வெளியிடப்பட்ட நேரம்: 08:52 (24/07/2018)

கடைசி தொடர்பு:09:26 (24/07/2018)

மாங்கல்ய பாக்கியம், குழந்தை வரம் அருளும் ஸ்ரீகாளிகாம்பாள் தரிசனம்! #VikatanPhotoStory

மாங்கல்ய பாக்கியம், குழந்தை வரம் அருளும் ஸ்ரீகாளிகாம்பாள் தரிசனம்...

மாங்கல்ய பாக்கியம், குழந்தை வரம் அருளும் ஸ்ரீகாளிகாம்பாள் தரிசனம்! #VikatanPhotoStory

ண்ணிய எண்ணங்களை நிறைவேற்றுவதில் காமாட்சியம்மன்... தீயவர்களை அழிப்பதில் காளிகாம்பாள்... உலகை ஆள்வதில் அன்னை! தன்னை வணங்குபவர்களின் துயர் தீர்க்கும் கமடேஸ்வரி அன்னையின் ஆடி மாதத் திருவிழா... ஒரு புகைப்பட உலா! 

ஸ்ரீகாளிகாம்பாள்

அண்ட சராசரங்களையும் படைத்து, ஜகன் மாதாவாக, பரிபூரண ஞானப் பிழம்பாக, கருணையின் வடிவமாக விளங்கும் அன்னை ஸ்ரீகாளிகாம்பாள் கமடேஸ்வரர் கோயில் கோபுரங்களின் அற்புதக் காட்சி.

அம்மன் கோயில்

சரபப் பறவையை எதிர்த்து, நரசிம்மர் அனுப்பிய கண்ட பேரண்டப் பறவையை விழுங்கிய பிரத்யங்கரா தேவியை `தீவினைகள் யாவும் அகல வேண்டும்’ என்று பக்தர்கள் மனமுருகி வழிபடும் காட்சி.

ஆலமர்ச் செல்வர்

சகல உயிர்களையும் காக்கும் `ஆலமர்ச் செல்வர்' தட்சிணா மூர்த்தியைப் போற்றித் துதி பாடி வணங்கும் பக்தர்கள்.

ஸ்ரீவிஸ்வபிரம்மம்

மனதார வேண்டிக்கொண்டால் தலையெழுத்தை மாற்றி எழுதும் ஸ்ரீவிஸ்வபிரம்ம சந்நிதியின் கோபுரம் விளக்கொளியில் மின்னும் காட்சி.

பக்தர்கள்

மாங்கல்ய பாக்கியம், குழந்தை வரும் அருளும் அன்னை ஸ்ரீகாளிகாம்பாளை வழிபடச் செல்லும் பக்தர்கள்.

அம்பிகை பக்தர்கள்

'ஆணவம், மாயை, கண்மம் ஆகிய மூன்று மலங்களையும்  அழித்து அருளும் நின்போல; அன்னை  நின்றனன் கருணைக்கெல்லை அளவிடப் போமோ?' என்று அன்னையின் புகழ் பாடியபடி காளிகாம்பாள் தேவியின் தரிசனம் பெற வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்.

முருகன்

தனிச் சந்நிதியில் வள்ளி தெய்வானையுடன் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் கருணையே வடிவான முருகப் பெருமானை வழிபட்டுக்கொண்டிருக்கும் மூதாட்டி.

பிள்ளையார்

`பிறவிப் பிணி நீக்கி; இன்பம் பெருக வைக்கும்' அறுகம்புல் மாலை அணிந்தபடி அருள் புரியும் விநாயகப் பெருமான்.

அம்மன் தரிசனம்

கொடிமரத்தை வணங்கிவிட்டு காளிகாம்பாள் அன்னையின் அருள் பெறுவதற்காகக் குழந்தையுடன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பெண்.

துர்கை அம்மன்

பக்தர்களின் துயர் நீக்கும் துர்கை அம்மனும், காயத்ரி தேவியும் தனிச் சந்நிதிகளில் அருள்புரிந்துகொண்டிருக்கும் அற்புதக் காட்சி.

பக்தர்கள்

`காலனைக் காலால் இடறிய பாதம் காளிநின தலையோ?' என்று பாடியபடி விளக்கேற்றிவிட்டு அன்னையின் தரிசனம் பெறுவதற்குச் சென்றுகொண்டிருக்கும் பெண்கள்.

பரங்கி விளக்கு

குழந்தை வரம் வேண்டி பக்தர்களால் பரங்கிக்காயில் ஏற்றப்பட்டிருக்கும் விளக்கு.

விமானம்

வராஹி மற்றும் சிவபெருமானை வழிபடும் அம்பிகையின் சிற்பங்கள் அமைந்திருக்கும் அன்னை ஸ்ரீகாளிகாம்பாள் சந்நிதியின் எழில்மிகு கோபுரக் காட்சி.

துர்கை வழிபாடு

இடர் நீக்கும் துர்கை அம்மனை பக்தர்கள்  வழிபட்டுக்கொண்டிருக்கும் காட்சி.

வீரபத்ர மாகாளி

மலர் மாலை சூடி ஸ்ரீவீரபத்ர சுவாமியும் மாகாளியும் பக்தர்களுக்கு அருள்பாலித்துக்கொண்டிருக்கும் காட்சி.

காளிகாம்பாள்


ஸ்ரீகாளிகாம்பாள் என்னும் பெரிய நாயகியுடன் லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் பக்தர்களுக்கு அருள்புரியும் காணக் கிடைக்காத எழில்மிகு காட்சி.

துர்கை அம்மன்

ஸ்ரீ துர்கை அம்மனின் அருள் பெறுவதற்காக பயபக்தியுடன்  வரிசையில் நிற்கும் பக்தர்கள். 

காளிகாம்பாள்

வெள்ளி கிரீடம் சூடிய, பட்டாடை அணிந்துள்ள,  மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அன்னை ஸ்ரீகாளிகாம்பாள் தேவியின் திருக்காட்சி...

 

 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்