திருச்சானூர் கோயிலில் பக்தர்கள் வசதிக்காக வி.ஐ.பி பிரேக் தரிசனத்துக்கு நேரக் கட்டுப்பாடு | In Thiruchchanur Temple, there is time schedule for V I P break darsan

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (31/07/2018)

கடைசி தொடர்பு:21:20 (31/07/2018)

திருச்சானூர் கோயிலில் பக்தர்கள் வசதிக்காக வி.ஐ.பி பிரேக் தரிசனத்துக்கு நேரக் கட்டுப்பாடு

திருப்பதி வேங்கடேச பெருமாள் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வாடிக்கையான ஒன்று. அதிலும் குறிப்பாக சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் காத்திருக்கும் வேளையில், திடுமென 'வி.ஐ.பி பிரேக் தர்ஷன்' என்று சொல்லிவிட்டால், சுவாமி தரிசனம் செய்ய கூடுதலாக இரண்டு முதல் மூன்று மணி நேரம் பக்தர்கள் காத்திருக்க வேண்டி வரும். இதைப் போலவே திருச்சானூர் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மிகவும் சிரமப்பட்டனர். 

திருச்சானூர்

படம் உதவி: திருமலை திருப்பதி தேவஸ்தானம்

இதை முறைப்படுத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து, நாளை முதல் (ஆகஸ்ட் 1-ம் தேதி) திருச்சானூர் கோயிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்துக்கு காலை 11.30 மணி முதல் 12 மணி வரையிலும் இரவு 7.30 மணி முதல் 8 மணி வரையிலும் என நேர ஒதுக்கீடு செய்துள்ளது. மற்ற நேரங்களில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் இனி நடைபெறாது. விடியற்காலை 4.30 மணியிலிருந்து இரவு 9.30 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும். இந்தத் தகவலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க