வெளியிடப்பட்ட நேரம்: 17:43 (19/07/2018)

கடைசி தொடர்பு:18:52 (19/07/2018)

​அருள்மழை பொழியும் “அமைப்பு கோயில்கள்” - Exclusive Deal.

பண்டைய முறைப்படி சிவத் திருத்தலங்களில் மூலவரை வழிபடும் முன், கோயிலில் அமைந்துள்ள பிற தெய்வங்களை வழிபட்டுப் பின் கருவறையில் வீற்றிருக்கும் இறைவனை வழிபடுவது வழக்கமாக இருந்து வந்தது. இம்முறைப்படி முதலில் நந்தீஸ்வரரை வழிபட வேண்டும். அதன்பின் சோமாஸ்கந்தர், குரு பகவான், விநாயகர், முருகன், சண்டிகேசுவரர், நடராஜர், பைரவர், நவகிரகங்கள், இறுதியாக இறைவியையும் இறைவனையும் சேவிப்பது ஒரு அமைப்பு முறையாகும். நந்தீஸ்வரர் தொடங்கி சிவபெருமான் வரை முக்கிய தெய்வங்களாக விளங்கும் 10 கோயில்களை இந்த வரிசையில் வைத்து ‘அமைப்பு கோயில்கள்’ என வழங்குகின்றனர். அவை பின்வருமாறு:

நந்தீஸ்வரர் - மாசிலாமணீஸ்வரர் ஆலயம், திருவாவடுதுறை
கும்பகோணத்திலிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது.


அமைப்பு கோயில்களில் முதல் தலமான இங்கு நந்தீஸ்வரரை வழிபட்டு நம் பயணம் தொடங்க வேண்டும். தமிழகத்திலேயே உயரமான நந்தீஸ்வரர் இத்திருத்தலத்திலேயே காணப்படுகிறார். திருமூல நாயனாரின் அவதாரத் தலமும் இதுதான்.

சோமாஸ்கந்தர்- தியாகராஜர் ஆலயம், திருவாரூர்
கும்பகோணத்திலிருந்து சுமார் 43 கி.மீ. தொலைவில் உள்ளது.

 
தியாகராஜர் திருவாரூரில் பார்வதி தேவி மற்றும் முருகனுடன் அருள்புரிகிறார். ஆதலால், தியாகராஜர் ‘சோமாஸ்கந்தர்’ என்றும் அழைக்கப்படுகிறார். தியாகராஜப் பெருமானை வழிபட்டால் புத்திரப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

குருகோயில், ஆலங்குடி
கும்பகோணத்திலிருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில் உள்ளது.


 
நவகிரகங்களில் குரு பரிகாரத் தலமான இங்கு அருள்புரியும் தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் குருபகவான் மூலம் கிடைக்கும் அனைத்து விதமான நன்மைகளும் வந்து சேரும் மற்றும் அனைத்து விதமான ஆபத்துகளும் விலகி நன்மை உண்டாகும்.

விநாயகர் - வலஞ்சுழிநாதர் கோயில், திருவலஞ்சுழி
கும்பகோணத்தில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது.


 

இக்கோயிலில் உள்ள வலஞ்சுழி விநாயகர், ‘சுவேத விநாயகர்’ எனவும், வெள்ளைத் திருமேனியில் காட்சியளிப்பதால் வெள்ளை விநாயகர் எனவும் அழைக்கப்படுகின்றார். இவரை வழிபட நிறைவேறாமல் தேங்கி நிற்கும் காரியங்கள் அனைத்தும் நிறைவடையும்.

முருகன் - சுவாமிமலை
கும்பகோணத்திலிருந்து 11 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது.


 
அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடு சுவாமிமலை முருகன் கோயில். அலங்காரச் சிறப்புடைய சுவாமிநாதப் பெருமானை வணங்கினால் திருமண வரம், குழந்தை வரம், குடும்ப ஐஸ்வர்யம், கல்வி கேள்விகளில் மிகுந்த ஞானம் ஆகியவை கிடைக்கும்.

சண்டிகேசுவரர் - சத்தியகிரீஸ்வரர் ஆலயம்
கும்பகோணத்திலிருந்து 16 கி. மீ தொலைவில் அமைந்திருக்கிறது.


