால் பிரச்னை வரலாம். 

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜூலை 18, 20, 21, 27, 28, 29, ஆக 3, 4, 5, 9, 14
அதிர்ஷ்ட எண்கள்: 2, 3
சந்திராஷ்டம நாள்கள்: ஜூலை 22, 23, 24

பரிகாரம்: வெள்ளியன்று ராகுகாலத்தில் துர்கை வழிபாடு, செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம்.

 

ரிஷபம்ரிஷபம்:

3-ல் சூரியன், புதன்;  4,5 -ல் சுக்கிரன்; 6-ல் குரு; 8-ல் சனி(வ); 9 -ல் செவ்வாய், கேது; 3 -ல் ராகு

ரிஷபராசி அன்பர்களே!

இந்த மாதம் முழுவதும் பல நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.செயலில் வெற்றி, குடும்பத் தில் மகிழ்ச்சி, தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். தற்போது குருபகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 9-ம் இடத்து பார்வை சாதகமாக உள்ளதால் பிரச்னையை சமாளிக்கும் சக்தி உண்டாகும். பகைவர்களின் சூழ்ச்சி உங்களிடம் எடுபடாது. பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான வசதிகள் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். உறவினர்களிடம் சுமுக நிலை ஏற்படும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உதவி கிடைக்கும். மாத பிற்பகுதியில் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாகச் செயல்படுவர். மனதில் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்னை மறையும். பெண்கள் உதவிகரமாக இருப்பர். விருந்து, விழா என சென்று வருவீர்கள். உறவினர்களின் வருகையும், அவர்களால் மகிழ்ச்சியுடன் ஆதாயமும் கிடைக்கும். 

பணியாளர்களுக்கு சுக்கிரனால் பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். தனியார் துறையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். 

தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்களின் ஆதரவு வளர்ச்சிக்கு துணை நிற்கும். மாதப் பிற்பகுதியில் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்பு அமையும். வேலை இல்லாமல் இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம். வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். 

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசு வகையில் எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். 
மாணவர்களுக்கு சுமாரான நிலையே காணப்படும். சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. ஆனாலும் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். 

பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். 

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜூலை 20, 21, 23, 24, 30, 31, ஆக 1, 11, 16
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6
சந்திராஷ்டம நாள்கள்: ஜூலை 25, 26

பரிகாரம்: பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம், சனியன்று சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபம். துர்கைக்கு ராகுகாலத்தில் நெய்தீப வழிபாடு 

 

மிதுனம்மிதுனம்:

2-ல் சூரியன், புதன்;  3,4 -ல் சுக்கிரன்; 5-ல் குரு; 7-ல் சனி(வ); 8 -ல் செவ்வாய், கேது; 2 -ல் ராகு

மிதுனராசி அன்பர்களே!

இந்த மாதம் சுக்கிரன் மற்றும் குரு ஆகியோரால் முன்னேற்றம் ஏற்படும். 5ம் இடத்தில் இருக்கும் குருபகவான் குடும்பத்தில் குதூகலத்தைக் கொடுப்பார். திருமணம் போன்ற சுபகாரிய பேச்சு வார்த்தையில் சாதகமான முடிவு ஏற்படும். பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார். பெண்களால் மேன்மை உண்டாகும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்த செயலை வெற்றிகரமாக முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர் உதவிகரமாகச் செயல்படுவர். உங்களை புரிந்துகொள்ளாமல் விலகிச் சென்றவர்கள் உங்களைப் புரிந்துகொண்டு மறுபடியும் நாடி வருவார்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேரும் வாய்ப்பு ஏற்படக்கூடும். சமூகத்தில் செல்வாக்கு மேம்படும். மாதப் பிற்பகுதியில் குடும்பத்துடன் விருந்து, விழா என்று செல்லும் வாய்ப்பு ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை உங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவார். குறிப்பாக மாதப் பிற்பகுதியில் அவர்களால் அதிக அனுகூலம் பெறலாம். உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். சிலருக்கு புத்தாடை, அணிகலன்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். 

பணியாளர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வேலைப்பளு குறையும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். சக பெண் ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். மாத பிற்பகுதியில் அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும். 

தொழில், வியாபாரத்தில் நிர்வாகச் செலவு அதிகரிக்கும். சக வியாபாரிகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். புதிய தொழில்களில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது.தொழில் விஷய மாக வெளியூரில் தங்க நேரிடலாம். 
கலைஞர்களுக்கு முன்னேற்றம் ஏற்படக்கூடும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மதிப்பு, மரியாதை கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் விடாமுயற்சியும், கூடுதல் கவனமும் தேவை.  ஆசிரியரின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். 

