வெளியிடப்பட்ட நேரம்: 16:19 (01/08/2018)

கடைசி தொடர்பு:15:50 (03/08/2018)

​சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் பரிகாரத் தலங்கள்! Exclusive Deal

உணவிலிருந்து எடுத்துக்கொள்ளப்படும் சர்க்கரை, ரத்த ஓட்டம் மூலம் எல்லா உடல் உறுப்புகளுக்கும் சரியான அளவுக்குச் செல்லாதபோது, இந்தநிலை நீரிழிவு நோய் அல்லது சர்க்கரை நோய் என கூறப்படுகிறது. ரத்த சர்க்கரையை சமன்படுத்த, கணையமானது இன்சுலின் ஹார்மோனை சுரக்கிறது; இன்சுலின் குறைபாட்டாலும் சர்க்கரை நோய் வருவதுண்டு. பொதுவாக 45 வயதுக்கு மேல் வரும் சர்க்கரை நோய், இளைஞர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு வரவும் வாய்ப்பு இருக்கிறது. பல உடல் உபாதைகளை வரவழைத்து உடலை சோர்வுறச் செய்யும் இந்நோய் ஜாதகத்தில் சுக்கிரன் மற்றும் குருபகவான் இருக்கும் நிலைகளைப் பொறுத்து வரக்கூடும் என்பதும் நம்பிக்கையாகும்.

இன்பமான வாழ்க்கைக்கு இன்னலைத் தரும் இந்நோயைப் போக்கி, பக்தர்களின் வாழ்வை மாற்றி தேக நலத்தை அருளும் 5 பரிகாரத் தலங்கள் இதோ:

 

வெண்ணி கரும்பேசுவரர் ஆலயம், கோயில்வெண்ணி
கும்பகோணத்தில் இருந்து 30 கி.மீ
இறைவன் - கரும்பேசுவரர்
அம்பாள் - சவுந்தர நாயகி
சிறப்பு - தேவார மூவரும் பாடிய தலம் இது.
பரிகாரம் - சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள், வெள்ளை சர்க்கரையும் ரவையும் கலந்த கலவையை வெண்ணி கரும்பேசுவரர் பிராகாரத்தில் போட்டு வலம் வர வேண்டும். அதை எறும்புகள் சாப்பிட்டு விடுவதால், சர்க்கரை காணாமல் போவதைப் போல, நம்முடைய சர்க்கரை நோயும் நீங்கி விடும் என்பது நம்பிக்கை.


அருள்மிகு சுத்த ரத்தினேஸ்வரர் ஆலயம், ஊட்டத்தூர் 
கும்பகோணத்தில் இருந்து 85 கி.மீ
இறைவன் - சுத்தரத்தினேஸ்வரர்
அம்பாள் - அகிலாண்டேஸ்வரி
சிறப்பு - உலகின் அனைத்து தீர்த்தங்களும் ஊற்றெடுத்த ஊர் இது.
பரிகாரம் - சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள், இங்கு ஈசனை வழிபட்டு வெட்டிவேர் ஊறிய தீர்த்தத்தைப் பருகினால் சர்க்கரை நோய் விலகும் என்பது ஐதீகம்.
 


அருள்மிகு வைத்தீஸ்வரன் ஆலயம், வைத்தீஸ்வரன் கோவில்
கும்பகோணத்தில் இருந்து 51 கி.மீ
இறைவன் - வைத்தீஸ்வரன்
இறைவி - தையல்நாயகி
சிறப்பு - செவ்வாய்க்கான பரிகாரத் தலம். இங்குள்ள முருகப்பெருமான் முத்துக்குமார சுவாமி என்ற பெயரில் விசேஷமானவர். 
பரிகாரம் - சகல நோய்களுக்கும் மருந்தாக இங்கு தரப்படும் திருச்சாந்து உருண்டை சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்துகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை.


அருள்மிகு பரசுநாதர் ஆலயம், முழையூர்
கும்பகோணத்தில் இருந்து 12 கி.மீ
இறைவன் - பரசுநாதர்
இறைவி - ஞானாம்பிகை 
சிறப்பு - திரிதியை நாள்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது
பரிகாரம் - உணவு தொடர்பான எந்த வியாதியையும் குணமாக்கும் ஈசன் இவர். முக்கியமாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டு அர்ச்சித்தால் நோய் குறைகிறது என்பது நம்பிக்கை.

 
அருள்மிகு மாரியம்மன் ஆலயம், நத்தம்
கும்பகோணத்தில் இருந்து 199 கி.மீ
இறைவி - மாரியம்மன்
சிறப்பு - சுயம்பு வடிவான தேவி இவள்.
பரிகாரம் - சர்க்கரை நோய் உடையவர்கள், மாரியம்மனை வணங்கி வழிபட்டு கரும்புத் தொட்டில் கட்டி கோயிலைச் சுற்றி வந்து வணங்கினால் நிவாரணம் பெறுவார்கள்.
இத்திருத்தலங்களுக்குச் சென்று, பிரார்த்தனைகளை நிறைவேற்றி இறைவன் அருளால் உடல் நலம் பெற்று சுகமான வாழ்க்கையை வாழ்வோம்!

சர்க்கரை நோய் பரிகாரத் தலங்களுக்குச்  செல்லும் பக்தர்களுக்கு...

இந்தத் தலங்களுக்குச் செல்ல விரும்பும் பக்தர்களுக்கு, கும்பகோணம் பாப்பீஸ் குழுமத்தின் ஓட்டல் விநாயகா மற்றும் பாப்பீஸ் எஸ்.இ.டி. ரெசிடென்ஸி ஆகிய இரு தங்கும் விடுதிகள் உதவுகின்றன. ஏ.சி. அறைகள், சைவ ரெஸ்ட்டாரன்ட், ஆலயத்துக்குச் செல்ல வாகன வசதி, கோயில்களின் பரிகாரம் மற்றும் வழிபாடுகளைப் பற்றி அறியவும், சந்தேகங்களைப் போக்கிக்கொள்ளவும் உள்ளூர் வழிகாட்டியின் உதவியையும் இவர்கள் பெற்றுத்தருகின்றனர். 

தகவல்களுக்கு:
பாப்பிஸ் கும்பகோணம்,
9894091113
crs@poppyshotels.com 
வாசகர்களுக்கு சிறப்புச் சலுகை: இரண்டு இரவுகள் தங்குவோருக்கு, இரண்டாம் இரவுக்கான கட்டணத்தில் 50% சலுகையைத் தருகிறது பாப்பீஸ் ஓட்டல். விவரங்களுக்கு கீழே உள்ள படிவத்தை பூர்த்திசெய்க...
 

விவரங்களைப் பெற

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க