 
சண்டிகேசுவரரை வணங்காமல் சிவாலய வழிபாடு முழுமையடையாது. பெரும் சிவபக்திமானாக விளங்கிய  விசாரசருமனுக்கு, தனக்கு சமர்ப்பிக்கப்படும் அனைத்துக்கும் உரியவனாகும் சண்டிகேசுவரப் பதவியை சிவபெருமான் வழங்கிய திருத்தலம் இது.

நடராசர் கோயில் - சிதம்பரம்
கும்பகோணத்திலிருந்து 80 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது.


 
பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலமான இங்கு நடராசர் பிரதானமாக வணங்கப்படுகிறார். நடராசரை வழிபட்டால் தீராத நோய்கள் குணமாகும், மனநிம்மதி கிடைக்கும், உடல் தொடர்பான அனைத்து பிரச்னைகளும் சரியாவதோடு மகிழ்ச்சியான எதிர்காலம் அமையும்.

பைரவர் - தோணியப்பர் ஆலயம், சீர்காழி
கும்பகோணத்திலிருந்து 60 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது.


 
இத்தலத்தில் அருள்புரியும் அஷ்ட பைரவர்களை வணங்கினால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும், வீட்டில் குடிகொண்டிருக்கும் வறுமை, பகைவர்களின் தொல்லை, பயம், வேலையிடத்தில் இருக்கும் தொல்லை ஆகியவை விலகும்.

நவகிரகங்கள் - சூரியனார் கோயில்
கும்பகோணத்திலிருந்து 25 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது.


 
அமைப்பு முறைப்படி இத்தலம் நவக்கிரகத் தலமாகும். நவகிரகங்களில் முதன்மையான தலம் இதுவென்பதால், சூரிய பகவானை வணங்கி வழிபட நவகிரக தோஷம் மற்றும்  காரியத் தடைகள் விலகும்.

சிவன் அம்மன் - மகாலிங்கேஸ்வரர் ஆலயம், திருவிடைமருதூர்
கும்பகோணத்திலிருந்து 16 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது.


 
கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூரிலும் திருவிடைமருதூரிலும் மட்டுமே தாய் மூகாம்பிகைக்கு தனிச் சந்நிதி இருக்கிறது. கர்ப்பம் தரிப்பதில் ஏற்படும் பிரச்னைகள், சுகப்பிரசவம் போன்றவற்றுக்கு இந்தத் தலத்தில் அருள்புரியும் மூகாம்பிகையை வழிபடுகிறார்கள் பக்தர்கள்.​

​இந்தக்​ கோயி​ல்களுக்குச் செல்லும் பக்தர்களுக்கு...

இந்தத் தலங்களுக்குச் செல்ல விரும்பும் பக்தர்களுக்கு, கும்பகோணம் பாப்பீஸ் குழுமத்தின் ஓட்டல் விநாயகா மற்றும் பாப்பீஸ் எஸ்.இ.டி. ரெசிடென்ஸி ஆகிய இரு தங்கும் விடுதிகள் உதவுகின்றன. ஏ.சி. அறைகள், சைவ ரெஸ்ட்டாரன்ட், ஆலயத்துக்குச் செல்ல வாகன வசதி, கோயில்களின் பரிகாரம் மற்றும் வழிபாடுகளைப் பற்றி அறியவும், சந்தேகங்களைப் போக்கிக்கொள்ளவும் உள்ளூர் வழிகாட்டியின் உதவியையும் இவர்கள் பெற்றுத்தருகின்றனர். 

தகவல்களுக்கு:
பாப்பிஸ் கும்பகோணம்,
9894091113
crs@poppyshotels.com 

வாசகர்களுக்கு சிறப்பு சலுகை: இரண்டு இரவுகள் தங்குவோருக்கு, இரண்டாம் இரவுக்கான கட்டணத்தில் 50% சலுகையைத் தருகிறது பாப்பீஸ் ஓட்டல். விவரங்களுக்கு க்ளிக் செய்க...

நீங்க எப்படி பீல் பண்றீங்க