இன்றைய சூரிய வழிபாட்டுத் தினத்தை சூரிய நமஸ்காரம் செய்து துவங்குங்கள்!

நவக்கிரகங்களின் முதல்வன் என்றழைக்கப்படும் சூரியனை வணங்கினாலே மற்ற நான்கு கிரகங்களை வணங்கிய பலன் கிடைக்குமாம்.

உலகத்தின் முதல் ஜோதியான சூரியனை வழிபடும் நாள் இன்று. சூரிய வழிபாடு என்பது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல, ஆரோக்கியமும் இணைந்தது என்பதை உணர்ந்த ஆதிகால மக்கள் சூரிய வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்திருக்கிறார்கள். வேதங்கள் இறைவனாக சூரியனையேக் குறிப்பிடுகின்றன. உலக உயிர்களுக்கெல்லாம் ஆற்றலையும், உணவையும் அளிப்பவன் சூரியன். சூரியனே நீருக்கு ஆதார சக்தி என்றெல்லாம் வேதங்கள் சூரியனைப் போற்றுகின்றன. கீதையில் கிருஷ்ணபரமாத்மா ‘ஜோதிகளில் தாம் சூரியனாக இருப்பதாக' அருளுகிறார். நவக்கிரகங்களின் முதல்வன் என்றழைக்கப்படும் சூரியனை வணங்கினாலே மற்ற கிரகங்களை வணங்கிய பலன் கிடைக்குமாம். அன்ன ஆகாரமின்றி வாழ்ந்த ரிஷிகளும் சித்தப்புருஷர்களும் சூரிய ஆற்றலையே தங்கள் உணவாகக் கொண்டனர் என ஆன்மிக நூல்கள் தெரிவிக்கின்றன. 'சூரிய ஒளியே ஆன்ம உயிரை  வளர்க்கும் திவ்ய அன்னம்' என்று வியாசர் குறிப்பிட்டுள்ளார்.

சூரிய நமஸ்காரம்

நாள்தோறும் சூரிய நமஸ்காரம் செய்பவர்கள் ஆரோக்கியமாகவும், உயர்ந்த நிலையில் இருப்பதையும் கண்டிருக்கலாம். சூரிய நமஸ்காரம் உடற்பயிற்சி, யோகா, தியானம் என்பதைத் தாண்டி அது வழிபாடு என்பதையும் உணர்ந்து பக்தியோடு செய்வது நல்லது. இன்றைய சூரிய வழிபாட்டு தினத்தை சூரிய நமஸ்காரத்தோடு துவக்குங்கள். பின்னர் ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம், சூரிய காயத்ரி மந்திரம் படித்து அல்லது பாராயணம் செய்து வழிபடலாம். கோதுமை பலகாரங்களை பிரசாதமாக படைத்து சூரியனை பிரார்த்திக்கலாம். நவகிரக சந்நிதியில் சூரியனுக்கு விளக்கிட்டு வணங்கலாம். ஆயிரம் கதிர்களுடன் கண்கண்ட தெய்வமாக ஒளிவீசும் சூரிய தேவனைப் போற்றி நலமும் வளமும் பெறுவோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!