வள்ளிப்பிராட்டியை முருகப்பெருமான் கைப்பிடித்த புண்ணியத்தலம் வள்ளிமலை... ஓர் உலா! #VikatanPhotoStory

வள்ளிமலையின் அழகு மற்றும் புராதன சின்னங்கள் பற்றிய புகைப்பட கண்காட்சி கட்டுரை.

வள்ளிப்பிராட்டியை முருகப்பெருமான் கைப்பிடித்த புண்ணியத்தலம் வள்ளிமலை... ஓர் உலா! #VikatanPhotoStory

ள்ளிக்குற மகளின் உள்ளம் கவர்ந்த நாயகன் முருகப்பெருமான் வீற்றிருக்கும் வள்ளிமலையின் அடிவாரக் கோயில் கோபுர நுழைவு வாயில். அழகு முருகனை, மாலவன் மருகனைத் தொழுவோம்.

முருகன் கோயில்

வள்ளிமலை முருகப்பெருமானின் சந்நிதி. வள்ளி பெருமாட்டியை  முருகப்பெருமான் மணந்த தலம் இது என்பதால் திருமண விசேஷத் தலமாக உள்ளது.

மலை முருகன்

மலை அடிவாரத்தில் காணப்படும் திருக்குளம். `சரவணப்பொய்கை' அல்லது `ஞான தீர்த்தம்' என்று பக்தர்களால் கொண்டாடப்படும் இந்தத் திருக்குளத்தில் நீராடினால் தெளிவான சிந்தனையும் ஞானமும் கிடைக்கும்.

சரவணப்பொய்கை

வள்ளிப் பெருமாட்டியின் திருக்கோயில். இங்குதான் வள்ளிப்பிராட்டி திருமாலை வணங்கி வழிபாட்டு வந்தார் என்றும் அதனால் இந்தச் சந்நிதியில் வைணவ சம்பிரதாயப்படி பெருமாள் பாதம் பதித்த சடாரி பக்தர்களின் தலைகளில் வைக்கப்படுகிறது. 

வள்ளி  சந்நிதி

வள்ளிமலை நாயகி நின்ற கோலத்தில் வலக் கரம் அபயம் காட்ட, இடக் கரத்தை பறவைகளை விரட்டப் பயன்படும் கவணை ஏந்தி காட்சிதருகிறார்.

வள்ளி  சந்நிதி

மலைக் கோயிலுக்கு செல்லும் வழி. நெட்டுக்குத்தாக ஓங்கி உயர்ந்து காணப்பட்ட அந்த மலைப் பாதை பல சித்தர்களின் சமாதிகள், தெய்வ சந்நிதிகளைக்கொண்டிருக்கிறது.

மலைப்பாதை

கந்தனைப் பாடி காலமெல்லாம் களிப்புற்ற அருணகிரிப் பெருமானின் ஆலயம். இது 300 சாதுக்கள் உறையும் உறைவிடமும்கூட.

அருணகிரிநாதர் சந்நிதி

மலைமீதுள்ள வள்ளிமலை முருகப்பெருமான் ஆலய நுழைவு தோரண வாயில். ஆறு முகங்களும், பன்னிரு கரங்களும்கொண்ட முருகப்பெருமான் வள்ளிக்கு அருளாசி செய்யும் காட்சி.

வள்ளிமலை

கருவறைச் சிற்பமாக வள்ளிப் பெருமாட்டி. வலது கரம் அபய முத்திரை காட்ட, இடது கரம் கவணைத் தாங்கி இருக்கிறது. அருள்வழியும் நேத்திரங்களை தரிசித்து அருள் பெறுவோம்!

வள்ளிப்பிராட்டி

வள்ளிமலை முருகப் பெருமானின் சந்நிதிக்கு இடப் புறத்தில் ஈசன், சக்தி, அருணகிரிநாதர், வீரபாகு உள்ளிட்ட நவவீரர்கள் காட்சிதருகிறார்கள்.

முருகப்பெருமான் கருவறை

சங்கு வடிவில் காட்சிதரும் மலை மீதுள்ள வள்ளிமலை முருகப்பெருமான் கோயில் வெளிப்புறத் தோற்றம். 

மலை திருக்கோயில்

மலை கோயிலுக்கும் மேலே ஆஸ்ரமம், வள்ளி சுனை செல்லும் அழகிய வனப்பாதை.

மலை காடு

மலை மீது அருளும் பொங்கியம்மன் சந்நிதி. `வள்ளி பெருமாட்டியின் அம்சமே  பொங்கியம்மன்’ என்றும், `இவளே வள்ளிமலையின் காவல் நாயகி’ என்றும் வணங்குகிறார்கள்.

பொங்கியம்மன்

வள்ளி சுனையின் அழகுக்  காட்சி. இதனருகே வள்ளியம்மை மஞ்சள் குளித்த பாறையும் உள்ளது. 

வள்ளி சுனை

மலை உச்சியில் அருளும் ஸ்ரீமல்லிகார்ஜுனர். வள்ளியை மணக்க வந்த வேலனுக்கு அருளாசி வழங்கிய மகாதேவர்.

ஸ்ரீமல்லிகார்ஜுனர்

ஸ்ரீமல்லிகார்ஜுனர் வீற்றிருக்கும் நான்கு கால் மண்டபம். அருகே ஓர் அழகிய சுனை.

ஸ்ரீமல்லிகார்ஜுனர் சுனை

வள்ளிமலை ஆஸ்ரமத்தில் காட்சியருளும் முருகப்பெருமான். அருகே அழகிய வடிவேல்.

வடிவேல்

அல்லி பூத்து அழகு குலுங்கும் சுனை. வள்ளிமலையின் பிரமாண்ட யாழ் அழகில் இயற்கை கொஞ்சி விளையாடுகிறது.

அல்லி சுனை

பாறைகளில் வடித்த படிகளும் சிறு சிறு சந்நிதிகளும் என வள்ளிமலையே தெய்வலோகம்போலக் காட்சியளிக்கிறது.

மலை அழகு

வள்ளிமலையில் காணப்படும் சமண சமய சிற்பங்கள். குகையின் இருளில் அமைதி வடிவில் சமண சமய தீர்த்தங்கரர்.

சமண சிற்பங்கள்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!