பெண்களுக்கு அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும். வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜூலை 22, 23, 25, ஆக     1, 2, 3, 5, 9, 12
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
சந்திராஷ்டம நாள்கள்: ஜூலை 27, 28, 29

பரிகாரம்: ராகு கேதுவுக்கு அர்ச்சனை, சனியன்று மாலையில் சனீஸ்வரருக்கு எள்தீபம், செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம். 

 

கடகம்கடகம்:
1-ல் சூரியன், புதன்;  2,3 -ல் சுக்கிரன்; 4-ல் குரு; 6 -ல் சனி(வ); 7 -ல் செவ்வாய், கேது; 1 -ல் ராகு

கடகராசி அன்பர்களே!

இந்த மாதம் முழுவதும் நன்மை தரும் மாதமாகவே அமையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பகைவர்களின் சதியை முறியடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். ஆற்றல் மேம்படும். பொருளாதார வளம் மேம்படும். 
வீட்டில் அவ்வபோது சிறு சிறு பிரச்னைகள் ஏற்படலாம். கணவன் - மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உறவினர் வகையில் கருத்து வேறுபாடு வரலாம். சிலருக்கு வீண் அலைச்சலும், சோர்வும் ஏற்படும். சிலருக்கு வீண்அபவாதங்கள் ஏற்படலாம் மாத முற்பகுதியில் குடும்பத்தில் பொருளாதார வளம் பெருகும். அரசு வகையில் ஆதாயம் உண்டாகும். மாதப் பிற்பகுதியில் பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். புதுமணத் தம்பதியருக்கு குழந்தைபாக்கியம் கிடைக்கும். பெண்கள் உதவிகரமாக செயல்படுவர். உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். 

பணியாளர்களுக்கு திடீர் இடமாற்றம் ஏற்படும். வேலையில் கூடுதல் கவனமுடன் இருக்கவும். பணிச்சுமையை சந்திக்க வேண்டியதிருக்கும். அதே நேரம் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் போகாது. பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்வது நல்லது. மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும். 

தொழிலதிபர், வியாபாரிகளுக்கு மாத முற்பகுதியில் அரசின் சலுகை கிடைக்கும். வங்கிக் கடனுதவி எளிதாகக் கிடைக்கும். தொழில் விஷயமாக மற்றவர்களிடம் பிரச்னை செய்யவேண்டாம். சக வியாபாரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் ஆற்றல் ஏற்படும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும். மாத முற்பகுதியில் அவ்வப்போது மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.

மாணவர்கள் சிரத்தையுடன் படிக்க வேண்டியிருக்கும். ஆசிரியர்களின் அறிவுரையைப் பின்பற்றுவது நல்லது.

பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் பொறூப்புக்களை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். விருந்து, விழா என்று சென்று வருவீர்கள். 

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜூலை 18, 19, 25, 28, ஆக 3, 4, 5, 6,11, 15
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6
சந்திராஷ்டம நாள்கள்: ஜூலை 30, 31

பரிகாரம்: செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம், வியாழன்று தட்சிணாமூர்த்திக்கு வில்வ அர்ச்சனை

 

சிம்மம்சிம்மம்:

12 -ல் சூரியன்,  புதன்;  1,2 -ல் சுக்கிரன்; 3-ல் குரு; 5 -ல் சனி(வ); 6 -ல் செவ்வாய், கேது; 12 -ல் ராகு

சிம்மராசி அன்பர்களே!

முக்கிய கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் கவலை வேண்டாம். சில நன்மைகள் ஏற்படும். பொருளாதார வளம் மேம்படும். முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டாலும், அதை முறியடித்து வெற்றிக்கு வழி காண்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். தங்கள் செயல்பாடுகளால் உங்களுக்குப் பெருமை தேடித் தருவார்கள். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். பெண்களால் மேன்மை கிடைக்கும். புதுமணத் தம்பதிக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாழ்க்கைத்துணை  உங்கள் முயற்சிகளில் உதவியாக இருப்பர்.அவர்களால் முயற்சிகள் சாதகமாக முடியும். 

புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் உண்டாகும். உங்கள் வளர்ச்சிக்கு வாழ்க்கைத்துணை இருப்பார். புத்தாடை, ஆபரணங்கள் வாங்கப் பெறலாம். கணவர் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. 

பணியாளர்களுக்கு வேலைச்சுமை அதிகரிப்பதன் காரணமாக விரக்தியான மனநிலை ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். சிலர் இடமாற்றத்தைச் சந்திக்கலாம்.வேலையில் கூடுதல் அக்கறையுடன் இருக்கவும்.  மாதப் பிற்பகுதியில் நிலைமை சீராகும். 

