`சபரிமலையில் வழிபட பெண்களுக்கும் உரிமை உண்டு!' - உச்ச நீதிமன்றம் | Girls can enter sabarimala temple - Supreme court

வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (18/07/2018)

கடைசி தொடர்பு:17:22 (18/07/2018)

`சபரிமலையில் வழிபட பெண்களுக்கும் உரிமை உண்டு!' - உச்ச நீதிமன்றம்

'சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மறுப்பது' என்பது அரசியல் சட்டத்துக்கு எதிரான செயல் என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கருத்துத் தெரிவித்திருக்கிறது. சபரிமலையில் பெண்களை அனுமதிக்க கேரள தேவஸ்தானம் அனுமதி மறுத்துக்கொண்டிருந்த வேளையில் பெண்களுக்கும் உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

சபரி மலை

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்கள் மட்டுமே உள்ளே சென்று வழிபட அனுமதி உண்டு. பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டே வந்தது. இதை எதிர்த்து இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பு மற்றும் 5 பெண் வழக்கறிஞர்கள், 'ஐயப்பன் கோயிலுக்குள் சென்று வழிபட பெண்களை அனுமதிக்க வேண்டும்' என்று கோரி 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். கேரள அரசும், ``வழக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் மரபுகளை மாற்ற முடியாது. கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாது' என்று பதில் மனுவில் தெரிவித்திருந்தது.

இந்த வழக்கை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. அந்த அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி டி.ஒய்.சந்திரசௌத், 'சபரிமலைக் கோயிலில் பெண்கள் வழிபட அனுமதி மறுப்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. கோயிலைத் திறந்தால் யார் வேண்டுமானாலும் சென்று வழிபட முடியும். ஆண்கள் வழிபாடு செய்வதற்கு உரிமை உள்ளது போன்று பெண்களுக்கும் உரிமை உண்டு' என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார். பெண்களை சபரிமலையில் அனுமதிப்பது தொடர்பாக மாறி மாறி பதில் அளித்த கேரள அரசின் நிலைப்பாட்டையும் உச்ச நீதிமன்றம் கண்டித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க