வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (15/07/2018)

கடைசி தொடர்பு:06:00 (15/07/2018)

சுசீந்திரம் கோயிலில் உடைந்த சண்டிகேஸ்வரர் சிலை..! பக்தர்கள் அதிர்ச்சி

பிரசித்திபெற்ற சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் சண்டிகேஸ்வரர் சிலையின் கழுத்துப்பகுதி உடைந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பிரசித்திபெற்ற சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் சண்டிகேஸ்வரர் சிலையின் கழுத்துப்பகுதி உடைந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சண்டிகேஸ்வரர்

மும்மூர்த்திகளும் ஒருங்கே காட்சியளிக்கும் பிரசித்திபெற்ற தலம் சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவில். இந்தக் கோயிலில் மூலவரின் மிக அருகில் சண்டிகேஸ்வரர் சிலை அமைந்துள்ளது. அந்த சிலையின் கழுத்துப்பகுதி தனியாக உடைந்து இருக்கிறது. அது வெளியே தெரியாமல் இருக்க சிமெண்டு வைத்து பூசப்பட்டிருக்கிறது. பக்தர்கள் உன்னிப்பாக பார்த்து சிலை செப்பனிடப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். இதனால் அதிர்சி அடைந்த பக்தர்கள் பிரதிஸ்டை செய்யப்பட்டு நித்திய பூஜை நடந்துகொண்டிருக்கும் சாமி சிலை திடீரென உடைந்ததும், அதை அதிகாரிகள் சிமெண்டால் சரிசெய்து வைத்திருப்பது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சுசீந்திரம்

உடைந்துபோன சிலைக்கு தினசரி பூஜை செய்வது தெய்வ குற்றம் என பக்தர்கள் கூறியதை அடுத்து சண்டிகேஸ்வரர் சிலை மறைக்கப்பட்டதுடன், பூஜைகள் நிறுத்தப்பட்டன. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சண்டிகேஸ்வரர் சிலை உடைந்தது குறித்து பூஜாரி ஏற்கனவே கடிதம் எழுதிகொடுத்திருக்கிறார். புதிய சிலை செய்து வைப்பதற்காக கமிஷனருக்கு கடிதம் எழுதி இருக்கிறோம். இன்று பக்தர்கள் புகார் தெரிவித்ததை அடுத்து பூஜை நிறுத்தப்பட்டு, சுவாமி சிலை பூட்டி வைக்கப்பட்டுள்ளது. விரைந்து சிலை செய்தாலும் இன்னும் இரண்டு மாதங்களில் இதேபோன்று புதிய சிலை பிரதிஸ்டை செய்யப்படும்" என்றார். சுசீந்திரம் கோயிலில் சுவாமி சிலை உடைந்த சம்பவத்தை பக்தர்கள் அபசகுணமாக கருதுகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க