தொழில், வியாபாரத்தில் வீண் விரயம் ஏற்படலாம். போட்டி வியாபாரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படலாம். ஆனால், மாதப் பிற்பகுதியில் வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடனுதவியும் எளிதாகக் கிடைக்கும். லாபம் படிப்படியாக அதிகரிக்கும்.      

கலைஞர்கள் பின்தங்கிய நிலையில் இருந்து விடுபடுவர். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். 

மாணவர்கள் விளையாட்டு, கலை, இலக்கியப் போட்டிகளில் பங்கேற்று பரிசும் பாராட்டும் பெறுவீர்கள். கல்வியில் சிறந்து விளங்குவர். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.

பெண்கள் குடும்பத்தினர் மத்தியில் சிறப்பிடம் பெறுவர். அக்கம்பக்கத்தினரின் அன்பும், ஆதரவும் உண்டாகும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். தடைப்பட்ட திருமணப் பேச்சில் நல்ல முடிவு கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதியும், திருப்தியும் கிடைக்கும். 

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜூலை 20, 21, 27, 28, 29, 30, ஆக 6, 7, 9, 15
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
சந்திராஷ்டம நாள்கள்: ஆக 1, 2

பரிகாரம்: ஞாயிறு ராகு காலத்தில் நாகருக்கு பாலாபிஷேகம், புதன்கிழமையில் பெருமாள் கோயிலில் நெய்தீபம்.

 

கன்னிகன்னி:

11 -ல் சூரியன்,  புதன்;  12,1 -ல் சுக்கிரன்; 2-ல் குரு; 4 -ல் சனி(வ); 5 -ல் செவ்வாய், கேது; 11 -ல் ராகு

கன்னிராசி அன்பர்களே!

இந்த மாதம் மகிழ்ச்சியான மாதமாக இருக்கும். அடுத்தடுத்து பல நன்மைகள் உண்டாகும். பல்வேறு இடையூறுகள் வந்தாலும் அவற்றைத் தகர்த்தெறிவீர்கள். குடும்பத்தில் பகை, பிரிவு ஏற்பட்டாலும் பெரிதாக பாதிப்பு எதுவும் ஏற்படாது.
 பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர் வகையில் உங்களைப் பற்றிய உயர்வான அபிப்பிராயம் ஏற்படும். அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் உண்டாகும். பணவரவு கூடும். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கலாம். 

குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும்  உண்டாகும். ஆடம்பர வசதிகள் பெருகும். பெண்கள் உதவிகரமாகச் செயல்படுவர். வீட்டில் மங்களகரமான சூழ்நிலை உண்டாகும். மாதப் பிற்பகுதியில் பொன், பொருள் சேரும். விருந்து, விழா என்று சென்று வரும் வாய்ப்பு ஏற்படும். மாத முற்பகுதியில் உறவினர் வருகையால் பிரச்னை வர வாய்ப்பு இருப்பதால் சற்று ஒதுங்கி இருக்கவும். 

பணியாளர்கள் வேலையில் திருப்தி காண்பர். சிலருக்கு விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். பதவி உயர்வுக்கு வாய்ப்பு உண்டு. வேலையின்றி இருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. அரசு ஊழியர்களுக்கு கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேறும். மாதப் பிற்பகுதியில் எதிர்பாராத நன்மை கிடைக்கும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.

தொழில், வியாபாரத்தில் அரசின் சலுகை கிடைக்கும். வங்கியில் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். புதிய தொழில் முயற்சி அனுகூலத்தைக் கொடுக்கும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் மறையும். குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்கலாம். லாபம் அதிகரிக்கும். 

கலைஞர்களுக்கு முயற்சியில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் மறையும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். 

மாணவர்கள் கல்வியில் வளர்ச்சி காண்பர். பாடத்தில் மட்டுமல்லாமல் விளையாட்டுப் போட்டி களிலும் வெற்றி காண்பர். 

பெண்கள் கணவரின் அன்பும், ஆதரவும் பெற்று மகிழ்வர். வேலைக்குச் செல்லும் பெண்கள் வளர்ச்சி காண்பர். எதிர்பாராத பதவி உயர்வு வந்து சேரும். சிலருக்கு புத்தாடை, அணிகலன்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜூலை 18, 19, 22, 23, 24, ஆக 1, 2, 9, 10, 11, 15
அதிர்ஷ்ட எண்கள்: 1, 9
சந்திராஷ்டம நாள்கள்: ஆக 3, 4, 5

பரிகாரம்: சனியன்று ஆஞ்சநேயருக்கு துளசி அர்ச்சனை, செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம், பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு நெய் தீபம்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!