கலியநாயனார், கோட்புலி நாயனார் குருபூஜை தினம் இன்று!

விளக்கெரிக்க எண்ணெய் இல்லாததால் தன்னையே அரிந்து குருதி கொண்டு விளக்கெரித்த பெருமைமிகு தொண்டர் கலியநாயனார். திருவொற்றியூரில் வாழ்ந்த இவர், தியாகராஜ பெருமானுக்கு விளக்கேற்றித் தொண்டாற்றினார். செல்வம் முழுவதும் தீர்ந்த நிலையில் கூலிக்கு செக்காடி தொண்டினை செய்து வந்தார். ஈசனின் லீலை அப்போதும் தொடர, வறுமையால் மனைவியை விற்கவும் துணிந்தார். இறுதியில் விளக்கேற்ற எண்ணெய் இல்லாத நிலையில் வாழ்வது வீண் என்று கருதி ஈசனைத் துதித்தவாறு தம் சிரசினை அரிந்து விளக்கிட்டார். இவரின் தியாகத்தை மெச்சிய ஈசன் உடனே தோன்றி தம்முள் ஐக்கியப்படுத்திக் கொண்டார். கலியநாயனார் ஈசனின் திருவடி சேர்ந்த குருபூஜை தினம் ஆடி கேட்டை நட்சத்திர நாளான இன்று (ஜூலை 24 - ஆடி 8) அனுஷ்டிக்கப்படுகிறது.

குருபூஜை

கலியரைப் போன்ற இன்னொரு நாயன்மாரான கோட்புலி நாயனார் குருபூஜை தினமும் இன்றுதான். திருநாட்டியத்தான்குடியில் வாழ்ந்த கோட்புலி நாயனார் சிவனடியார்களுக்கு திருவமுது அளிக்கும் தொண்டினைச் செய்துவந்தார். ஒருமுறை இவர் போருக்குச் செல்லும்போது அடியார்களுக்காக பெருமளவு நெற்குவியலை வைத்து அதை யாரும் உபயோகிக்கக் கூடாது, அது ஈசனடியார்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று ஈசனின் மீது ஆணையிட்டுவிட்டுச் சென்றார்.  

நாயன்மார்

கடுமையான பஞ்சத்தால் அவரின் உறவினர்கள் அந்த நெல்குவியலை எடுத்துப் பசியாறினார்கள். திரும்ப வந்த கோட்புலி நாயனார், சினம் கொண்டு சிவத்தொண்டை கெடுத்த எல்லா உறவினர்களையும் வெட்டிக் கொன்றார். ஒரு சிசுவைக்கூட விட்டுவைக்காமல் சிவ ஆணையை மீறிய குற்றத்துக்காக அழித்தார். அப்போது ரிஷபாரூடராகத் தோன்றிய ஈசன் கோட்புலி நாயனார் மற்றும் அவரின் உறவுகளை தன்னுள் இணைத்துக்கொண்டு கயிலாயம் சேர்ந்தார். அந்த நாள் இன்றுதான் என்று புராணங்கள் கூறுகின்றன. கலியநாயனார், கோட்புலி நாயனார் கயிலை சென்ற இந்தப் புண்ணிய நாளில் (ஜூலை 24 - ஆடி 8) ஈசனின் திருவடிப் போற்றி நலம் பெறுவோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!